0,00 INR

No products in the cart.

IPL 2021 பைனல்ஸ் குறித்து FB வாசகியர்களின் பதிவுகள்!

தற்போது நடந்துமுடிந்த IPL 2021 பைனல்ஸ் குறித்து
FB வாசகியர்களின் பதிவுகள்!

சுவாரசியமான IPL 2012 Vs 2021!

தென்ன, 2012 Vs 2021?
2012 IPL சீசன் புள்ளிப் பட்டியல் மற்றும் ஃப்ளே ஆஃப் சுற்று முடிவுகளில், சென்னை (CSK) மற்றும் கொல்கத்தா (KKR) அணிகளின் செயல்பாடுகள், முடிவுகள் போன்றவை 2021 IPL சீசனில் தலைகீழாக, ரிவர்ஸில் அமைந்திருந்தது சுவாரசியமான விஷயம்.
எப்படி என்பதை, கீழ்க்காணும் புள்ளிப் பட்டியல் தெரிவிக்கின்றது.


பழசும் புதுசும் IPL கலக்கல்!
பழசும் புதுசுமா? ஆமாம்! திறமையான பழைய விளையாட்டு வீரர்களும், துடிப்பான புதிய விளையாட்டு வீரர்களும் சேர்ந்து கலக்கினார்கள்.

CSKயின் சாத்தியக்கூறுகளை நன்கு அறிந்த Dad’s (M.S.Dhoni) Armyயின் தலைமையில், பழசும், புதுசும் கலந்து IPL–14 சீசனில் அருமையாக விளையாட, இறுதிப் போட்டியில் CSK அணி, விஜயதசமியன்று வெற்றிவாகை சூடினர்.

ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிசிஸ் இருவரும் இரு தூண்களென நின்று அருமையாக பேட்டிங் செய்தனர்.

24 வயதாகும் கெய்க்வாடிற்கு இது இரண்டாவது IPL மேட்ச் ஆகும்.

கெய்க்வாட் IPL –14 சீசனில் 635 ரன்கள் எடுத்து ‘ஆரஞ்ச்’ தொப்பியைப் பெற்றார். CSK கோச் ஸ்டீபன் ஃப்ளெமிங், இவரை சூப்பர் ஸ்டார் எனப் பாராட்டினார்.

வெற்றிகரமான முடிவைத் தர கோச்சும், கேப்டனும் விளையாடும் களம் மற்றும் வெளியினை தங்களது கட்டுப்பாட்டில் நிறைவாக வைத்திருந்தது சிறப்பம்சமாகும்.

புதுப்புது வீரர்களின் வருகை வரவேற்கத் தகுந்ததொன்று கலக்கிட்டாங்க போங்க.
– ஆர்.மீனலதா, மும்பை

வெற்றி பெற்ற CSK அணி, இது வரை நடந்து முடிந்த IPL போட்டிகளில் 9 முறை இறுதிப் போட்டிக்கு வந்து, 4 தடவை வெற்றியும் பெற்றுள்ளது. IPL2021ல், அதிக ரன்கள் எடுத்த முதல் இரண்டு வீரர்கள் CSK அணியைச் சேர்ந்தவர்கள். CSK அணியின் Faf Du Plessis அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்து மேன் ஆப் தெ மேட்ச் அவார்ட் மற்றும் Most Valuable Player (MVP) அவார்ட் பெற்றார். Chennai Super Kings னா சும்மாவா? செம சூப்பர்.
– ஜெயா சம்பத்

தோனி பேசும்போது இந்தமுறை பைனலில் வெல்ல அனைத்து தகுதிகளும் பெற்ற அணி கொல்கத்தா என்று மனதார சொன்னது அவருடைய தன்னடக்கத்தை காட்டியது..
– ஹேமலதா ஸ்ரீனிவாசன்

ந்த ஆட்டம் டி.20, பார்மேட்டில் கேப்டனாக தோனியின் 300-வது ஆட்டம்.இதன் மூலம் கிரிக்கெட் உலகில் கேப்டனாக 300, டி.20 ஆட்டங்களில் களம் கண்ட ஒரே வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார். சொல்லி அடித்த தோனி கூல் கேப்டனாக இதை சாதித்துள்ளார். தோனியின் மீதான விமர்சனங்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த மாட்ச்-ல் எங்கள் மனங்களை ஸ்கோர் செய்தது எம் எஸ் தோனி என்ற தலைவனே.
– மகாலக்ஷ்மி சுப்ரமணியன்

