பயண டிப்ஸ்! – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

பயண டிப்ஸ்! – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!
Published on

நீண்ட பயணம் செய்யும் போது அவசியம் கொண்டு செல்ல வேண்டியது என்ன? FB வாசகியர்களின் பதிவுகள்!

மருந்து மாத்திரைகள் முதல் ஆதார் அடையாள அட்டை வரை.
ரெடி டு ஈட் உணவு வகைகள் முதல் ரெயின்கோட் ஸ்வெட்டர் வகேரா வரை.
செல்ஃபோன் சார்ஜர் முதல் சானிடரி நாப்கின் வரை.
தொலைபேசி எண்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை.
ஏ.டி.எம் கார்டு முதல் ஏர் பில்லோ பெட்ஷீட் வரை.
ஏகப்பட்ட வாசகீஸ் எழுதி குவித்திருக்கும் பதிவுகளிலிருந்து சற்றே வித்தியாசமான ஒரு சில பதிவுகள் இதோ உங்களுக்காக…

எக்ஸ்ட்ரா ட்ரெஸ் ரொம்ப அவசியம். மழையில் நனைந்தாலோ அல்லது கிழிந்து விட்டாலோ தேவைப்படும். குடைகள் கண்டிப்பாக வேண்டும். செப்பலுடன் ஷூவும் சாக்சும் எடுத்துச் சென்றால் இடத்துக்கு தகுந்தமாதிரி அணியலாம்.
-ஹேமலதா சீனிவாசன்

ஓரிரண்டு ப்ளாஸ்டிக் பைகள் கொண்டு செல்லுங்கள், சாப்பிட்ட உணவுப் பொருட்களின் மீதம், பழத்தோல் போன்றவற்றை கண்ட இடத்தில் வீசி எறியாமல் பையில் வைத்திருந்தால் பொது குப்பைத்தொட்டியில் போட வசதியாக. கைக்குழந்தைகளும் வருகிறார்கள் எனில் ஒன்றுக்கு இரண்டு ஃபீடிங் பாட்டில் தேவை. சென்ற இடத்தில் வேடிக்கை பார்க்கும் ஜோரில் பாட்டிலை மறந்து வைத்து விட்டாலும் மற்றொன்று உதவும்.
-மங்கள கெளரி

ரொம்ப தூரம் போகும்போது போரடிக்கும்.அதனால, கைவசம் நோட்பேடு, பென்சிலுடன், விளையாடுவதற்கு சில ஐடியாக்களும் அவசியம். விருப்பமில்லா வார்த்தைகளால் பிறக்கும் பிரச்னைகள் வராது.
பென்டிரைவில் பழைய, இடைப்பட்ட, புதிய பாடல்களை கலந்து பதிவு செய்து போகும்போது ரசிக்க,பெரியோர்களும்,சிறியோர்களும் சுமுகமாக பயணம் செய்வர்.இதுவும் முக்கியம். மனசு மகிழ்ச்சியா இருந்தால் பயணம் இனிக்கும்.
-கோமதி

coffee premix என்று சர்க்கரை, காபி, பால் மூன்றும் கலந்த கலவை பவுடராக கிடைக்கிறது. சின்ன சின்ன சாஷேக்களாக கிடைக்கிறது. அவற்றை வாங்கி எடுத்துப் போனால் சுடு தண்ணீரில் கலக்கி காபியாக குடித்து விடலாம். அதே போல் டீயும் ப்ரீமிக்ஸ் கிடைக்கிறது.
-சுதா திருநாராயணன்

அன்றாடம் போடும் செருப்பு வேண்டாம். எந்த நேரத்தில் வார் அறுந்து விடும் சொல்ல முடியாது ,பின்பு நமக்கும் செருப்புக்கு மிடையே ஒரு "வாரே" நடக்கும், அதனால் இரண்டு வாரம் முன்பே புது செருப்பு வாங்கி நடந்து பழகிவிட்டால் செருப்பு நம்மை கடிக்காது. வேகமும் தடைபடாது. மேலும், ஹீல்ஸ் வைத்த செருப்பு வாங்காமல் இருப்பது காலுக்கு பாதுகாப்பு.
-ஜானகி பரந்தாமன்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com