
-எஸ். ராஜம் , ஸ்ரீரங்கம்
கீரை காரப்பாட்டி
காய்கறித் தாத்தா
பூக்கார அம்மா
பஞ்சுமிட்டாய் மாமா
இவர்கள் உறவினர்கள்
இல்லையென்றாலும்
உறவுமுறை பெயர்கள் உண்டு
வீட்டில் கிடையாது
பாட்டி, தாத்தா, அத்தை
உறவுகள் இப்போது...
********************************
புருஷன் உயிர் பறிக்குமாம்
பூராடம் நட்சத்திரம்
மூலம் மாமனாருக்கு ஆகாது
ஆயில்யம் மாமியாருக்கு ஆபத்து
கேட்டை மூத்தவனுக்கு கேடு
எந்த நட்சத்திரமானாலும்
எல்லாமே பெண்களுக்கு மட்டும்
ஒரு தோஷமும் இல்லை ஆண்களுக்கு
வானத்து நட்சத்திரங்களிலும்
ஆணாதிக்கம் தான்.
********************************
அலட்சியம் செய்யாதீர்கள்
அறுவை என்று
பெரியவர்கள் பேச்சை
அவர்களின் அனுபவங்கள்
உங்களுக்குப் பாடங்கள்
உங்கள் வயதைக்
கடந்து வந்தவர்கள் அவர்கள்
அந்த வயதை
அடையப் போகிறவர்கள் நீங்கள்
செவிகளை மூடாதீர்கள்
மனதையும்தான்
இளைஞர்களே...