0,00 INR

No products in the cart.

நான் கொரோனா பேசுகிறேன்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

உங்களை அழிப்பது என் நோக்கமல்ல. விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தொழில்நுட்பம் தலைசிறந்து விளங்குகிறது. மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது. ஆகவே, இயற்கையை விட, மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே எனது நோக்கம். எண்ணற்ற போர் விமானங்களைத் தயாரித்து, எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீர்கள். அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னைக் கொன்றுவிடுங்கள் பார்க்கலாம். ‘அணுகுண்டு வைத்திருக்கும் நாடு நாங்கள்; யாரை வேண்டுமானாலும் அழித்து விடுவோம்’ என்று கர்வத்தோடு பேசி திரிந்தார்கள். ஆயிரம் அணுகுண்டை வீசி, இப்போது என்னை அழித்துக்காட்டுங்கள் பார்க்கலாம். சாதியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள். ஆனால், உலகையே ஆண்ட பிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும், ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத பாமரனையும் நான் சமமாய் நடத்துகிறேன். உங்களைவிட, நான் மேன்மை ஆனவனே! என்னை இகழ உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை. மதங்களின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள். மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் யாரேனும் ஒருவரை இப்போது அழைத்து, என்னை மறையச் செய்யுங்கள் பார்க்கலாம். இனியும், இதுபோன்ற மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் சுய அறிவோடு இருங்கள். இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும் நான் அளித்திருக்கும் அன்புப் பரிசுதான் இந்தத் தனிமை. அதில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளைத் துறந்து, மனிதத்தை உணர்ந்து, புதிய சிந்தனைகளோடு வெளியே வாருங்கள். அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாக விடைபெற்று இருப்பேன்.

இப்படிக்கு
கொரோனா
– அ.பூங்கோதை, செங்கல்பட்டு

———————

படித்ததில் பிடித்தது

வைர வரிகள்
‘கடவுளுக்கு எதற்கு இவ்வளவு கோயில்கள்?’ என்ற கேள்விக்கு விவேகானந்தர் தந்த பதில் :
’’காற்று நிறைந்திருக்கும் உலகில், நாம் அதை உணர மின்விசிறி தேவைப்படுகிறது’’.

நல்லது – கெட்டது
‘‘குருவே… நல்லது, கெட்டது இரண்டையும் இறைவன்தான் படைத்தான். நாம் நல்லதைச் செய்யாமல், கெட்டதைச் செய்தால் என்ன?’’ என்று சிஷ்யன் கேட்டான். குரு அந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை. அன்று இரவு அனைவரும் பால் அருந்தும் நேரம் வந்தது. கேள்வி கேட்ட சிஷ்யனுக்கு மட்டும் ஒரு வேலையாளிடம் சாணத்தை தரச் சொன்னார் குரு.

சிஷ்யனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘குருவே என்ன இது?’’ என்று வாய்த் துடுக்காகவே கேட்க, குரு அமைதியாகச் சொன்னார். ‘‘இந்த இரண்டையும் பசுதானப்பா தந்தது’’ என்று. சிஷ்யன் தனது தவறைப் புரிந்துகொண்டான்.

கல்யாண நவக்கிரக ஆலயம்!
காரைக்குடியில் இருந்து மேற்கே மதுரை செல்லும் வழியில், நாச்சியார்புரத்துக்கு முன் மூன்று மைல் தொலைவில் உள்ள ஊர் மானகிரி. இங்குள்ள நவக்கிரகங்கள் கல்யாண சமேதராய் தத்தம் துணைவியாருடன் காட்சி தருவது மானகிரிக்கே பெருமை. சூரிய பகவான் சஞ்சிகை, சாயா தேவி என இரண்டு மனைவியருடனும், புதன் ஞான தேவியுடனும், சனீஸ்வரன் நீளா தேவியுடனும், சந்திரன் ரோஹிணியுடனும், குரு பகவான் தாரையுடனும், சுக்ரன் சுபகீர்த்தியுடனும், செவ்வாய் சந்திரா தேவியுடனும், ராகு ஸிம்ஹியுடனும், கேது சித்ரலேகாவுடனும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள். கோள்களின் தாக்கத்தால் அவதியுறுபவர்கள் மானகிரி நவக்கிரக ஆலயத்தில் வழிபாடு செய்தால் அதிலிருந்து விடுபடலாம். நவ நாயகர்கள் துணைவியருடன் இருப்பதால் கருணை அதிகமாம்.
– ஜி.இந்திரா, ஸ்ரீரங்கம்

———————

பலகார விடுகதைகள்!

1. அதிகாரத்தோடு அதட்டி வந்தான்; சமரசம் பேசி சாதித்துப் போனான்!
2. போராளி என்றும் தள்ள முடியாது; போலி என்றும் சொல்ல முடியாது!
3. டில்லிக்கு ராசாவாம்; பாதுகாப்புக்கு கோஷாவாம்!
4. ‘சீ’ என்று தள்ளி விட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான்!
5. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான்; முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான்!
6. திருப்பதியில் உருண்டு புரண்டான்; திரும்பி வந்தான் பிரசாதமாய்!
7. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான்; குல்லா போட்டு குதித்து வந்தான்!
8. குடிசைக்குக் கூரையானது; குண்டு காதருக்கு அடைமொழியானது!
9. பால் மணக்கும் பச்சைக் குழந்தை; ஆங்கிலத்தில் ‘கோ’ என்பான். தமிழில், ‘வா’ என்பான்!
10. பாலில் சுண்டி, நெய்யில் சுருண்டு, பாலில் சிரிக்கும் ஜாலி நிலா!
11. சோவென்று பெய்த மழையில் சாமா, மாசாவாணான்!
12. அப்படி இப்படி இருப்பானாம்; பப்படிசா பயன் சோன்பாப்பா!

விடை :
1.அதிரசம், 2.போளி, 3.பாதுஷா, 4.சீடை, 5.முறுக்கு, 6.லட்டு, 7.ரசகுல்லா, 8.ஓலை பக்கோடா, 9.பால்கோவா, 10.குளோப் ஜாமூன், 11.சோமசா,12.சோன்பப்படி.
– எம்.வசந்தா, சென்னை.

———————

ஏற்பாடு திருமணக் காதல்!

முன் பின்னே தெரியாது;
முதல் நாளில் நீ யாரென்று!
முகம் பார்த்து பேசலையே;
முதல் சந்திப்பு எனக்கு இல்லையே!
இருந்தும் உனது அருகே அமர்ந்தேனே;
அன்று அது புரியலையே!
முதல் சிரிப்பு மறக்கலையே;
மழலையின் பாவனை போல்!
அன்று முதல்…
விலக்க முடியலையே;
உன் மேல் வைத்த அன்பை!
– ஆ.தாரணி, மணல்மேட்டுப்பட்டி

1 COMMENT

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...