
வாசகர் ஜமாய்க்கிறாங்க!
-சுந்தரி காந்தி, பூந்தமல்லி
கார்டூன்ஸ்; பிரபுராம்
இதெல்லாம் இல்லையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது. ஒரு பெருமை , ஒரு கெளரவம்.
வாக்குவம் கிளீனர்
கையால் சுத்தம் செய்வதுபோல் வராது. அதை வாங்கிய பல வீடுகளில் அது வசதியாய் பரண்மேல் தூங்கி கொண்டிருக்கிறது. இரண்டுமுறை உபயோகித்த பிறகு நமக்கே போரடித்துவிடும். வேண்டுமானால் மாப் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் மிக இலகுவனது.
மைக்ரோ ஒவன்
அப்பளம், வத்தல் பொரிபதற்கு ரசம், சாம்பார்சூடு செய்வதற்கும் ஒரு இருபது ஆயிரத்தில் ஒரு ஒவன் நிச்சயம் சமையலறையில் வேண்டும். அதுவும் கிரீல் இருந்தால் நிச்சயம் பீட்சா, கேக் வருடத்தில் ஒரு முறை நிச்சயம் செய்யலாம்.
தையல் மெஷின்
இதுவும் இருத்தல் சிறப்பு கிழிந்த துணி நன்றாக தைக்கலாம்.எம்ராய்டரி, டிசைன் பிளவுஸ் தைக்கலாம் என்று கனவுகளோடு அதற்கு மோட்டார் வாங்கி ஆயூத பூஜைக்கு துடைத்து வைக்கிறோம்.
பிரட் டோஸ்டர்
இதுவும் ஒரு எக்ஸிபிஷனில் பார்த்து பரவசமாகி வாங்கி மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிச்சயம் பயன்படுகிறது.
வாஷிங் மிஷன்
அதிக நேரம் ஆகிறது, தண்ணீர் அதிகம் செலவாகிறது என்ற போதிலும் இதுவும் நம்ம வீட்டில் உண்டு. பெட்சீட், போர்வை துவைக்க நல்ல பயன்படும்.
மற்ற நேரங்களில் பெரும்பாலும் கையால் தான் துவைக்கிறோம்.
ஹேர் டிரையர்
இதுவும் அதி முக்கியமான,தேவையானது என்று வாங்கி அவசரமாக ஏதாவது கல்யாணத்துக்கு போகும் போது ஆறு மாததிற்கு ஒரு முறை நிச்சயம் பயன்படுகிறது.
வெஜிடபிள் கட்டர்
வெங்காயம் கண்ணீர் வராமல் வெட்டலாம், கோஸ் துருவலாம் ,பீன்ஸ் நறுக்கலாம் நேரம் மிச்சமாகும் என "ஆன் லைன்" வாங்கினது "ஆப் லைன்ல" (வாங்கின ) வந்த வீட்டுக்காரர் காய்கறி வெட்டி தருவதால் பொங்கல் தோறும் எடுத்து துடைத்து வைக்கிறோம்.
இது போல உங்கள் வீட்டிலும் நிறைய இருக்குமே .