0,00 INR

No products in the cart.

உன்னோடு எந்நாளும்!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021!
பரிசுக் கதை – 5

கதை      : ஜனனி ராம்
ஓவியம் : சேகர்

“இந்த மாசம் எட்டு நாள் வீட்டுல இருந்திருப்பீங்களா? எப்பப் பாரு டூர்! முந்தா நாள்தான் ஆறு நாள் மும்பை டிரிப் போயிட்டு வந்தீங்க… இப்ப மறுபடியும் கிளம்பியாச்சு” கல்யா பொரிந்தாள்.

அது வழக்கந்தான்! தனியார் நிறுவனத்தில் வர்த்தகப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் சேல்ஸ் டூர் போகிறேன் என்றவுடன் கல்யா வெற்றித்திலகம் இட்டு அனுப்புவாள் என்பதெல்லாம் சான்ஸே இல்லாத விஷயம். இந்த எட்டு வருடங்களில் இதை முழுமையாக தெரிந்துகொண்டதால் அவள் முணுமுணுப்பதைப் பார்த்து எனக்குக் கோபமெல்லாம் வருவதில்லை. வீட்டின் அனைத்துப் பொறுப்புகளும் அவள் தலையில் என்பதால் வரும் இயலாமையாகக்கூட அது இருக்கலாம். ஹவுஸ் ஓனர் கெடுபிடிகள், என் பெற்றோர் உடல்நிலை, வீட்டு நிர்வாகம், சஞ்சு, விஷ் குட்டியின் படிப்பு, எக்ஸ்டிரா கரிகுலர் வகுப்புகள், ஹோம்வொர்க், டியூஷன் எல்லாமே அவள் பொறுப்பு. நானும் பொறுப்புகளை பகிர்ந்துகொண்டால், உற்சாகம், சந்தோஷம் இருக்கும். கடமையாக வாழ்க்கையைக் கழிக்காது, ரசிக்கும்படி இருக்கும். சில வருடங்களுக்கு முன்புவரை அப்படித்தான் இருந்தது. ஆனால், இந்த நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து பணியும், சம்பளமும் அதிகம். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் தியரி படி கம்பெனி பிரமோஷன்கள் வழங்கப்படுவதாலும் இங்கிரிமெண்ட்கள் முடிவெடுக்கப்படுவதாலும் எக்ஸ்டிரா மைலை கடந்தே தீருவது என ஓடிக் கொண்டிருக்கும் என்னைத் தடுத்து நிறுத்த முயல்வது விழலுக்கிறைத்த நீர்!

ஜனனி ராம்

“பொழப்பும்மா! டூர் போயிட்டு வந்தாதான் வீட்டுல எல்லாரும் கீ ரோஸ்ட் சாப்பிட முடியும்.”

“எனக்கு மோர் சோறு போதுங்க…! இப்படியே போயிட்டு இருந்தீங்கன்னா ஒருநாள் பசங்க யாரோ வராங்கன்னு சொல்லப்போறாங்க.” – அவள் கண்கள் ஓரத்தில் விழட்டுமா எனக் காத்திருந்த நீர்!

இனி அமர்ந்து பேச முடியாது. எழுந்து சென்று அணைத்துக் கொண்டேன்.

“ரொம்ப கஷ்டமா இருக்காடா?”

“வீக் டேஸ் கூட பரவால்லே! ஞாயிறும் டூர் போவது நியாயமில்லைங்க. வாரம் முழுக்க என்னை மட்டும் பார்க்கிற குழந்தைகளும் வயசான உங்கம்மாவும் உங்களைத் தேட மாட்டாங்களா?”

“இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. அதுக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாயிடுவேன். இந்த வருடம் பிரமோஷனோட சம்பளமும் அதிகம் வரும். உனக்கு என்ன கிஃப்ட் வேணும் சொல்லு?”

“வீண் பேச்சு! எத்தனை பேண்ட் ஷர்ட் எடுத்து வைக்கணும்? அதை மட்டும் சொல்லுங்க!”

