கேரட் சூப்தேவை: கேரட் – 100 கிராம், தக்காளி – 5, வெண்ணெய் – 1 ஸ்பூன், வெங்காயம் – 1, மிளகு பொடி – 1 ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – 1 ஸ்பூன், உப்பு – சிறிதளவு.செய்முறை: கேரட்டைத் துருவவேண்டும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவேண்டும். கேரட், தக்காளி இரண்டையும் தேவையானத் தண்ணீர் விட்டு வெந்ததும், மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வாணலியில் வெண்ணெய் போட்டு, அடுப்பில் வைத்து வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி கேரட் சாறைக் கலந்து உப்பு போட்டுக் கொதித்ததும், கார்ன் ஃப்ளாரைக் கரைத்துவிட்டு மிளகுபொடிச் சேர்த்து கீழே இறக்கவும்.கேரட் பாயசம்.தேவை: கேரட் – 200 கிராம், பால் – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், முந்திரி பருப்பு – 10 கிராம், கிஸ்மிஸ் – 10, ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்செய்முறை: கேரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு சிறிதளவு தண்ணீரில் வேகவைத்து, நீரை வடித்து, விழுதாக அரைக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கேரட் விழுதை வாசனை போக வதக்கி, சர்க்கரை, தேவையான தண்ணீர், பால் சேர்த்து வேகவைக்கவேண்டும். நன்றாகக் கொதித்துவரும் சமயத்தில் ஏலக்காய்ப் பொடி போட்டு கீழே இறக்கவேண்டும். சிறிதளவு நெய்யில் முந்திரிப் பருப்பு மற்றும் கிஸ்மிஸ் வறுத்து பாயசத்தில் சேர்க்க வேண்டும். கேரட் ஸாண்ட்விச்.தேவை: கேரட் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 100 கிராம், கொத்துமல்லி – 1 கட்டு, பச்சை மிளகாய் - 6, கடுகு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.செய்முறை: கேரட், வெங்காயம் ஆகியவற்றைத் தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும். கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை மிகப் பொடியாக நறுக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகைத் தாளித்து, துருவிய கேரட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கவும். லாண்ட்விச் செய்ய ரொட்டித் துண்டுகளை நெய்யில் வதக்கித் தயாரித்து வைத்திருக்கும் காய்கறிக் கலவையை அதன்மேல் பரிமாறவும். கேரட் துவையல்.தேவை: தேங்காய் – 1 மூடி, கேரட் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, புளி – 1 சிறு உருண்டை, பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன், தயிர், உப்பு – தேவையானது.செய்முறை: கேரட்டைத் துருவ வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். காய்ந்த மிளகாயை வறுக்க வேண்டும். கேரட்டைத் தவிர, மீதி எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கடைசியாக கேரட்டைச் சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து தயிரில் கலக்கலாம். வெறுமனே வதக்கியும் தொட்டுக்கொள்ளலாம். கேரட் கீர்.தேவை: கேரட் – 100 கிராம், பால் – 100 கிராம், ஏலக்காய் – 2, நெய் – 1 மேஜைக்கரண்டி, சர்க்கரை – 1 கரண்டி, திராட்சை – 10, பாதாம் பருப்பு – 10.செய்முறை: கேரட்டைத் துருவிக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய்விட்டு, அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஏலக்காய், கேரட் துருவல் போட்டு ஒரு நிமிட நேரம் வதக்க வேண்டும். இதனுடன் பால் மற்றும் கிஸ்மிஸ் கலந்து இறுக மூடி இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து, வேகவிட்டு, பிறகு சர்க்கரை, நெய்யில் வறுத்த பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கலக்க வேண்டும். கேரட் உப்புமா.தேவை: கேரட் – 300 கிராம், வெள்ளைக்கடலை – 250 கிராம், பச்சை மிளகாய் -5, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலைமாவு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 பிடி, தக்காளி – 3, உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 5, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: கடலையை முதல்நாள் இரவே ஊற வைக்கவேண்டும். கேரட்டைப் பொடியாக நறுக்கவேண்டும். மிளகாயை நீளவாட்டில் நறுக்கவேண்டும். கடலையை வேகவைத்து எடுக்கவேண்டும். கேரட், உருளை, வெங்காயம் மூன்றையும் வேகவைத்து எடுக்கவேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, மிளகாய் போட்டு வெந்த கேரட், உருளை, கடலையைச் சேர்த்து நன்றாகக் கிளறி கடலைமாவைத் தூவி, வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி போட்டு கிளறி இறக்க வேண்டும். கேரட் தோசை.தேவை: தோசை மாவு – 200 கிராம், கேரட் – 200 கிராம், கடலை மாவு – 100 கிராம், ரவை – 50 கிராம், சீரகத்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: கேரட்டைத் துருவி வேகவைத்து, அரைத்து தோசை மாவுடன் கலக்கவேண்டும். இதனுடன் கடலை மாவு, ரவை, மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்றாகக் கரைக்க வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை விட்டு தோசையாக வார்த்து மேலே எண்ணெய் ஊற்றி வெந்து எடுக்கவேண்டும்.