சின்ன சின்ன பொம்மை… சீருடைய பொம்மை

சின்ன சின்ன பொம்மை… சீருடைய பொம்மை
Published on

வராத்திரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நவராத்திரியில் தொடங்கி விஜயதசமி வரையிலான கொண்டாட்டங்களும், கொலு பொம்மைகளும், அத்தகைய கொலு பொம்மையை உருவாக்கிய மாநிலங்களும், பொம்மைகளைப் பற்றியும் அறிவோமாக!

மத்தியப் பிரதேசம்:

கொலுவில் அதிகம் இடம் பிடிப்பவை ‘ஜபவா’ பொம்மைகள். பஞ்சம் விரித்தாடும் ஜபவா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசிகள் கைகளால் களிமண், காகிதக்கூழ், பஞ்சு கொண்டு உருவாக்கப்பட்டு, பெயிண்டிங்கில் கண், உதடுகள், கை நகங்கள் வரையப்பட்டு நிஜ ஆடைகள் உடுத்திச் செய்யப்படுகிறது.

குஜராத்:

மரத்தில் செய்யப்படும் ‘கார்பா பொம்மைகள்’ உழவர்களின் நடனம் என்று பெயர் பெற்ற கார்பா நடனமாடியபடி இருக்கும் ஆண் – பெண் ஜோடிகள்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் செய்யப்படும் ‘கத்பத்லி’ பொம்மைகள் 1000 வருட பழைமையான மரத்தில் உருவாகப்பட்டு ராஜஸ்தானின் பாரம்பரிய உடை மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. ஆண் – பெண் ஜோடியாக நடனமாடுவது போலவும், வாத்தியங்கள் வாசிப்பது போலவும் உருவாகப்படும் இந்த வகைப் பொம்மைகள் நவராத்திரிக் கொலுத் தவிர ‘பொம்மலாட்டத்துக்கும்’ பயன்படுத்துகிறார்கள்.

ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூரில் உருவாக்கப்படும் பளிங்கு மாவு (மார்பிஸ் டஸ்ட்) பொம்மைகள் செம்பு, வெள்ளி கொண்டு உருவாக்கப்படும். மீன்காரி, ஓட்டகங்கள், மயில், கிளி, யானை பொம்மைகளும் கொலுவில் வைக்கப்படுகின்றன.

மேற்கு வங்காளம்:

மேற்கு வங்கம் கிருஷ்ணா நகரில் உருவாக்கப்படுவது ‘குர்னி பொம்மை’கள் களிமண், காகிதக் கூழ் கொண்டு தயாரிக்கப்படும் குர்னி பொம்மைகளின் சிறப்பு அவற்றின் தத்ருபமான வடிவங்கள்தான்.

ஆந்திரா:

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் உருவாக்கப்படும் ‘கொண்டப்பள்ளி பொம்மைகள்’ மரத்தில் உரவாக்கப்படுகி்ன்றன. கொண்டப்பள்ளி பொம்மைகளில் மகாபாரத கதைகள், தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், விவசாயம், காய்கறி விற்கும் மக்களின் பொம்மைகள் பிரபலமானவை.

விசாகப்பட்டினம்:

சித்தூர் பகுதியில் முக்கியமாக திருப்பதி, திருச்சானூரில்தான் அதிக அளவு மரப்பாச்சி பொம்மைகள். ‘தம்பதி பொம்மலு’ என்று அழைக்கும் ஜோடி மரப்பாச்சி பொம்மைகள் விதவிதமான அலங்காரத்துடன் கொலுவில் இடம் பெறுகின்றன.

தஞ்சாவூர் (தமிழ்நாடு):

தஞ்சாவூரின் பாரம்பரிய அடையாளமான ‘தலையாட்டி பொம்மைகள்’ ஒரு காலத்தில் காவிரி ஆற்றின் களிமண், காகிதக்கூழ், ஜவ்வரிசிக் கூழ் கொண்டு உருவாக்கப்பட்டன. இபப்போது களிமண்ணுக்குப் பதிலாக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உபயோகப்படுத்தப்படுகிறது. தாதாதா பாட்டி பொம்மை, பொய்க்கால் குதிரை ஜோடி, பாவாடை நாட்டியப் பெண் பொம்மைகள் பிரபலமானவை.