மும்பையில் நான் எதிர்பார்த்ததை விட வேகமாகவே பணிகள் முடிந்தன. புதிய இலக்குகளைத் தேடி அலைந்து, மேலும் சில ஆர்டர்கள் கிடைக்க, மகிழ்ச்சியில் மனம் குதூகலித்தது. ‘சேல்ஸ் மேன் ஆஃப் தி இயர் அவார்டு கோஸ் டு…’ மனம் கற்பனை சிறகடித்தது. நிறுவனர் வினய் வர்கியா, ‘மை டீம்’ என கட்டியணைத்துக் கொள்வது மனதிற்கு பெரிய ஊக்கத்தையும் தரும். போன வருடம் பார்கவ் ஜெயித்ததற்குப் பரிசாக தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். அதுபோலக்கூட நடக்கலாம். கல்யாவிடம் ஃபோனில் இரவு அனைத்தையும் சொன்னேன். மகிழ்ச்சியாகக் காட்டிக் கொண்டாள்.

சாருதான், “அப்பா மார்ச் மாத மேப் வேணும்! உங்கக்கிட்ட இருக்கா?” என்றாள்.
மார்ச் மேப்பா? குழந்தைகளின் பேச்சுதான் என்ன அழகு! அவள் காலண்டரை குறிப்பிட்டிருக்கிறாள். என் மேசையின் கீழ் பகுதியில் ஒரு டேபிள் காலண்டர் இருப்பதை அவளிடம் சொன்னேன். ஃபோனை அப்படியே வைத்துவிட்டு அவள் ஓடியது புரிந்தது. அம்மா தூங்கிவிட்டாளாம் பாவம்! நாளை வருத்தப்படுவாள். கிளம்பும்போது கல்யாவிற்கு சல்வார் வாங்கிட்டுப் போகணும். அப்போதுதான் வாரக் கடைசியில் அடுத்த டூர் கிளம்ப ஒத்துழைப்பாள்.

வினய் வர்கியா மும்பையில் அன்று இருக்கிறார் என்பது தற்செயலாகத் தெரிய வந்தது. அடக்கமாக வாழ்க்கையைத் துவங்கி, ஓஹோ என உயர்ந்துள்ளவர். என் ரோல் மாடல்! இன்று அவரை சந்தித்தால் என்ன? பர்சனல் அறிமுகம் பின்னர் பிரமோஷனுக்கு உதவலாம்.

இரவு ஏழு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது.

“இன்று இயலாவிடில் சண்டேயாவது உங்களைப் பார்க்கணும்னு பிளான் பண்ணியிருந்தேன்.”

“சண்டே நான் யாரையும் பார்ப்பதில்லை. தெரியாதா உங்களுக்கு?”
நான் அறிந்திருக்கவில்லை. பொதுவான சப்ஜெக்ட்ஸ், பர்சனல் விவரங்கள் பேசிய பின் விற்பனை விவரங்கள் கேட்டார்.

“டார்கெட்டை அடைந்துவிட்டீர்களா?”

“கடந்து விட்டேன் சார்.”

‘சபாஷ்’ என அவர் தட்டிக்கொடுக்கக் காத்திருந்தேன்.

“இந்த வருஷம் எத்தனை நாள் டூரில் இருந்திருப்பீங்க, சுமாரா?”
கல்யா சண்டையின்போது கோடு காட்டியது நினைவிலிருந்தது.

“இந்த வருஷம் மட்டும் இதுவரை 207நாள்” சொன்னேன்.

“அத்தனை நாட்களும் உங்க மனைவி தான் மட்டுமே குடும்ப சுமையை சுமந்திருப்பாங்க இல்லையா?”

என்னைப் பாராட்டாமல் இதென்ன? தர்மசங்கடமாக உணர்ந்தேன்.

“கிரேட் வுமன்!”

“உங்களுடைய சின்சியாரிடி, உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் எனக்கு என் இளமைக் காலத்தை நினைவுபடுத்துது.”

எனக்குப் பெருமையாக இருந்தது. என்னை அவரோடு ஒப்பிடுகிறாரே! நானும் அவரைப்போல உயர்வேன் என்கிறாரோ?

“காஃபி?”

நான் தலையசைக்க, அவர் தானே காஃபி கலந்தார்.

என்னால் அடக்க முடியவில்லை. கேட்டுவிட்டேன்.

“எல்லாரும் வெளியே போயிருக்காங்களா சார்?”

“மேலே!”

மாடியைப் பார்த்தேன். அவர் கை வானை காண்பித்தது.

