spot_img
0,00 INR

No products in the cart.

நாலு நாளு பொங்கலுக்கு நல்லதா நாலு பாட்டு!

– ஆர்.மீனலதா, மும்பை
  ஓவியம் : பிள்ளை

‘தை – தை! தா – தை! தை – தை!’
பாடி, ஆடிக் கொண்டிருந்தாள் ஆண்டாளு.
“ஆண்டாளு…! ஆண்டாளு!” வள்ளி குரல் கேட்டு வெளியே வந்த ஆண்டாளு, “அட, வள்ளி! நடு – நடுவுல காணாமப் போயிடுதே! எப்ப ஊர்லருந்து வந்தாப்ல?”
“நேத்துதான்! ஆமா! உள்ளாற யாரு? தை – தைன்னு சத்தம் கேட்டிச்சே!
“நான்தான்!”
“நீயா?”
“ஏன்? ஆடப்படாதா?”
‘‘என்ன விஷயம்? ஆடிக்கிட்டும், பாடிக்கிட்டும் இருக்கே!”
“பொங்கல் வருதுல்ல! அதான் ச்சும்மா ஒரு பயிற்சிக்கணக்கா…!”
“பொங்கலைப் பத்திப் போனவாட்டி நீ சொன்னதுல பாதி மறந்து போச்சு. இப்ப விவரமா சொல்லேன் ஆண்டாளு!”
“இதே வேலயாப் போச்சு!”
“இந்த வாட்டி மட்டும்தான் சொல்லுவேன். நல்லா கேட்டு நெனவு வெச்சுக்க. அடுத்த வாட்டி கேக்கக் கூடாது.”
“சரி! சரி!”
“மார்கழி மாசக் கடைசீ நாளு, குலதெய்வத்துக்கு பூசை போட்டு எல்லாரும் கும்பிடுவாங்க. இது போகிப் பண்டிகை!
மறுநாளு தை மாசம் பொறக்கையில, சூரியனை வணங்கிப் பொங்கலிடுவாங்க. இது பொங்கல் பண்டிகை.
மூணாம் நாளு மாடுகளை கும்பிடற மாட்டுப் பொங்கல்.
நாலாம் நாளு கன்னிப் பெண்களுக்கு காணும் பொங்கல். மொத்தம் நாலு நாளு.”
“அடி ஆத்தி! நாலு நாளு கொண்டாட்டமா? அப்ப நல்லா சோறு, பலகாரம் கெடைக்கும்னு சொல்லு!”
“தொண தொணக்காம கேளு ஆண்டாளு!”
“கிராமத்து தெய்வங்கள் நெறைய இருக்குல்ல?”
“தெரியும் ஆண்டாளு! சுடலை; கருப்பசாமி; முனியசாமி; ஐயனாரு; சங்கிலி கருப்பன்!”
“சரியா சொன்ன வள்ளி! அந்த சாமிகளுக்குப் படையல் போட்டு தாங்ஸ் சொல்லுவாங்க.”
“எப்படி சொல்லுவாங்க?”
“வீட்ட நல்லா சுத்தம் பண்ணி, மொழுகி, கோலம் போட்டு பொங்கலு வைப்பாங்க. சாமியை வேண்டிக்கிட்டு குலவை இட்டுப் பாடுவாக!”
“அது என்ன பாட்டு?”
“வெள்ளைக் குதிரைல வராரு ஐயனாரே!
வேகமா வாரும் ஐயனாரே!
எல்லைக் காவல் காக்கற ஐயனாரே!
எல்லாரையும் காத்தருள்வாய் ஐயனாரே!”
“அன்னிக்குத்தான் பழைய துணிகள், குப்பைகள் எல்லாம் எரிப்பாங்களா?”
“இல்லை! சுத்துச் சூழலைப் பாதுகாக்க இதெல்லாம் எரிக்கக் கூடாது. மனசுக்குள்ளாற இருக்கற கெட்ட எண்ணம்; அழுக்கு இதெல்லாம்தான் சுட்டுச் சாம்பலாக்கணும். நல்ல விதமா நெனைக்கணும். இத பல பேரு புரிஞ்சிக்கிட மாட்டேங்கறாங்க. பழசை நீக்கி புதுச நம்ம மனசுல ஏத்தணும்.”

