0,00 INR

No products in the cart.

பூமியை காக்க மங்கையர் மலர் வாசகீஸ் சொல்லும் யுக்திகள்!

உலக புவி நாளன்று ( ஏப்ரல் 22) மங்கையர் மலர் வாசகிகளிடம் எங்கள்  FB  பக்கத்தில், பூமியைக் காக்க கடவுள் உங்களுக்கு ஒரு வரம் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்களின் சுவாரசியமான பதில்கள் உங்களுக்காக…

நெகிழி இல்லாத உலகம் கேட்பேன்.  பருவ மழையை, சுத்தமான காற்றை, செழித்து வளரும் தாவரங்களை, சுத்தமான நீர்நிலைகளை வரமாக கடவுளிடம் கேட்பேன்.
– கலைமதி  சிவகுரு

புகையால் மாசுபடும் போக்குவரத்தை தடை செய்வேன். மிதிவண்டியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவேன். வீடுகள் தோறும் மின்சாரத்திற்காக சோலார் பேனல் கட்டாயமாக்குவேன். பூமி வெப்ப மாவதை தடுக்க அனைத்து வழிகளையும் பின்பற்ற ஆணையிடுவேன்.
-பவானி சேது

றைவா, மக்களின் மனங்களில் இயற்கை மீது அதிக ஈடுபாடு, பிறந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் பண்பும்,அதனை பாதுகாக்க விடா முயற்சியும் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உள்ளங்களில் உதயம் ஆக வேண்டிய வரத்தைத் தாருங்கள் என்று கேட்பேன்.
-உமா பார்வதி

ப்புவியில் இருக்கும் அனைத்து மாசுகளும் மாய மாக மறைய செய்து எப்போதும் தூய்மையாக இந்த புவி விளங்க வேண்டுமென வேண்டுவேன்.
-எஸ். சாந்தி

புவி கொடுக்கும் தண்ணீரை சேமித்து எல்லோருக்கும் கொடுப்பேன். தண்ணீருக்காக காசு வாங்க மாட்டேன் வாசலில் ஒரு தண்ணீர் பந்தல் அமைப்பேன். வீட்டில் வளரும் செடி கொடிகளுக்கு எல்லாம் அந்த தண்ணீர் ஊற்றிக் அவர்கள் சிரிப்பதைப் பார்த்து மகிழ்வேன்.
-உஷா முத்துராமன் 

மீண்டும் இந்த புனிதபூமியை உருவாக்கினாய் என்றால் அதில் நீ படைக்கும் மனித உயிர்கள் அனைவருக்கும் இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களை அழித்து தனது வாழ்வை வாழ்வாதரமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லா மனதைக்கொடுத்து படைக்க வேண்டும் இறைவா என பிராத்தனை செய்வேன்.
-சாந்தி ராஜ்குமார்

நிறைய மரங்கள் வளர்க்கவும், இருக்கும் மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கவும், பொதுவெளிகளில் குப்பைகளை எரிக்காமல் இருக்கவும், வருடத்தின் எல்லா நாட்களையுமே புவி நாளாகக் கருதி புவியைப் பாதுகாக்கவும் மக்கள் மனங்களில் நல்லெண்ணெங்களை விதைக்குமாறு வரம் கேட்பேன்.
-ஹேமலதா ஶ்ரீனிவாசன்

பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மக்காத பொருட்களை மக்கள் உபயோகிக்காமல் செய்து, தண்ணீரை வீணாக்காமல் , மழைநீரை சேமிக்க வழி செய்வேன். இயற்கைக்கு எதிரான கண்டுபிடிப்புகளைத் தடை செய்வேன்.
-ராதிகா ரவீந்திரன்

க்கள் அனைவரிடமும் Reduce, Reuse, Recycle, Restore என்பதை மனதில் பதியவைத்து வரும் தலைமுறைக்கு ஆரோக்யமான புவியை விட்டுச் செல்ல உறுதிஏற்க வைக்கவேண்டுமென வரம் கேட்பேன்.
-மகாலட்சுமி சுப்பிரமணியன்

