
- ஆர். பிரசன்னா ஸ்ரீரங்கம்
1. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் 'ஆப்பு' - அது என்ன?
2. இனிப்பு என்றாலும் இதில் காரம் இருக்கும் - அது என்ன?
3. இந்த ஆட்டம் காதைக் கிழிக்கும் - அது என்ன?
4. தீபாவளியன்று பெரியவர்களிடம் வாதம் செய்யக் கூடாது. இந்த வாதம் வாங்க வேண்டும் - அது என்ன?
5. பூக்களைத் கொடுத்தாலும், வெடிகளைத் தொடுத்தாலும் பெயர் என்னவோ இதுதான் - அது என்ன?
6. தையல்காரருக்குப் பிடித்த வெடி - அது என்ன?
7. வருமுன் காக்கும் மருந்து வருடத்திற்கு ஒரு முறை சாப்பிடும் மருந்து - அது என்ன?
8. பெருமாள் கையில் இருக்கும் மத்தாப்பு - அது என்ன?
9. மாட்டு வண்டிக்காரரிடம் இருக்கும்; தீபாவளியன்று குழந்தைகள் கையிலும் இருக்கும் - அது என்ன?
10. பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை; டி.வி.யில் இது இல்லாமல் தீபாவளியும் இல்லை - அது என்ன?
11. செடி கொடிகளில் மட்டுமின்றி, தீபாவளி சமயத்தில், பத்திரிகைகளிலும் மலரும் - அது என்ன?
12. வாலில் நெருப்பு; வானில் பறப்பு - அது என்ன?
ஹாய் வாசகீஸ்,
என்னடா விடுகதைகள் இருக்கு… விடைகளைக் காணோம்னு யோசிக்கிறீங்களா? அடுத்தடுத்து இரண்டு இதழ்கள் தீபாவளி சிறப்பிதழ்கள்.
அடுத்த இதழில் விடுகதைகளுக்கான விடைகள்… கொண்டாட்டம் தொடங்கியாச்சு…
ஷாப்பிங்? இந்த தீபாவளிக்கு மார்க்கெட்டில் என்ன லேட்டஸ்ட்? ஸ்பெஷல்? உங்க ஷாப்பிங் அனுபவங்களை தகுந்த புகைப்படங்களுடன் mangayarmalar@kalkiweekly.com email முகவரிக்கு அனுப்புங்களேன்.