மறந்து போனேனே!

மருத்துவம்
 மறந்து போனேனே!

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன், நரம்பியல் நிபுணர்

ஞாபக மறதி என்று நாம் சொல்லும்  “Dementia” , பொதுவாக 60 வயசுக்கு மேல் வரக் கூடிய நிலை. ஒரு வேலையில் ஈடுபடும்போது கவனம் செலுத்த முடியாமல் இருத்தல், அதில் சரியான காரணத்தோடு தீர்மானிக்க முடியாத குழப்பம், செயல் மாறுபாடுகள், மற்றவரோடு தொடர்புகொள்வதில் சிக்கல், பேசும்போது பாதிப்பு, படிப்பதைச் சரியாகக் கிரகிக்க முடியாமல் போதல், இவையெல்லாம் டிமென்ஷியாவின் பாதிப்புக்களே.

 அறிகுறிகள் என்ன?

சிந்தனைகளில் மற்றும் உடலில் ஒருங்கிணைப்பு (co ordination) சரியாக இருக்காது. முதலில் சின்னச் சின்ன மறதிகளில் ஆரம்பிக்கும்.

காலையில் செய்தது மறந்து போகும். ஆனால் சிறு வயது நினைவுகள் இருக்கும்.அது மறைய வெகு நாளாகும்.

முதலில் "New registration memory” அல்லது Shorttime memory என்னும் தற்காலிக ஞாபக மறதியில்தான்  பிரச்னைகள் ஆரம்பமாகும். ஒரு இடத்துக்குச் சென்றால் திரும்பி வரும் வழி மறந்துபோகும். பர்ஸ் போன்ற முக்கியமான பொருட்களை வைத்த இடம், கட்ட வேண்டிய பில்கள், பிறரைச் சந்திக்கக் கொடுத்த நேரங்கள் போன்றவை  மறந்துபோகும்.

 டிமென்ஷியாவில் பல வகைகள் இருக்கின்றனவா?

மாம். பல வகைகள் உண்டு. பெருமளவில் காணப்படுவது இரண்டு வகை. அல்சைமர் டிமென்ஷியா மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா.

 அல்சைமர் எதனால் ஏற்படுகிறது?

லகளவில் நாம் பொதுவாகப் பார்ப்பது இந்த வகைதான். மூளையில் ஆங்காங்கே சில வழக்கத்துக்கு மாறான (Abnormal Proteins) புரோடீன்கள் தங்கிவிடும்போது  அங்குள்ள நரம்பு மண்டலத்தின் நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு அல்சைமர் வருகிறது. இந்த பாதிப்பு மெதுவாக படிப்படியாக (Gradual) ஏற்படும். டிமென்ஷியா நோயாளிகளில் அனேகமாக 60 முதல் 80 சதவீதம் வரை இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களே..

 வாஸ்குலர் டிமென்ஷியா என்றால் என்ன டாக்டர்?

த்த ஓட்டம் சரியில்லாமல் இருந்து, அடைப்பு (Stroke) வந்தவர்களுக்கு, இந்த வகை டிமென்ஷியா வரலாம். இந்த வகை டிமென்ஷியாவில் மறதியானது ஒரே சீராக மெதுவாக வராமல் படிப்படியாக பாதிப்புக்கள் வரும். (Stepwise regression)

 இவற்றைத் தவிர...?

ஃப்ரன்டோ டெம்பாரல் (Frontotemporal dementia), லூயி பாடீஸ் (Dementia with Lewy bodies (DLB)) தவிர, நார்மல் ப்ரெஷர் ஹைட்ரோசெஃபலஸ் (Normal pressure hydrocephalus) மற்றும்  பார்க்கின்சன்ஸ் (Parkinson's disease) நார்மல் ப்ரெஷர் ஹைட்ரோசெஃபலஸ் எதனால் ஏற்படுகிறது என்றால் மூளைக்குள் செல்லும் CSF (Cerebrospinal fluid) என்னும் திரவம் சரியாக செல்லாததால்  ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உண்டாவது. இதற்கான சிகிச்சையில், CSF திரவம், வெளியே எடுக்கப்பட்டு, ஒரு சிறு ட்யூப் (VP Shunt) பொருத்தப்படுகிறது.  இதனால் நோயாளிக்கு டிமென்ஷியாவின் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.

 டெமென்ஷியாவை எப்படி கண்டறிவது?

முதலில் குடும்பத்தினர், தன் வீட்டு முதியவரிடம் எற்படும் மாறுதல்களைக் கவனிக்க வேண்டும். ஞாபக மறதி, குழப்பம், பேசும்போதே வார்த்தைகளை மறந்துபோவது, தினசரி வேலைகளில் ஈடுபாடு இல்லாதிருத்தல், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்து வர வேண்டும்.

 இதற்கான சோதனைகள் என்னென்ன?

