0,00 INR

No products in the cart.

அன்பு வட்டம்!

நீங்க ஒ.டி.டி.ல வீட்டுல உட்கார்ந்து நிம்மதியா குடும்பத்தாரோட செலவில்லாமல் படம் பார்க்க விரும்புகிறீர்களா? இல்ல, தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே நண்பர்களோட சந்தோஷமா படம் பார்க்க விரும்புகிறீர்களா?
– தி.வள்ளி, திருநெல்வேலி
நான், தியேட்டர்ல கைமுறுக்கு, தட்டுவடை சாப்பிட்டுக்கிட்டே நண்பர்களோட / உடன் பிறப்புகளோட படம் பார்த்து லூட்டி அடிக்கிற ரகம்.

நமது, ‘கல்கி’ அலுவலக ஊழியர்கள் அனைவரும் மொத்தமா சேர்ந்து ஏவி.எம். ராஜேஸ்வரியில குதூகலமாக ரசித்த படம், ‘தசாவதாரம்.’ ‘உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு’னு பாடிக்கிட்டே ரசித்த அனுபவம் ஒரு லைஃப் டைம் மெமரி!

ஆனா இப்ப, கொண்டாடற அளவுக்குப் படம் வருவதில்லைங்கிறதாலும், கொரோனா மிரட்டுவதாலும், ஒ.டி.டி.யே வசதியாக இருக்கு! சமீபத்துல அப்படி நான் ஒ.டி.டி.ல மூணு படம் பார்த்தேன். ‘ஹோம்’ (மலையாளம்), செஹ்ரே (ஹிந்தி), ஆப்லா மானூஸ் (மராத்தி)… மூன்றுமே வித்தியாசமான கதைக்களத்தில் இருந்தது என் பாக்கியம்!

நானா படேகர் நடித்துள்ள, ‘ஆப்லா மானூஸ்’, தாங்களே முடிச்சு போட்டு, தாங்களே அவிழ்க்கும் சுவாரசியம் + புதுமையான திரைக்கதை.

செஹ்ரே (அமிதாப்பச்சன் நடித்துள்ளார்) மிகச் சுலபமாக ஊகிக்க முடியும் கதைதான் என்றாலும், பச்சை மிளகாய் கடித்த விறுவிறுப்பு… க்ளைமாக்ஸ் எதிர்பாராத அட!

‘ஹோம்’ – அவ்வளவு யதார்த்தம். நம்ப வீட்டுல ஏதாவது ஒரு இடத்துல கேமிரா வெச்சுக்கிச்சு எடுத்துட்டாங்களோன்னு சந்தேகம் வர்ற அளவுக்கு ஏதாவது ஒரு காட்சியிலயாவது நம்மை எப்படியோ கனெக்ட் செய்து விடுகிறது.

தியேட்டரோ, ஒ.டி.டி.யோ, டீ.வி.யோ ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் எப்ப கிடைக்கும் தெரியுமா? அதை நம்ப நட்பு வட்டாரத்துல, குடும்ப வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு, அதை அவங்களும் பார்த்துட்டு, ‘‘தாங்க்ஸ்… உன் ரசனையே ரசனை”ன்னு பாராட்டும்போதும்தான்!

பைதிபை, என்னோட செல்லப் பேரு என்ன தெரியுமோ?

சினி சுப்புடு! ஹி… ஹி…!

‘பிக்பாஸ்’ (5) பார்க்கும் பழக்கம் உண்டா மேடம்?
– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
மனுஷன்னா… ஐ மீன் மனுஷின்னா, ஏதாவது கெட்டப் பழக்கம் அஞ்சோ, பத்தோ இருக்கணுமில்லையா? அதுல ஒண்ணு, ‘பிக்பாஸ்’! கமலுக்காகப் பார்க்க ஆரம்பிச்சேன். அவரும் குறும்பும் குதூகலமுமாகத்தான் ஆரம்பிச்சாரு… அப்புறம் நைஸா அரசியல் பொடி தூவினாரு… அவரோட எதிர்பார்ப்பு, ‘புஸ்’ஸுன்னு போகவும், ஆழ்வார்பேட்டை ஆண்டவரோட மூஞ்சியே பேஸ்த்து அடிக்குது!

ஆங்க்ரே அந்த லட்சணம்னா, ஹவுஸ்மேட்ஸுங்க அதுக்கும் மேல! முதல் சில சிஸன்கள்ல, எல்லாருமே அப்பாவியா உள்ள வந்தாங்க. அதனால, என்ஜாய் பண்ணினோம். இப்ப எல்லாருமே ஸ்ட்ராட்ஜி செம்மல்களா, சேஃப் கேம் ஆடறாங்க…
வடிவேலுவ ஆங்கரா போடுங்க ஜி! டி.ஆர்.பி. பிச்சுக்கும்.

