அனுபவங்கள் உணர்த்திய பாடங்கள்!

அனுபவங்கள் உணர்த்திய பாடங்கள்!
Published on

- எஸ். விஜயலட்சுமி, ஈரோடு

அனுபவம் – 1 உணவில் மாற்றம் தேவை

நாற்பத்தைந்து வயதான என் அக்காவிற்கு சில மாதங்களாக மாதவிலக்கு வராமல் போகவே, பெண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டார். கருப்பையில் நீர்க்கட்டி உருவாகியிருப்பது தெரிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தினமும் ஒரு முட்டையும் வாரம் இரண்டு முறை பிராய்லர் கோழியும் சாப்பிடும் வழக்கம் கொண்ட அக்காவை உணவில் மாற்றம் செய்யுமாறு கூறினார் மருத்துவர். நிறைய காய்கறிகள், கீரைகள், மாதுளம் பழங்கள் சாப்பிடுமாறும், பிராய்லர் கோழியை அறவே தவிர்க்கும்படியும் கூறினார். நாற்பதைத் தாண்டிய தோழிகளே கவனம்.

அனுபவம் – 2 சங்கடத்தில் முடிந்த ஆன்லைன் பர்ச்சேஸ்

கடந்த மாதம் என் மகளின் பிறந்த நாளுக்காக ஆன்லைனில் டாப்ஸ்சும், ஸ்கர்ட்டும் ஆர்டர் செய்தோம். பத்து நாட்களுக்குப் பின் வந்த பார்சலை பணம் கட்டி வாங்கிப் பிரித்துப் பார்த்து அதிர்ந்தோம். வெறும் டாப்ஸ் மட்டும், அதுவும் நாங்கள் ஆர்டர் செய்யாத வேறு கலரில் வந்தது. அந்த நிறுவனத்திற்கு போன் செய்து விசாரித்தோம். சுமார் நாற்பது நிமிடங்கள் நீண்ட விசாரணையின் முடிவில் அதை திருப்பி அனுப்புமாறு கூறினர். அப்படியே செய்தோம். அடுத்த இரண்டு நாட்களில் பிறந்த நாள் என்பதால் உள்ளூர் கடைக்கு சென்று அவசரமாக வேறு உடை வாங்கினோம். முதலிலேயே இப்படி செய்திருக்கலாமே என்று தோன்றியது.                           

அன்பு வாசகீஸ்,

சகோதரி விஜயலட்சுமிக்கு ஏற்பட்டது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். அவை நல்லதொரு பாடத்தையும் உணர்த்தியிருக்கும். அவற்றை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமே… 50-60 வார்த்தைகளுக்கு மிகாமல் சுருக்கமாக எழுதி mangayarmalar@kalkiweekly.com மெயிலுக்கு அனுப்புங்களேன். எல்லோரும் பயனடையலாமே!

அன்புடன்

அனுஷா

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com