இதற்கென்று சில அறிவாற்றல் சோதனைகள் (Cognitive Tests) செய்கிறோம். மினி மென்டல் (Mini-mental state examination (MMSE)), மான்ட்ரீல் அஸெஸ்மென்ட் (Montreal cognitive assessment (MOCA)), மற்றும்  Addenbroke’s cognitive assessment போன்ற சோதனைகள்மூலம் மூளையின் செயல்பாடுகள் சோதிக்கப்படுகின்றன.

நினைவுத் திறன், செயல்பாடுகளின் வேகம், கவனம், மொழி, இவற்றுக்கான மருத்துவ மற்றும்  மனோதத்துவ சோதனைகள் இவை. அதற்கான ஸ்கோர்கள் கணக்கிடப்படுகின்றன.  இதனால் டிமென்ஷியா ஆரம்ப நிலையா, ஓரளவுக்கு அதிகரித்த  அல்லது முற்றிய பாதிப்பா என்று தெரிந்துகொள்கிறோம்.

அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் செய்து தைராய்ட், ரத்தத்தில் எலக்ட்ரோலைட்ஸ் பி 12 போன்றவை  குறைவாக உள்ளதா என்றும்  சோதிக்கிறோம்.

 இமேஜிங் சோதனைகளும் உண்டல்லவா?

சி டி ஸ்கேன், எம் ஆர் ஐ எடுக்கப்படும். குறிப்பாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யும்போது, உறுப்புக்களின் அமைப்பில் மாற்றம்  இருக்கிறதா, டிமென்ஷியாவுக்கு வேறெதுவும் காரணமா என்று தெரிந்துகொள்ள முடியும்.  சில சமயங்களில் மெடபாலிக் ஸ்கேன் செய்யப்படும். மூளையின் செயல்பாடுகளைச் சோதிக்கும் டெஸ்ட் இது. SPECT மற்றும் Pet ஸ்கேன் போன்றவை மூலம் நீண்ட நாளாக இருக்கும் அறிவாற்றல் பாதிப்புக்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

 டிமென்ஷியாவை எப்படி குணப்படுத்தலாம்? சிகிச்சைகள் என்ன?

ரம்ப நிலையில் மாத்திரைகள் தரப்படும்.  இதனால் ஞாபக மறதி, மூளையின் செயல்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். இதனை Neurodegenerative condition என்று குறிப்பிடுகிறோம். சிலருக்கு வேகமாக குணம் தெரியும். சிலருக்குச் சற்று மெதுவான முன்னேற்றம் இருக்கும்.  தூக்கம் வராமல் இருந்தால் அதற்கான சிகிச்சையும் தருகிறோம். முற்றிய நிலையில் டிமென்ஷியா இருந்தால் மருந்துகள் மட்டுமே உதவியாக இருக்காது.  எனவே அதற்கேற்றபடி சிகிச்சைகள் தர வேண்டும். உடல் தசைகளின் செயல்திறன் (Motor Skills), முழுங்கும் சக்தி இவற்றில் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. நடப்பது, எழுந்திருப்பது, குளிப்பது போன்ற செயல்களைப் பிறர் உதவியின்றி செய்ய முடியாது.

தவிர ரத்த அழுத்தம், சர்க்கரை, ஸ்ட்ரோக் போன்றவை இருந்தால் டிமென்ஷியா வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மற்றும்  புகைபிடித்தலை விட்டு விடுதல், உடல் கொழுப்பை அதிகரிக்க விடாமல் இருத்தல் இவை மிகவும் அவசியம். பொதுவாக மூப்பு மற்றும் பாரம்பரியம் காரணமாக வரும் டிமென்ஷியாவை சிலரால் தவிர்க்க முடியாமல் போகலாம்.

ஆனால், மூளையில் பாதிப்புக்களைக் குறைக்கவும் டிமென்ஷியாவைத் தடுக்கவும் மருத்துவர்கள்  சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்கள்.

எத்தனை வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறையாமல் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுதல் இவற்றை விடாமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மூளைக்கு வேலை தந்து ஆக்டிவாக வைத்துக் கொள்வதோடு உடற்பயிற்சி மூலம் உடலையும் சரியானபடி பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது மூளைக்கு சரியானபடி ரத்தம், ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 உணவு பற்றி...

ணவிலும் கவனம் அவசியம்... மெடிடரேனியன் டயட் (Mediterranean diet) என்பது, சிறுதானியங்கள், கீரை, காய்கறிகள், பழங்கள், மீன், சிறிதளவு ரெட்மீட் (red meat) பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்வகைகள், ஆலிவ் எண்ணை போன்றவற்றை உள்ளடக்கியது. இவைஎல்லாம் மூளைக்கு பாதுகாப்பு தரும் உணவு.

 குணமாகும் வாய்ப்பு

து பற்றிய விழிப்புணர்வை நோயாளி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். எதனால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களின் முழு ஒத்துழைப்புடன், மருத்துவ உதவிகளுடனும் டிமென்ஷியாவை கட்டுப்படுத்தி வாழ முடியும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com