தீபாவளி தகவல்கள்!

தீபாவளி நல்ல தீபாவளி
தீபாவளி தகவல்கள்!
Published on

கங்கா தேவி

தீபாவளியின் முக்கிய நிகழ்வு கங்கா ஸ்நானம்தான். அந்த கங்கை பற்றிய தகவல்கள் சில அறியலாமே.

* கங்கைக்கு வானதி, பாகீரதி, வரநதி, மந்தாகினி, ஜானகி, சுரநதி, திரிபதகை விமலை, விஷ்ணுபதி என்று பல பெயர்கள் உண்டு.

* தீபாவளியன்றுதான் கங்காதேவி பூமியில் பாய்ந்தாள். அன்று பகீரதன் என்ற மன்னனுக்காக சிவபெருமான் திருமுடியிலிருந்து கங்கையை உலகிற்கு விடுவித்தார். தீபாவளியன்று எந்த நீர் நிலையில் ஸ்நானம் செய்தாலும் கங்கையில் குளித்ததற்கு சமம்.

* கோவை மாவட்டம் தேவம்பாடிவலசு எனும் ஊரில் சிவன், பார்வதி, கங்காதேவியுடன் பத்மாசனத்தில், அமர்ந்த கோலத்தில் அருளுகிறார்.

* திருப்பதி திருமலையில் உள்ள முக்கியமான தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் ஆகும்.

* ராமேஸ்வரம் கோயிலுக்கு உள்ளே உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று கங்கா தீர்த்தம்.

* கும்பகோணம் மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களில் ஒன்று கங்கா தீர்த்தம் ஆகும்.

* திருச்சி கீழ சிந்தாமணி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவிலில் கங்கா தேவிக்கு தனி சந்நிதி உள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, இடது சிகை கொண்டையில் பாம்பு சீறிப்பாய, உச்சியில் கங்காதேவி மகுடமாய்க் காட்சி தருவது அற்புதம்.

குபேர பூஜை

தீபாவளி அன்று குபேர பூஜை செய்வது வழக்கம். குபேரன் பற்றிய சில தகவல்கள்:

* குபேரனின் நிதிகள்:  சங்கநிதி -  பணம், 

பதுமநிதி - கல்வி, அறிவு  நீலநிதி - கடல் வளம் 

மச்ச நிதி - அதிர்ஷ்டம் 

முகுந்த நிதி - நெய், தயிர் வெண்ணை வளம்

 நந்த நிதி -  பசுவளம்

 கற்பக விருட்சம் -  மரங்கள், செல்வம் 

காமதேனு.- லட்சுமி கடாட்சம்.

இவற்றை முறையாக பயன்படுத்தினால், குபேரனின் அருள் கிடைக்கும்.

 -------------------------------------------------------------------

* பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேரன் மனைவி சித்திரை லேகா, கணக்குப்பிள்ளைகளுடன் காட்சி தருகிறார். கோயில் தூண்களில் 12 ராசிகளுக்குரிய குபேரன் சிலைகள் உள்ளன.

* கும்பகோணம் நாகநாதர் கோவிலில், குபேரனின் சங்கநிதி, பதுமநிதி பெரிய சிலைகள் உள்ளன.

* கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயிலில் குபேரர் நின்ற காலத்தில் காட்சி தரும் சன்னிதி உள்ளது.

* நாகப்பட்டினம் மெய் கண்ட வேலவர் கோயிலில்

 குபேரன் அமர்ந்த நிலையில், தனி சன்னிதி கொண்டுள்ளார்.

* காஞ்சிபுரம் கரவட்டமுடையார் கோயில் நுழைவாயிலில், கையில் நிதிகளை ஏந்தி குபேரன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

- எஸ். ராஜம் , ஸ்ரீரங்கம்

 -------------------------------------------------------------------

அன்னகூட்

த்தரபிரதேசம் மதுரா ஜில்லாவில் யாதவர்கள் ஏராளமாய் வசிக்கின்றனர். குறிப்பாக கோவர்தனகிரி பகுதியில் மிக அதிகம். வருடா வருடம் மழை வேண்டி, இந்திரனுக்கு விழா எடுப்பர். சிறுவன் கிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது, அதனை நிறுத்து எனக் கூற, நிறுத்திவிட்டனர்.  இதனால் கடும் கோபம் அடைந்த இந்திரன் உடனே இந்தப் பகுதியில் ஒரு வாரம் கடும் மழையைப் பெய்வித்தான். இதனால் யாதவர்களைக் காக்க, கிருஷ்ணன் கோவர்தன கிரி மலையை தூக்கி, குடைபோல் பிடித்தான்! இதற்கு நன்றியாக கிருஷ்ணனுக்கு வருடா வருடம் விழா எடுக்க ஆரம்பித்தனர்.

கோவர்த்தன், விழா என அழைக்கப்படும் நாள் அன்று, பசும் சாணத்தில் மலையைப் பிடித்து வைத்து, அதனருகில் கிருஷ்ணனை வைத்து பாட்டுப் பாடி பூஜை செய்து, வீடுகளில் 9 பதார்த்தங்களை செய்து நைவேத்யம் செய்வர்! கோயில்களில் 56 பதார்த்தங்களை செய்து படைத்து, பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்குவர். இதனை ஆன்னகூட் என அழைப்பர். ஆன்னகூட் என்றால் மலைபோல் குவி என பொருள். இப்படி ஏராளமாய் வைப்பதை மலைபோல் வைத்துள்ளனர் எனக் கூறுவதுண்டு.

கோவர்த்தன மலை 8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. சுற்றி வந்தால் 21 கிலோமீட்டர். சுவாமி நாராயண் கோயில்கள் மடங்களில் அன்னகூட் ரொம்ப விசேஷம். வடநாட்டில் கிருஷ்ணன் – ராதா கோயில்களில் அன்னகூட் கட்டாயம் உண்டு.

குஜராத் வகோதரா அட்லாடிரா சுவாமி நாராயண் கோயிலில் 2019ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி 3500 பண்டங்களை வைத்து மலைபோல் பரப்பி, பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கி, புதிய கின்னஸ் சாதனை செய்துள்ளனர். அன்று விஸ்வகர்மாக்களும் தங்களுடைய ஆயதங்களை வைத்து பூஜிப்பதும் உண்டு. இந்த வருடம் அக்டோபர் 25ம் தேதி கோவர்தன் பூஜா மற்றும் அன்னகூட் நடக்கிறது.

- ராஜிராதா, பெங்களூரு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com