அன்புவட்டம்!

அன்புவட்டம்!

திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் 1.2 கோடி நன்கொடை அளித்துள்ளாரே?

- ப்ரியா சங்கர், பெங்களூரு

விளம்பரமா? அரசியலா? வருமானவரி பிரச்னையா... எதுன்னு தெரியலையே சாமி! இருந்தாலும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நல்ல உள்ளங்கள் சுபினா பானு – அப்துல்கனி தம்பதிக்குப் பாராட்டு! ஆனால்...

விளக்கேற்றும் வசதிகூட இல்லாமல் எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் நலிந்து கிடக்கின்றனவே!

சரி, கோயிலை விடுங்க... வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே!

சரி, விடுங்க... தூர் வாரப்படாமல் எத்தனையோ ஏரி, குளங்கள் கிடக்கின்றனவே!

விட்டுத் தள்ளுங்க... போதிய நிதி உதவி இல்லாமல் எத்தனையோ முதியோர், அனாதை இல்லங்கள் தவிக்கின்றனவே! குறைந்தபட்சம் அந்தக் காசில் சில ஆயிரம் மரங்களை நட்டு, பொதுக் காரியமாவது செய்திருக்கலாம்!

இறைவனுக்குக் கொடுக்க நினைப்பதை
இல்லாதவருக்குக் கொடுங்க...
உங்களிடம் யாசகம் பெறும் அளவுக்கு
கடவுள் ஏழை இல்லை!

********************

ங்களைக் கவர்ந்த தன்னம்பிக்கை மனிதர் யார்?

- வாணி வெங்கடேஷ், சென்னை

ட்டாபட்டி அன்டர்வேர், பசுமாடு, கரகம்... ஏன் இளையராஜா பாட்டு கூட இல்லாமல், தைரியமாக ‘கம் பேக்’ கொடுத்திருக்கும் நடிகர்
கிராம ராஜன்தான்!

பத்து வருஷம் ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்தார். திடீர்னு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர்னு அதகளம் பண்ணியிருக்காரு. “சீரஞ்சிவி, சிம்பு, விக்ரம், அமீர்கான் படங்களே ஊத்திக்கொள்ளும் காலத்தில் ‘சாமானியன்’ என்ன ஆவானோ?”ன்னு நமக்குதான் கலக்கமா இருக்கு. ஆனா, ராமராஜன் டபுள் எனர்ஜியோடதான் பேட்டி எல்லாம் கொடுக்குறார். அந்த முரட்டு கான்ஃபிடென்ஸ் இருக்கே... வேற வேற லெவல்!

********************

மீபத்தில் டீ.வி.யில் ஒளிபரப்பான டாக்-ஷோக்களில் இடம்பெற்ற பெண்கள், “முந்நூறு, நானூறு பவுன் வைத்திருக்கிறேன்...” “அடுத்து டயமன்ட் கலெக்ஷன் பண்ணப் போறேன்”, “ஆயிரத்து ஐந்நூறு புடைவைகள் வெச்சுருக்கேன்” என்றெல்லாம் பேசியது வைரல் ஆகி வருகிறதே!... உங்க ரியாக்ஷன்?!

- க. வெண்ணிலா, மோகனூர்

V.V.V…! அதாவது, வரட்டுப் பெருமை, வீண் செலவு, வெட்டி ஜம்பம்! டீ.வி.க்காக எதையோ பேசிவிட்டு, அப்புறம் திருட்டு பயத்திலும், உற்றார் உறவினர்களின் கேலிப் பேச்சுக்கும் ஆளாகப் போகிறார்கள்! வாயைக் கொடுத்து வம்புல  ‘W anted’ஆ மாட்டிக்கிட்டாங்க!

உங்களிடம் பணமோ, தங்கமோ இருந்தால், ‘கோல்ட் பாண்ட்’களில் முதலீடு  செய்யுங்க! அதுதான் புத்திசாலித்தனம்!

என்னைப் பொறுத்தவரை, நான் 50 வயசிலேயே பட்டுப் புடைவை, நகை இரண்டையும் வாங்குவதை சப்ஜாடாக நிறுத்திவிட்டேன்.. ஏன்னா, வோலினி, மூவ் ஆயின்மென்ட் வாங்கவே பட்ஜெட் சரியா இருக்கு! ஹி...ஹி!

********************

 தேனும் வாட்ஸ்-அப் ஜோக் ப்ளீஸ்...

- செல்லையா, சாத்தூர்

“வீட்டை விட்டு வெளிநாடு கூட போயிடலாம் போல. ஆனா, இந்த மொபைலை விட்டுட்டு தெருமுனைக்குக்கூட போக முடியல!”

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com