சாகம்பரி பிரசாதம்!

தசரா ஸ்பெஷல்!
சாகம்பரி பிரசாதம்!
Published on

சக்கானம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப், காரட், உருளை, கத்தரிக்காய், சுரைக்காய், அவரைக்காய், கோவைக்காய், குடமிளகாய் எல்லாவற்றையும் அரிந்து – தலா கால் கப், பச்சை பட்டாணி – கால் கப், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன், துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இதழ்கள், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1.

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும், சீரகம், முந்திரி, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை, மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரித் துண்டுகள் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி பட்டாணியும் உப்பும் சேர்த்து, அரிசியையும் சேர்த்து இரண்டரை கப் நீர் ஊற்றி மூடி போட்டு வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி ஆவி வெளியேறியதும் மல்லித்தழை தூவி எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து அம்மனுக்குப் படைக்கவும்.

குறிப்பு:

‘சாகம்’ என்றால் காய்கறி என்று பொருள். அவற்றை ஏந்திய தேவியை சாகம்பரி என்றனர். திருக்கோயிலெங்கும் பசுமையான காய்கறிகளையும், கனி வகைகளையும் கொண்டு அலங்கரிக்கின்ற நிறைமணி விழா புரட்டாசிப் பெளர்ணமியன்று சாகம்பரிக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே நடைபெறுகிறது.

- எஸ். நிரஞ்சனி, சென்னை

அடுத்த இதழ்  24-09-2022 நவராத்திரி சிறப்பிதழாக மலரவிருக்கிறது வாசகர் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. mangayarmalar@kalkiweekly.com என்ற இ மெயிலுக்கு அனுப்புங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com