சென்னை:

சென்னையில் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் கொண்ட பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கொசப்பேட்டை கொலு பொம்மைகளில் குழந்தை கண்ணன், குழலூதும் கிருஷ்ணர், அஷ்டலக்ஷ்மிகள், தசவதாரங்கள், தாமரை மீதமர்ந்த லட்சுமி தேவி, முப்பெரும் தேவியர், சிவபெருமான் பார்வதி உள்ளிட்ட பொம்மைகள் பிரசித்தம்.

கேரளம்:

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மரம் மற்றும் உலோகம் கலந்து உருவாக்கப்படும் பொம்மைகள், கொட்டாங்குச்சியில் செய்யப்படும் பொம்மைகளும் பிரசித்தமானது. காட்டுயானை, பட்டத்து யானை, கதகளி பொம்மைகள், குழந்தை கிருஷ்ணன், இந்த வகைப் பொம்மைகளை கொலுவில் காணலாம்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் ராம் நகர மாவட்டத்தில் உள்ள கொம்பே கலா நகரா, பொம்மைகளின் ஊர் என்று அழைக்கப்படுகிற சென்னைப் பட்டணத்தில் உருவாக்கப்படும் இந்தப் பொம்மைகள் திப்புச் சுல்தானால் பாரசீகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கைவினைக் கலைஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பொம்மைகள் மரம் மற்றும் உலோகம் கொண்டு உருவாக்கப்படும். இந்த வகைப் பொம்மைகளில் தெய்வ உருவங்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய மங்கைகள் பாடம் படிக்கும் குழந்தை போன்ற பொம்மைகள் அதிகமாக கொலுவில் இடம் பிடிக்கி்ன்றன.

- என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி

 -----------------------------------------------------------------------------------------------------------

* ராஜஸ்தானில் சுடவைக்காத மண்ணில் பொம்மைகள் செய்து 'மதுபாணி பொம்மைகள்' என விற்பர். புல்லிலேயே செய்த பொம்மைகளும் இங்கு பிரபலமாக உள்ளது.

* ஆந்திரா, கொண்டப்பள்ளியில் பசும் சாணம், மரத்தூள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்படும்.

* பேப்பர்மெஷ் பொம்மைகள் சீனாவில்தான் முதன்முதலில் செய்யப்பட்டன.

* கொகஷி என்பவை ஜப்பானிய பொம்மைகள். இவை மரத்தைக் கொண்டு கைகளால் செய்யப்படுபவை. பெரிய உருண்டை தலை, கை, கால் இல்லாத உருளை உடல் அதில் வண்ணக்கோடுகள் தீட்டப்பட்டிருக்கும். கொகஷி பொம்மைகள் வீட்டில் வைத்திருந்தால் தீ விபத்து ஏற்படாது என்று நம்புகின்றனர்.

 * கச்சினா என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொம்மைகள். இலவ மரத்தால் அதன் வேர் பகுதியைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள். வட அமெரிக்கர்கள் தங்களின் மூதாதையர்களை அவர்கள் குழந்தைகளுக்கு கச்சினா பொம்மைகள் மூலம் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மைசூரில் வீடுகளில் மரப்பாச்சி பொம்மைகளையே வைப்பர்.  அவற்றிற்கு ஆடை அலங்காரம் செய்து வழிபடுவர்.

* மைசூர் தசராவும் கொலுவும் உலக பிரசித்தி பெற்றது.

இவ்வாறு புகழ்பெற்ற நகரங்கள், அதன் பாரம்பரிய பொம்மைகள் என தசரா என்றாலே அம்மனின் அருளும், ஆனந்தமுமே பேருவகை தரவல்லது.

 -                     மகாலட்சுமி சுப்பிரமணியன் , காரைக்கால்

-----------------------------------------------------------------------------------------------------------

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com