0,00 INR

No products in the cart.

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…
 பகுதி – 4

ந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே பாடலை ஒட்டி பாடுவது போல் இருக்கும். ஆங்கில இசையில் counterpoint என்ற முறையில் இசைக்கப்பட்டது. counterpoint first used in Indian songs இதுவே!

 இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு“…

இதெல்லாம் அடுத்த ஜென்மம் வரை நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கக் கூடியது. இந்த படம் வெளியானபோது செய்தித்தாள் விளம்பரங்களில் இளையராஜா “இசை ராஜா”வாகிறார் என்றே விளம்பரப்படுத்தப்பட்டதாம்.. அந்த அளவிற்கு இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

ஆம் நேயர்களே! இந்த வாரம் மங்கையர் மலர் விவித பாரதியில் நாம் கேட்க விருக்கும் பாடல்… 1978 ஆம் ஆண்டு திரு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘சிட்டுக்குருவி’ படத்தில் வாலி அவர்கள் எழுதி இளையராஜா இசையமைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுசிலாம்மா சேர்ந்து பாடிய பாடல்  “என் கண்மணி என் காதலி இளமாங்கனி…” என்ற பாடல்தான் என்பதை யூகித்து இருப்பீர்கள்! ஒரு பேருந்தின் தினசரி நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப் பட்டிருக்கும் இந்தப்பாடல், இலங்கை வானொலியின் ஆஸ்தான பாடல். பேருந்தின் ஹாரன், நடத்துனரின் விசில் சத்தத்தையும் இசையாய் கோர்த்திருப்பார் இசைஞானி.

இளையராஜா அவர்களும் வாலியும் சேர்ந்து கலக்கிய  பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் இசையமைத்தது குறித்து இளையராஜா அவர்கள் ஒரு பேட்டியில் விவரித்து இருந்தார்.

கவிஞர் வாலி அவர்களை இரவு நேரம் என்று பாராமல்  அழைத்து, சிச்சுவேஷனை சொல்லி பாடல் எழுதச் சொல்ல, வாலி அவர்களோ  ட்யூனை வாசிக்கச் சொல்லிக்கேட்டாராம். இவர் இசைத்துக் காட்டியவுடன் ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா? …எப்படி சரிவரும்’ என்றாராம் வாலி. அப்போது இளையராஜா அவர்கள், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதனதன் தனித் தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல் இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றாராம்.

பதிலுக்கு வாலி அவர்கள் “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிறகு பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே? முதல்ல ஒரு சாம்பிள் பாட்டை சொல்லு” என்றாராம். உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினாராம். இசைஞானி. தான் ஒரு டியூனும் கங்கை அமரன் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினார்களாம்.

ஆண் பொன்
பெண் மஞ்சம்
ஆண் தான்
பெண் – அருகில்
ஆண்நீ
பெண்வருவாயோ?…

இப்படிப் பாடி… அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும்.  அதாவது ‘பொன்தான் நீ’ என்கிறான் ஆண். ‘மஞ்சம் அருகில் வருவாயோ’ என்கிறாள் பெண். இரண்டையும் சேர்த்துப் பாடும்போது’ பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ’? என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்’ என்று இசைஞானி விளக்க,  சரி’ எனக்கு புரிந்தது என்ற  வாலி கொஞ்சம் யோசித்து பிறகு மளமளவென்று அவருடைய பாணியில் இந்த பாடலை எழுதினாராம். பாடலை படித்து பார்த்த போது… இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும் மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாறி வாலி எழுதி இருந்தது… மிகவும் பிடித்துப் போயிற்றாம். வாலி அவர்களைக் கட்டி அணைத்துக் கொண்டாராம் இசைஞானி. என் கண்மணி” பாடலைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்.

என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்?
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?
உன் காதலி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன்?
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
என் மன்னவன் என்னைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?
உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்.
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ?…

இப்படி அழகாக இரண்டு அர்த்தம் வரும். கவிஞர் வாலி அவர்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் வரிகளை வாங்கிய இசைஞானியை போலவே விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாகப் பாடலை எழுதிய வகையில்  கவிஞர் வாலியும் ஒரு ‘கவிஞானி’தான்…

‘வாய்ப்பே இல்ல ஞானிகளா!” இப்படி ஒரு பாடல் இனி வருமா?? கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க! என்றென்றும்…

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

1 COMMENT

  1. அய்யோ … ! ஆதி ரை ,என்னவென்பது, நேரில் நின்றால் தங்களைகட்டியனணத்துக் கொள்வேன். இந்த பாடலை நானும் .மறைந்த என்தோழி ராதிகாவும்,இலங்கை வாணொலியுடன் ரசித்து.. .ரசித்து …பாடிய அந்த நாட்களை
    மீண்டும் .நினைவூட்டியது தங்களது விமர்சனம் .வழக்கம் போல் பாடல் கலெக்ஷன் .செலக்ஷன் செம .வாழ்த்துகள். நன்றி

ஆதிரை வேணுகோபால்
Mrs Athirai Venugopal A successful homemaker with a passion for cooking. Athirai’s cooking recipes, supplementary cookbooks and articles are being published in leading Tamil women segment magazines. She has authored and published a cookbook titled ‘Healthy Children’s Recipes’. She has also hosted cookery shows in web channels. Athirai has her own you tube channel named ’Athirai’s Fusion Kitchen’ where she presents interesting and innovative cooking recipes & tips.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...