லக புவி நாளான இன்று , நம் அனைவருக்கும் உண்ணும் உணவு முதல் அனைத்தையும் தரும் பூமி அன்னையின், உயிர் நாதமான மண்ணினை வளமானதாக்க , அதில் வாழும் நுண் உயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து, வளரும் இளம் தலைமுறைக்கு நல்ல ஆரோக்யத்தைத்தர, தேவையான வழிமுறைகளையும், விழிப்புணர்வையும் தந்து மண்ணின் வளம் காக்க வேண்டி வரம் அருள வேண்டுவேன்.
-பானு பெரியதம்பி

புவியைக் காக்க, ஓஸோன் லேயரில் ஓட்டை விழாமல் தடுக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எவ்வளவு மரங்கள் நட முடியுமோ, அவ்வளவு மரங்கள் புதியதாக நட்டு, அவற்றைப் பராமரிப்பேன். வீட்டை மட்டுமன்றி, சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.பூமித் தாயை தூய்மையாக வைத்துக் கொண்டு, சிரம் தாழ்த்தி வணங்குவேன்! எல்லா நாளும் புவி நாளே!
-ஜெயா சம்பத்

ழைநீரை வீணாகக் கடலில் கலக்க விடாமல் பூமிக்குள் இறங்கும்படி ஆங்காங்கு மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் செய்வேன். அதனால் பூமி வறண்டு வெடிக்காமல் நீர்ச்சத்துடன் இருக்கும். பசும் புற்களும் மரங்களும் வளர்ந்து , பூமி சோலையாக காட்சிதரும்.
-லலிதா பாலா

சீமை கருவேல மரங்களை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். சீமைக்கருவேல மரங்கள் நிலத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று நீரை உறிஞ்சி விடுவதால் அருகில் உள்ள ஏனைய தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் செய்து பிற தாவரங்களின் வளர்ச்சியை இது தடை செய்கிறது.

மழை இல்லாத காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றில் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இத்தாவரத்தின் ஆணி வேர் மட்டுமல்லாமல் பக்க வேர்கள் வலிமையானவை. எனவே மழைநீர் நிலத்தை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடை செய்கின்றன.

இத்தாவரம் மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுவேன்.
_சுதா திருநாராயணன்

டவுளை சிரம் தாழ்த்தி வணங்கி, ஐம்பூதங்களும்  சந்தோஷமாக வலம் வர வாழ்த்தி, இந்த பூமித்தாயை குளிர வைக்க, எங்கு நோக்கினும் பசுமையான மரம், செடி, கொடி, படர்ந்து தூய்மையான காற்றை மக்கள் சுவாசிக்க, நீர் வளம் பெருக வரத்தை கொடு. என்றும் பூமி வறட்சி அடையாமல் இருக்க அருளுங்கள் என கேட்பேன்.
-கணபதி லதா

ண்ணிற்குள்ளே செல்லும் மழை நீரை தடுக்கும் பாலிதீன் ஒரு பயங்கர சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணி எனவே கண்டிப்பாக அவற்றை தடை செய்ய வரம் கேட்பேன்.
-அன்பு பாலா

வீடுகள் தோறும் சோலார் பேனல் கட்டாயமாக்க அரசாங்கத்திற்கு உத்தரவிடுவேன்.
-சித்ரா குமார்

நிறைய மரங்கள் நடுவேன். இந்த பூமி குளிர்ச்சி அடைய என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.
-சாந்தி ஶ்ரீனிவாசன்

ரங்கள் செழித்து வளர்ந்து, தூய்மையான காற்றை மக்கள் சுவாசிக்க, மழை பொழிந்து மண் வளம் பெற, கொடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடு பட வரம் அருள வேண்டுவேன்.
-வாணி கணபதி