கிரிக்கெட்டின் புதிய புயல் வெங்கடேஷ் அய்யர்?
– வாசுதேவன், பெங்களூரு
இந்தோர் வாசின்னாலும், நம்ம தமிழ்ப் பையன்! என்னமா கலக்குறாரு! கொல்கத்தா அணியின் அவரோட ஆட்டம் போலவே, பேட்டியும் செம ட்ரென்டிங்!
வெங்கி தம்பி, ரஜினியின் மிகத் தீவிர ரசிகராம்! ‘‘ரஜினிகாந்த் சார்”னு சொல்லுங்கன்னு பேட்டியாளர்கிட்ட சொன்ன அழகே அழகு! ‘‘சூப்பர் ஸ்டாரின் படங்கள்ல வர்ற எல்லா பஞ்ச் டயலாக்கும் என்னோட வாழ்க்கைக்கு இன்ஸ்பிரேஷன்”னு சொன்னதோடு, பேட்டி கண்டவரை, ‘‘என் வழி தனி வழி, சீவிடுவேன்” என்றெல்லாம் சொல்ல வெச்சது செம ஜாலி.

‘‘சரி, கிரிக்கெட்டுல, ‘தலைவர்’ன்னா யாரு?”ங்கிற கேள்விக்கு, ‘‘தோனிதான் கிரிக்கெட் உலகத் தலைவர்”னு பதில் சட்னு வருது. பயபுள்ள… எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் வேற படிச்சுருக்காம்!

ரைட்டு…! அடுத்த ஏலத்துல அதிக விலை உனக்குதாம்பா வெங்கி!

சிறையில் இருந்தபடியே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாரே சாராய வியாபாரி ஒருவர்?
– நிர்மலா ராணி, சென்னை
மதுபான ஆலை முதலாளிகள் ஜெயிக்கும்போது, சாதாரண சாராய வியாபாரி ஜெயிக்கக் கூடாதா? என்னம்மா இது… நியாயமா பேசுங்கம்மா!

அலைக்கழிக்க வைத்த மசினக்குடி புலி…!
– மஞ்சுதேவ், பெங்களூரு
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே, இவ்வழக்கு விசித்திரமல்ல… வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல… நான் ஒரு புலி! எனக்கு நீங்கள் வைத்த பெயர் T23! என்னைச் சுட்டுப் பிடிக்கக் கூடாதுன்னு சொன்னதற்கு நன்றி… நாலுப் பேரைக் கொன்றேன்… ஆடு, மாடுகளைத் தின்றேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று… இல்லை… நிச்சயமாக இல்லை!

தமிழ்நாட்டில் முதுமலையில் பிறந்தேன். பிறக்க ஒரு காடு, பிழைக்க ஒரு காடு… புலிகளின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?

எங்கள் வசிப்பிடங்களில் நுழைந்து, எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்தீர்கள். பசியால் மெலிந்தேன், நலிந்தேன்… கடைசியில் ஊருக்குள் நுழைந்து என் பசியாற்றிக் கொண்டேன். இது தப்பா ஜட்ஜ் ஐயா?

‘ஆட்கொல்லி புலி’ என்கிறார்கள்… புலி கொலை செய்யுமா? வனத்துறை என்னை மிரட்டியது. பயந்து ஓடினேன்… கும்கி யானை துரத்தியது. மீண்டும் ஓடினேன்… மோப்ப நாய்கள் பயமுறுத்தின… ஓடினேன்… ஓடினேன்… காட்டின் எல்லைக்கே ஓடினேன்… அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்… 21 நாட்கள்… வாழ விட்டார்களா என்னை? விலங்குகளைக் கொன்று லிப்ஸ்டிக் முதல் காலணி வரை மனிதர்கள் ஏதேதோ செய்கிறார்கள். ஆனால், நாங்கள் பசிக்காக மட்டுமே கொல்கிறோம்.

என்னை வயிற்றுக்கு உணவு இல்லாமல் அலைய விட்டது யார் குற்றம்? பஞ்சம் வரவழைத்த வஞ்சகர்களின் குற்றம்! இக்குற்றங்கள் களையப்படும் வரை, T23களும் குறையப் போவதில்லை.

இப்போ நான், மைசூர் புலிகள் பாதுகாப்பு மையத்துல இருக்கேன்… ஜட்ஜ் ஐயா… என்னை மறுபடியும் காட்டுக்குள்ள விடச் சொல்லுங்க…

1 COMMENT

  1. அம்ம்ம்ம் ….அப்பாடா….பிளக் ஆன்ட் ஒயிட்ல…பராசக்தி படத்தினை கலைஞரையா வசனத்தில் சூப்பரா பார்த்த
    திருப்தியம்மா…..ஒரு வரி பிசகாமல் அருமையாக இருந்தது.
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...