“ரெண்டாம் நாளு…?”
“நாம உயிர் வாழ, பயிர் வெளையக் காரணமா இருக்கற, உதவி செய்யுற சூரியக் கடவுளுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்க பொங்கல் வெச்சுக் கும்பிடணும்.
அடுப்புக்கு சாணமிட்டு, கோலமிட்டு, பானையைச் சுத்தி மஞ்சள், குங்குமம் வச்சு, அதுக்குள்ளாற அரிசி, வெல்லம், ஏலக்காய் எல்லாம் போட்டு அடுப்பு மேல வெச்சு பக்கத்துல கரும்பு வெச்சு பொங்கலிடணும். அப்ப, ‘பொங்கலோ பொங்கல்’னு சொல்லி சந்தோசப்படுவாங்க. நெலத்துல வெளஞ்ச புதுக்காய்கறிகளைப் போட்டு ஒரு கொழம்பு வெப்பாங்க பாரு! ஜோரா இருக்கும்.”
“அடேங்கப்பா! இதுக்குப் பாட்டு ஏதாச்சும் உண்டா?”
“இல்லாமலா? அப்பத்தா கூட பாடும். கேளு…
“மார்கழி முடிஞ்சு போச்சு!
தை பொறந்தாச்சு! தங்கத்தை பொறந்தாச்சு!
முத்துச்சம்பா நெல்லுக் குத்தி
முத்தத்துல பொங்க வெச்சு,
செங்கரும்ப சாத்தி வச்சு,
செம்மாவுல கோலம் போட்டு
பொங்கலிடும் வேளையில
தை பொறந்தா! தங்கத்தை பொறந்தா!
பொங்கலோ பொங்கல்!”
“பாட்டு ரொம்ப நல்லா இருக்கு ஆண்டாளு. மூணாம் நாளு..?”
“வெவசாயத்துக்குத் துணையா இருக்கற மாடுகள குளிப்பாட்டி, அலங்கரிச்சு, குங்குமமிட்டு கும்புடுவாங்க. பொங்கல் இடுவாங்க. சல்லிக்கட்டு வெளயாட்டு நடக்கும். அப்ப காதல் செய்யற பொண்ணைக் கட்டிக்கிட, பலத்தைக் காட்ட, வீரமா பசங்க வெளயாடி, காளைய அடக்குவாங்க. மாடுகள் தெய்வம் மாதிரி. நல்லா பாதுகாக்கணும். இதுக்கும் பாட்டு இருக்கு… கேளு!”
“ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு!
சடபுட வேட்டு சடபுட வேட்டு!
துள்ளிக்கிட்டு பாயுது
தூர நில்லு! தூர நில்லு!
போட்டி ஆரம்பமாச்சு!
வேட்டியை வரிஞ்சு கட்டு!
கொம்புக் காளை! கொம்புக் காளை!
கண்ண கண்ண உருட்டிப் பாக்குது!
மடக்கி புடிச்சு, பணத்த எடுக்கணும்!”
“பாட்டு சூ…ப்பரு!”
“தாங்ஸ் வள்ளி! நாலாம் நாளு, ‘காணும் பொங்கல்’ கன்னிப் பொண்ணுக தல நெறைய பூ வெச்சு அலங்கரிச்சுக்கிட்டு பட்டாம்பூச்சி கணக்கா, தோழிகளோடு வெளில போவாங்க.
“மார்கழி மாசம் முப்பது நாளும் வூட்டு வாசல்ல சாணத்துல பிள்ளையார் புடிச்சு வெச்சு, தலைல பூ வைப்பாங்க இல்ல… அது அத்தனையும் சேத்து எடுத்துக்கிட்டுப் போய் கன்னிப் பொங்கலன்னைக்கு கன்னிப்பொண்ணுங்க ஆறு, குளத்துல கரைப்பாங்க. அங்கன விடலைப் பசங்க வருவாங்க. காதல்கூட சில பேரு செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. ச்சும்மா கல கலன்னு இருக்கும். கும்மியடிச்சுப் பாடுவாங்க.”
“அப்ப, கும்மிக்கும் பாட்டு உண்டா?”
“இல்லாமலா? இதோ…
“புள்ளயாரே! புள்ளயாரே!
புடிச்சு வெச்ச புள்ளயாரே!
மார்கழி மாச முச்சூடும் வாசல் தேடி
வந்தீகளே புள்ளையாரே!
இப்ப ஆத்தோடு போறீரே புள்ளையாரே!
அழகாகப் போறீரே புள்ளையாரே!
மொழங்காலு தண்ணீல
முழுகப் போறீரே புள்ளையாரே!
ஆத்தோடு போனாலும்,
அழகாகப் போய் வாங்க புள்ளையாரே!
பாட்டுப் படிச்ச பொண்ணுகள
பட்சமில்லாம காக்கணும் புள்ளையாரே!
கன்னிப் பொண்ணுகளுக்குக் கல்யாணம் நடக்கணும் புள்ளையாரே!
காலமெலாம் காத்து ரட்சிக்கணும் புள்ளையாரே!
“ஆண்டாளு! நீ பெரிய்…ய ஆளுதான்!”
“வள்ளி! மனச நல்லா வெச்சுக்கிடறது; கடவுளுக்கு தாங்க்ஸ் சொல்றது, பிராணிகளிடம் அன்பா இருக்கறது; பொண்ணுகளப் பாராட்டறதுன்னு எல்லா விசயமும் பொங்கல் பண்டிகைல இருக்கு. புரிஞ்சிச்சா? மறக்காதே!”
“நல்லா புரிஞ்சுபோச்சு! மறக்கவே மாட்டேன். நாலு பாட்டும் சூப்பரா இருந்துச்சு! நாம இப்ப சேர்ந்து ஆடலாம் வா!”
“தை – தை! தா – தை! தா – தை!
போகிப் பொங்கல் தை – தை!
சூரியப் பொங்கல் தை – தை!
மாட்டுப் பொங்கல் தை – தை!
காணும் பொங்கல் தை – தை!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
தை – தை! தா – தை! தை – தை!

