
அற்பணித்த தேவதை
அலங்காரம் பண்ணமாட்டாள்
ஆடம்பரம் தேடமாட்டாள்...
பிறரின் அலங்கரிப்புக்கும்
ஆடம்பரத்திற்கும் தன்னை
அற்பணிப்பாள் – ‘கண்ணாடி
வறுமை போக்கிய வானம்
வறுமையைப் போக்குகிறேன்
வாக்காளர்கள் மத்தியில்
ஆயிரமாயிரம் சின்னங்கள்!
ஆனால் – வயிறார சோறு போடும்
ஏழைகளின் எளிய சின்னமாய்
வந்தவளே! ‘வான மழை...’
- ப. அம்பிகா கேசவன், பழனியாபுரம்.
வறண்டது நதி
நதியில் நீரில்லை
வறண்டது
மனமோ வலித்தது
நதியில் வரிசையாக
நின்றன
மணல் லாரிகள்!
காலிக் குடம்
தண்ணீர் லாரி
சாலையில் கவிழ்ந்தது
வீதியெங்கும் ஈரம்
வீதியில் காத்துக்கிடக்கிறார்கள்
காலிக் குடத்துடன்
பெண்கள்?
-ஜி. பாபு, திருச்சி