ரக்கன்றுகளை நட்டு நீர்வார்த்து வளர்த்திடுவேன். நிலத்தடி நீரை எடுக்கும் முறையைத் தடுத்திடுவேன்! ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் குழந்தைகளின் சாவை இதனால் தடுத்திடலாம்!
-வாணி கணபதி

காய்ந்து கொண்டிருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பசுமையாக்கும் முயற்சியை கையிலெடுப்பேன். சைக்கிள்களில் செல்பவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்குவேன். ஷாசேக்களுக்கு தடை போட்டு, அரைக்கிலோவிற்கு கீழ் வாங்கும் பொருட்களை காகிதப் பையில் போட்டு வாங்க கட்டளை போடுவேன். இதில் ஏதாவது ஒன்று நிறைவேறினாலும் பசுமையான பூமி தான்.
-கோமதி சிவாயம்

குழந்தைகள்‌தான் வருங்கால  செல்வங்கள்.‌ ஆகையால் நம் முன்னோர் எப்படி மரங்கள், நீர்நிலைகள், கோவில்கள் போன்றவற்றை பாதுகாத்தா ர்களோ,அது போன்ற  ஒரு நிலை மீண்டும் வரவேண்டுமென வரம் கேட்பேன்.
-ராஜலக்ஷ்மி கௌரிஷங்கர்

சுமையைப் பாதுகாப்பதாக …நீர்நிலைகளை தூர்வாரி தூய்மையாக வைத்துக் கொள்வதாக …. மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்துவதாக …

நெகிழி இல்லா தூய்மை உலகைப் படைப்பதாக…

சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக …

என எல்லாவற்றையும் செய்வதாக இறைவனிடம்

வாக்கு கொடுப்பேன் … பதிலுக்கு அவர் ஒரு வரம் தருவதாக இருந்தால் …

ஓசோனில் இதுவரை விழுந்த ஓட்டையை அவர் அடைத்து தரவேண்டும்

என்ன சரிதானே என் கோரிக்கை…
-தி.வள்ளி

சுற்றுச்சூழல் பாதுகாப்பது அவசியம் .  அதுகுறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வரம் கேட்பேன்.
-சரஸ்வதி துரைசாமி

லகின் எந்த மூலையில் மரம் வெட்டப்பட்டாலும், அதேபோல் ஒரு மரம் உடனடியாகத் தோன்றும் ஆற்றல் பூமிக்குள் தரும் வரத்தை இறைவனிடம் பெறுவேன்.
-ஶ்ரீ வித்யா பிரசாத் 

நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் இந்த ஐம்பூதங்களும் எங்களுக்கு தேவை. இது இல்லாமல் எங்களால் வாழ முடியாது. இவற்றைப் பாதுகாக்க எங்களுக்கு வரத்தைக் கொடு என்று கேட்பேன்.
-சாமுண்டீஸ்வரி

ப்போதும் பயனுடன் பசுமைமாறாத பூமியும் எந்த கோடையிலும் வற்றாத நீர் தலைகளும். சுத்தமான மக்களும் பூமியில் உலவ வேண்டும் என்ற வரத்தை கேட்பேன்.
-பத்மா முரளி

ற்றாத குளம், குட்டை, ஏரிகள், சுற்றிப் படரும் செடி கொடிகள், பசுமை போர்த்திய மலைகள், வயல்கள், பாடிக் களிக்கும் பறவைகள், கனி கொஞ்சும் மரங்கள், காற்றில் அசைந்து சாமரம் வீச சாலையோர செடிகள் , ஓடும் நதிகள்,  ஆடும் மயில்கள், எங்கும் பசுமை, எதிலும் பசுமை, பார்க்கப் பார்க்க பரவசமாய் … மனிதர்கள் எல்லாம் செயற்கைப் பொருட்களை புறம் தள்ளி இயற்கையைப் போற்றி வணங்கி, இயற்கையோடு இணைந்து இன்பமாக வாழும் வரம் கேட்பேன்.
-ஜெயலட்சுமி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...