1 COMMENT

  1. போகி பண்டிகை , தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் குறித்து காரணங்களோடு உரையாடல் வழி விளக்கியது அருமை.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

தன்னம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

ஊனம் ஒரு தடையல்ல... - ராஜி ரகுநாதன் “ஜன்னலருகில் நின்று சுதந்திரமாக ஆகாய வீதியில் பறக்கும் பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பறவைக்கு எத்தனை சிறிய கால்கள்! இதற்கு அத்தனை உயரம் பறக்கும் சக்தியை கடவுள் எப்படிக்...

செல்ல விலங்குகளை வளர்த்தால்…

0
- ஜி.எஸ்.எஸ். சமாதான உடன்படிக்கைக்கு புறாவை ஒரு அடையாளமாகச் சொல்வார்கள். ஆனால், ஆலன் பிட்க்ளே என்ற 70 வயது முதியவர் புறாக்களை வளர்த்து, அதன் காரணமாகவே அண்டை வீட்டுக்காரரின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்து நீதிமன்றத்தின்...

கல்லாதது கடலளவு!

மினி தொடர்-1 - நாராயணி சுப்ரமணியன் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் சுவாரஸ்யமானவை. அதிலும், மாணவர்களும் பெரியவர்களும் கேட்கும் கேள்விகள், பல சமயங்களில் ஒரேமாதிரியான ஆர்வத்துடன் வெளிப்படும். கடலுக்கு முன்னால் எல்லோரும் குழந்தைகளாகிவிடுகிறார்கள் என்றுகூட இதைப்...

சொல்ல விரும்புகிறோம்!

5
Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work. - Bhuvaneshwari...

முக்கோடி ஏகாதசி!

ஜனவரி 13 - வைகுண்ட ஏகாதசி - ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி. ‘மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அத்தகு புனிதமான மார்கழியில் வரும் ஒப்பற்ற விரதம்தான் வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட...