ஓவியம்: பிரபுராம்
“நான் உங்களைக் காதலிக்கிற விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சு போச்சு!”
“என்ன சொன்னாங்க?”
“ஐய்யோ பாவம்... எவ்வளவு கஷ்டப்படப்போறானோன்னு சொன்னாங்க!”
- சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா
--------------------------------------------------------------------------
"ஏங்க, வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கம்மா வருத்தப்பட்டாங்க...”
"நீ என்ன சொன்னே?"
"வீட்டுலே வேலையும், ஆபீஸ் வேலையோட வீட்டு வேலையும் செய்யறாரேன்னு பெருமையோடு சொன்னேன்!”
--------------------------------------------------------------------------
"கமலா ஏன் எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழறே?"
"நீங்கதானே நான் கோபப்படும்போது ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னீங்க!"
-எஸ்.மாரிமுத்து, சிட்லபாக்கம்
--------------------------------------------------------------------------
"சிஸ்டர், என்ன பண்றீங்க?”
"சாரி சார். வாய்னு நினைச்சு, தர்மாமீட்டரை மூக்குல வச்சிட்டேன்! எல்லாம் இந்த கொரோனாக்கு டெஸ்ட் பண்ணின பழக்கம்தான்!”
- வி. ரேவதி, தஞ்சை
--------------------------------------------------------------------------
ரோட்'ல ஒருத்தர் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனார்.
அதைப் பார்த்த இன்னொருத்தர், ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்க?ன்னு கேட்டார்.
அதுக்கு அவர், என்னங்க பண்ணுறது, கடைல ஓடிச்சா கடைக்காரர் திட்டுறார், ஒடிக்காம வீட்டுக்குப் போனா, ஏன் ஒடிச்சுப் பாக்காம வாங்கி வந்தீங்கன்'னு வீட்ல திட்டுறாங்க, அதான்ங்க...!
-சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்.