
ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி, மங்கையர் மலரில் பதினேழாவது ஆண்டாக நடைபெறுகிறது. தன் மனைவி ஜெயஸ்ரீயின் பெயரில் இச்சிறுகதைப் போட்டியை நடத்திவரும் திரு.ராஜகோபாலன் அவர்களுக்கு ‘மங்கையர் மலர்’ சார்பாக நன்றிகள் பல.
கடந்த வருடங்களை விட இந்த வருடம் போட்டிக்கு வந்த கதைகள் மிக அதிகம் என்பதோடு, வித்தியாசமான கதைக் களங்களுடன், புதுமையான கருத்துகளைத் தாங்கி ஏராளமான கதைகள் வந்திருந்தன. இப்போட்டியில் ஆண்களும் கலந்து கொண்டது சிறப்பு.
பெண்களுக்காக நடத்தும் போட்டி என்பதால் பெண்களைத் தியாகச் செம்மல்களாகவும் சேவைத் திலகங்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் கதைகளாக எழுதாமல், யதார்த்தமான கதைகளும், சமூகச் சிந்தனையைத் தூண்டும் கதைகளும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தும் கதைகளும் அதிக அளவில் வந்திருந்தன. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1. ஜீவன் – சந்துரு மாணிக்கவாசகம், சென்னை
2. உடன் இருக்கும் கடவுள்கள் – சகா, பொள்ளாச்சி
3. தாயுமானவரின் மகள் – ஜெயஸ்ரீ கோபால கிருஷ்ணன், கும்பகோனம்
4. மனைவி அழகானால் – விஜயலக்ஷ்மி, மதுரை
5. தகர்க்கப்பட்ட தடுப்புச் சுவர்கள் – நாமக்கல் வேலு, கோவை
6. பாதகம் செய்பவரைக் கண்டால் – வி.ஜி.ஜெயஸ்ரீ, சென்னை
7. காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும் – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு
8. தொடுகை – லலிதா சங்கர், சென்னை
9. பரீட்சைக்கு நேரமாச்சு – உமா ரவி, ஹைதராபாத்
10. வசந்தம் வரும் – விஜி ரவி, ஈரோடு
11. மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் – எஸ்.ராமன், சென்னை
12. அப்பாவின் தோட்டம் – ப்ரஸன்னா வெங்கடேஷ் – நவி மும்பை
நடுவர்கள்:
முதல் சுற்றுத் தேர்வு:
இறுதிச் சுற்றுத் தேர்வு:
நடுவர்களுக்கு நன்றி!