0,00 INR

No products in the cart.

காரட் கேக்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– இந்திரா, ஸ்ரீரங்கம்

காரட் கேக்:
தேவையானவை : கோதுமை மாவு – 1 கப் (250 ml), பேகிங் பௌடர் – அரை டீஸ்பூன், பட்டை பொடி – கால் டீஸ்பூன், துருவிய காரட் – அரை கப், பனை வெல்லம் (தூள்) – அரை கப், தயிர் – முக்கால் கப், எண்ணெய் (கடலை) – கால் கப், பால் – மூன்று டேபிள் ஸ்பூன், வெண்ணிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன். டூட்டி ஃப்ருட்டி மற்றும் நட்ஸ் நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்.

செய்முறை : கோதுமை மாவோடு பேகிங் பௌடர் மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்றாக சலித்துக்கொள்ளவும். பனை வெல்லப் பொடி மற்றும் எண்ணெயை நன்றாகக் கலந்து வைக்கவும். இரண்டும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும். தயிரில் ஒரு சிட்டிகை பேகிங் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொப்பளமாக வரும். பிறகு எண்ணெய், பனை வெல்லக் கலவையை தயிருடன் சேர்த்து நன்றாகப் பனை வெல்லப் பொடி கரையும் வரை கலக்கவும். பிறகு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். தற்போது பனை வெல்லப் பொடி, எண்ணெய், தயிர் சேர்ந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்து, பிறகு துருவிய காரட்டை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு எண்ணெய் தடவிய தட்டு அல்லது டிரேவில் சேர்த்து குக்கரில் வைக்க வேண்டும். அதில் ஒரு சிறிய வளையம் வைத்து (குக்கரின் அடியில்) கல் உப்பு சுமார் ஒரு கப் சேர்த்து, வளையத்தை அதன் மீது வைத்த பிறகு எல்லா கலவையும் சேர்ந்த குக்கர் பாத்திரம் அல்லது டிரேயில் வைத்து சுமார் 35 நிமிடங்கள் டேக் செய்ய வேண்டும். குக்கரின் காஸ்செட் மற்றும் விசில் போடாமல் இதைச் செய்யவும். இப்போது சுவையான கேக் ரெடி.

சாக்லேட்:
தேவையானவை :
மில்க் மெயிட் – 1 டப்பா (400 கிராம்), சர்க்கரை – 400 கிராம், வெண்ணெய் – 400 கிராம், கோகோ பௌடர் – 5 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : மேலே கூறிய மில்க் மெய்டு, சர்க்கரை, வெண்ணெய் மற்றும் கோகோ பௌடரை எல்லாம் ஒன்றாக ஒரு வாணலியில் சேர்த்துக் கைவிடாமல் கிளறிய பிறகு ஓரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வரும்போது வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி சிறிது ஆறிய பிறகு துண்டு போடவும். வாயில் போட்டால் கரையும் இந்த சாக்லேட்டை, உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால், ‘கடை சாக்லேட் வேண்டாம், நீயே பண்ணித் தா’ என்று கேட்பார்கள்.

கோதுமை பர்ஃபி:
தேவையானவை :
கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய் – முக்கால் கப்.

செய்முறை : கோதுமை மாவை நெய்யில் நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். ஒட்டாமல் பதம் வரும்போது இறக்கி, வெண்ணெய் தடவிய (நெய்யும் பரவாயில்லை) தாம்பாளத்தில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டு போடலாம். மிகச் சுவையாக இருக்கும்.

பண்டிகைக் காலங்கள் தொடர்ந்து வருவதால் இவற்றை எல்லாம் செய்து, குடும்பத்தினரை மகிழ்விக்கலாம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...