0,00 INR

No products in the cart.

இஞ்சிக்கு மிஞ்சியது ஏதுமில்லை!

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

• இஞ்சி ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
• நமது உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி இஞ்சிக்கு அதிகம் உண்டு.
• இஞ்சி சாறு குடித்துவந்தால் சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
• ஆஸ்துமாவை ஓட ஓட விரட்டும் சக்தி கொண்டது இஞ்சி. வயிற்றில் சேர்ந்த வாயுவைப் போக்கி, பஞ்சு போல ஆக்கி அதிலுள்ள தீய பொருட்களையும் கிருமிகளையும் போக்கும். கபத்தால் உண்டாகும் எல்லாவித நோய்களையும் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
• நுரையீரல் நோய்களைக்கூட இஞ்சி குணப்படுத்தி விடுவதால், நாள்தோறும் இஞ்சி கொஞ்சம் உடம்பில் சேருவது மிகவும் நல்லது.
• இஞ்சியை எந்த உணவுடன் சேர்த்தாலும் சுவையை அதிகமாக்கும்.
• இஞ்சி சட்னி, இஞ்சி ஊறுகாய், இஞ்சி பச்சடி, இஞ்சி டீ என ஏதாவது ஒன்றை தினசரி உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
• சாப்பிடும் முன்பு ஒரு துண்டு இஞ்சியும் சிறிது உப்பும் சேர்த்துச் சுவைத்துச் சாற்றைப் பருகினால் பசி தானாக வரும்.

• தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவள்ளி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த பூண்டு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் சூப்பர் இஞ்சி டீ கிடைக்கும். இது மிகுந்த மருத்துவ குணம் நிறைந்த டீ ஆகும்.
• உணவால் ஏற்படும் அலர்ஜியையும் இஞ்சி சரிப்படுத்தும்.
• தேன் மற்றும் புதினாவை இஞ்சிச் சாறுடன் வேக வைத்து, தண்ணீரைக் குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற முடியும்.
• குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால், நல்ல செரிமானத்தைத் தரும்.
• மாதவிடாய் வலியால் ஏற்படும் தசைப்பிடிப்பைக் குறைக்கும் சக்தி இஞ்சியில் உள்ளது. மாதவிடாயின்போது அல்லது அதிக மதிய மற்றும் இரவு உணவிற்குப் பிறகு வயிற்றுப் பகுதி விரிவடைவது போன்று உணர்ந்தால், அதனை சரி செய்யும் வல்லமை கொண்டது இஞ்சி.
• இஞ்சி மூட்டு வலியைக் குறைக்கிறது.
• காலை வேளையில் இஞ்சி கலந்த டீ குடிப்பது காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
• தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டால் வயிற்று உப்புச பிரச்னை அகலும். நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க, தேனில் ஊறவைத்த இஞ்சியை தினம் ஒரு துண்டு சாப்பிட வேண்டும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தால் அவ்வப்போது தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம். அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனைத் தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடவும்.
• இஞ்சியில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் குளிர், இருமல், காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்துப் போராடி, நோய்களைத் தடுக்கின்றன.
• பட்சணம் செய்யும்போது எண்ணெயில் இஞ்சியை தட்டிப்போட்டு புகை வரும்படி காய்ச்சி இஞ்சியை எடுத்துவிட்டால் பட்சணத்தால் குமட்டல் வராது. எண்ணெய் புகையால் தலைவலி வராது.
• குடிக்கும் வெந்நீரில் இஞ்சியைத் தட்டிப்போட்டு குடித்தால் குளிர், மழையில் உடலுக்கு நல்லது.

2 COMMENTS

  1. இஞ்சி சுரசம் ,இஞ்சி முரப்பா, இஞ்சி கஷாயம் ஆகியவற்றை எளிதில் செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இஞ்சியின் மேன்மைகள் பலவற்றை விரிவாக எடுத்துக்கூறிய கட்டுரையாளருக்கு நன்றிகள் பல.

  2. இஞ்சியின் சிறப்பினைக் கூறி அதன் மகிமையை அறிய வைத்த கட்டுரையாசிரியர் ஆர்.ஜெய லட்சுமிக்கும்
    வெ ளியிட் ட மங்கையர் மலருக்கும் வாழ்த்துகள்.
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...