“Dad’s army’ என்று பரிகாசம் செய்யப்பட்டாலும் அதுதான் 2021 சாம்பியன் . அந்த அணியில் 6 வீரர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் எதிரணியினரான KKR அணியில் வயதில் இளையவர்களை ஜெயித்துக்காட்டி விளையாட வயது தடையல்ல என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
– ராதிகா ரவீந்திரன்

கிரிக்கெட்ல ஆர்வம் கம்மிங்க..
– கோமதி நமச்சிவாயம்

193ரன்கள் கொண்ட இலக்கை கைப்பற்ற கொல்கத்தா அணி கொடுக்கப்பட்ட 20ஓவர் முடிவில் 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. எனவே27ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இறுதி போட்டியை வென்று 4தடவை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.என் மகன் மூலம் அறிந்தேன். எனக்கு தெரியாதை எல்லாம் இந்த மங்கையர் மலர் தெரிய வைத்து விடும் போல.
தோனியின் தலைமையில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவ்வெற்றி, அதனுடைய மகுடத்தில் மேலும் ஒரு சிறகு ஆகும்.
– கலைமதி சிவகுரு

கிரிக்கெட் பாா்ப்பேன் ஆனால் விமா்சணம் பண்ணத்தொியாது என் மகன் மருமகள் பாா்க்க நினைக்கும்போது நான் பாா்க்கும் தொடரைப்பாா்க்காமல் விட்டுக் கொடுத்து விடுவேன் இது தான் உண்மை.
– புவனாநாகராஜன், செம்பனாா்கோவில்

வெற்றி நாயகன் தோனியின் 300 ஆட்டம். இத்தகைய சாதனை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சிக்சரும், பவுண்டரிகளும் இந்த வெற்றிக்கு மிகுந்த சிறப்பாக இருந்ததது .தான் அணியில் இடம் பெறாவிட்டாலும் சுரேஷ் ரெய்னா மிகுந்த உற்சாகத்துடன் கை தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தி ய விதம் அருமை.. (அவருக்கு பதில் உத்தப்பா) இறுதி போட்டியில் முதல் 10 ஓவர்களில் கலக்கிய கல்கத்தா வை செ‌ன்னை வீரர்களின் பந்து வீச்சால் அணை போட்டு வெற்றி கோப்பையை தக்க வைத்து கொண்டாடியது தோனியின் சூப்பர் கிங்ஸ்.
– வாணி கணபதி

பிசிசிஐ ஆல் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், 2008 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பொழுது நடந்து முடிந்தது 14ஆவது 2021 ஐபிஎல் போட்டி ஆகும். இதில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டும் 2021, அக்டோபர் 16ஆம் தேதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான, துபாயில் நடந்த இறுதி போட்டியில் மோதின.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பின்னர் 193 ரன்கள் இலக்குடன் ஆடத் துவங்கிய, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வென்றது. சென்னை அணியின் சார்பாக விளையாடிய டுப்லஸ்ஸிஸ் அதிகபட்சமாக 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். ஷப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் தலா 51, 50 ரன்கள் எடுத்தனர். கல்கத்தா அணி விளையாடியபோது, சிஎஸ்கே யின் ஷர்துல் தாக்கூர், 3 விக்கெட்டுகளும், ஜடேஜா ஜோஷ் ஹாலிவுட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தேனியின் தலைமையில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவ்வெற்றி, அதனுடைய மகுடத்தில் மேலும் ஒரு சிறகு ஆகும்.
– லலிதா பாலா

1 COMMENT

  1. புவனா நாகராஜன் கூறியதுபோல் கிரிக்கெட் பார்ப்பேன். ஆனால் விமர்சனம் பண்ண தெரியாது. மேட்ச் நடைபெறும் நாட்களில் கணவர்,மகள், மருமகன் ஆகியோர் பார்க்கும்போது சீரியல்களை பார்க்காமல் விட்டுக் கொடுத்து விடுவேன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...