மை குட்னஸ்! தனியொருவனா இவர்?

“ரொம்ப அழகான குடும்பம் என்னுடையது. காதல் திருமணம், ஒரே பெண்! நான் என்றால் உயிர் என் பெண்ணுக்கு! என்னை விட்டு நகரவே மாட்டாள். என் குடும்பத்தோட இருப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, சிரிப்பது எனக்கு ரொம்பப் பிடித்தமானது!

ஓ! ஒண்டர்ஃபுல் ஃபேமிலி டைம்! ஆனால், என்னால் அதை அனுபவிக்க முடியாது. இவங்களை நல்லா வாழ வைக்கணும்னா நிறைய சம்பாதிக்கணும்; அவங்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கணும்னு வெறி! ஓடினேன்!

ஓடிக்கொண்டேயிருந்தேன். வருடங்கள் ஓடின. தொட்டதெல்லாம் ஜெயித்தேன். எனக்கென ஒரு நிறுவனம் இருந்தால் பணிச்சுமையை குறைக்கலாம், குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம் என நினைத்தேன் ஆனால், சொந்த நிறுவனம் வந்தபின் போட்டி கூடியதேயன்றி குறையவில்லை.

வீட்டில் இருக்கும்போதும் நிறுவனம் பற்றி கவலைகள், விற்பனை தொடர்பான சந்திப்புகள், ஃபோன் கால்கள் என் குடும்பத்திற்கான நேரம் குறைந்துகொண்டே வந்தது. விளைவு? என் குழந்தை நான் இல்லாமலே வளர்ந்தாள்.
ஒரு நாள் என் மனைவி தீ விபத்தில் இறந்தாள். கருங்கட்டையாகிப்போன அவள் உடம்பையும் அவளின் அருகில் சிலையாக நின்று கொண்டிருந்த என் பெண்ணையும் பார்த்துக் கரைந்துபோனேன். அம்மாவை அப்படிப் பார்த்த முதல் அதிர்ச்சியை பகிர்ந்துகொள்ள நான் அருகிலில்லை. அவளே அழுது, உதவிகள் தேடி, எதிலும் என் பங்கு இல்லை. என் பெண் என்னிடம் பேசக்கூட மறுத்து விட்டாள். என் மனைவிக்குப் பின் அவள் ஹாஸ்டலுக்குச் சென்று விட்டாள். என்னுடன் வாழ விரும்பவில்லை. என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. யாருக்காக நான் ஓடினேன்? யாருக்காக நான் சம்பாதித்தேன்? குடும்பம் இல்லாது மகிழ்ச்சி ஏது? என் வாழ்க்கையும் செல்வமும் அர்த்தமற்றதாகி விட்டது.

பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். அன்பைத்தான் எதிர்ப்பார்ப்பாங்க. அந்த அன்பிற்காக எந்த கஷ்டத்தையும் ஏத்துப்பாங்க! சல்வாரோ, நகைகளோ பரிசளித்து அவர்கள் அன்பைப் பெற்றுவிட முடியும்னு நினைப்பது அசட்டுத்தனம். அவர்களுக்கு என் தேவை மிகவும் இருந்த நேரம், நான் அவங்ககிட்ட இல்லை.
அவர் கண்கள் மின்னின.

அறைக்கு வந்து வெகுநேரமாகியும் உறக்கம் வரவில்லை. அவர் குரல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. நள்ளிரவில் கல்யாவிற்கு ஃபோன் செய்தேன்.

“என்னங்க?” குரலில் மிரட்சி!

“பயப்படாதேடா! குட் நியூஸ்தான்! நாளைக் காலை ஃப்ளைட்ல வரேன். நாளை மாலை நீ, நான், குழந்தைகள் எல்லோரும் மெரினா போறோம். ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்றோம். ஓகேதானே?”

கல்யா சிரித்த சிரிப்பு சமீபத்தில் நான் கேட்டறியாதது.

1 COMMENT

  1. ‘ உன்னோடு எந்நாளும் ‘ பரிசுக் கதை என்னதான்
    ஓடி ஓடி உழைத்தாலும், குடும்பத்திலும் அக்கரை
    செலுத்த வேண்டும் என்ற படிப்பினையைத்
    தந்த நல்ல படைப்பு.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...