
“டாக்டரை பெட்ல வச்சுத் தூக்கிட்டுப் போறாங்களே...?”
“ஆபரேஷன் பண்ணப்போன டாக்டரை, அந்த பேஷண்ட் "என்னையா கொல்லப் பார்க்கிறே"னு செம்மயாத் தாக்கிட்டு ஓடிட்டாராம்!”
**********************************
“பஸ் டிரைவரைச் சினிமா தியேட்டர்ல ஆபரேட்டராப் போட்டது தப்பாப் போச்சு...”
“என்னாச்சு?”
“ரசிகர்கள் யாராவது விசில் அடிச்சா, உடனே படத்தை நிறுத்திடறார்!"
**********************************
“ஏங்க... நம்மப் பையனுக்கு எட்டு தோசை சுட்டுப் போட்டேன். ஆனா, அவன் ஆறுதோசைன்னு சொல்றான்!"
“சரி, விடுடி... எவ்ளோதான் ‘சுட்டுப்போட்டாலும்’ அவனுக்குக் கணக்கு வராது!''
**********************************
“என்ன கமலா, வழக்கமா இட்லியில ஒரு ஓட்டைத்தான் போடுவே. இன்னைக்கு இவ்ளோ ஓட்டை இருக்கு?"
“கிண்டல் பண்ணாதீங்க... இது இடியாப்பம்!"
**********************************
“எதிர்க்கட்சித் தலைவர் எதையும் முறையாகத்தான் செய்வார்."
“அப்படியா?"
"ஆமா! இப்போ கூடப் பாருங்க... உருவ பொம்மையை எரிக்கிறதுக்கு உங்களை அளவு எடுக்க வர்றார்னா பார்த்துக்குங்களேன்!"