0,00 INR

No products in the cart.

பக்த ஆஞ்சனேய தரிசனம்!

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

ஸ்ரீ அனுமன் ஜயந்தி (02.1.2022)

 • ர்மபுரியில் உள்ள ஆஞ்சனேயர் கோயிலில் ஆஞ்சனேயருக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யும்போது, சாளக்ராமக் கல்லை தலையில் உள்ள பள்ளத்தில் வைத்து செய்வர். ஹரிவாயு துதியைப் பாராயணம் செய்தபடியே இந்த அபிஷேகம் நடக்கும்.
 • ஈரோடு, கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயிலில் அருளும் அனுமனுக்கு நடக்கும் குங்குலிய அலங்காரம் மிகச் சிறப்பு மிக்கது.
 • தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் ஆலயத்தில் அனுமன் ஓர் அசுரனின் கையை வளைந்துப் பிடித்தபடி காணப்படுகிறார். மற்றோர் அனுமன் ராவணனைத் தூக்கிச் செல்வது போல் காட்சி தருகிறார்.
 • கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலுள்ள ஸ்ரீராமசாமி கோயிலிலுள்ள ஆஞ்சனேயர், ஸ்ரீராமனுக்கு முன்னால் சற்றே தலையை குனிந்து, வாயைப் பொத்திக் கொள்வதுபோல் வலக்கையை மடக்கிப் பிடித்தபடி காட்சி தருகிறார்.
 • சோழவந்தான் மூலகண்ட ஆஞ்சனேயர், வைகையில் தண்ணீர் நிறைந்தோடும் காலங்களில் அனுமன் பாதத்தின் கீழ் நீர் ஊறிக்கொண்டேயிருக்கும். கவிழ்க்கப்பட்ட கிண்ணங்கள் போன்று அவரது வாலில் நவக்கிரகங்கள் காணப்படுவது சிறப்பு.
 •  கேரள மாநிலம், தலைச்சேரி அருகில் உள்ள திருவெண்காடு ராமசாமி கோயிலில் கருவறைக்கு வெளியே ராமனை வழிபடும் அஞ்சலி ஹஸ்த நிலையில் ஆஞ்சனேயர் உள்ளார். இவருக்கு அவலை பாலில் நனைத்து சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
 • காரைக்குடி அருகிலுள்ள சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் ராமர் பாதத்தைப் பிடித்தபடி காட்சி தருகிறார் அனுமன்.
 • ஹரித்வார் கோயிலில் அனுமனை மடியில் இருத்தி தாய்ப்பால் ஊட்டும் வகையில் அஞ்சனா தேவி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சனேயர் துள்ளி விளையாடும் குழந்தைத் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
 • கான்பூரில் உள்ள பங்கி ஆஞ்சனேயரை காலை சூரிய ஒளி படும்போது தரிசித்தால் குழந்தையாகவும், மதியத்தில் இளம் வயதினராகவும், மாலையில் மகாபுருஷராக பெரிய திருவுருவில் காட்சி தருகிறார்.
 • மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குலாக்ஷாபாத், மத்தியப் பிரதேசத்தில் ஜன் சவாலி, உத்திரப்பிரதேசத்தில் அலகாபாத் ஆகிய மூன்று இடங்களிலும் அனுமன் சயன உருவில் சேவை சாதிக்கிறார்.
 • இமாசலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் ஜகு மலையின் உச்சியில் அமைந்துள்ள அனுமனின் 108 அடி உயரமுள்ளது.
 • ஸ்ரீராம பக்தனான அனுமன் பராக்கிரமசாலி மட்டுமல்ல; இசைக் கலைஞனும்கூட. வீணை வாசிப்பதில் வல்லவன். பாறையே உருகிவிடும் அளவுக்கு வீணை வாசிப்பில் வித்திகன். வீணைகளில் பன்னிரெண்டு வகை இருப்பதாகச் சொல்வர். இவற்றுள் சித்திர வீணை ஆஞ்சனேயரால் உருவாக்கப்பட்டது என்பர். வீணை வாசிக்கும் தோற்றத்தில் காட்சி தரும் ஆஞ்சனேயரை கும்பகோணம் கோதண்டராமர் கோயிலில் தரிசிக்கலாம்.
 • கர்நாடக மாநிலம், முலுபாகல் என்னும் தலத்தில் அருள்புரியும் ஆஞ்சனேயர் கோயிலில் அனுமனுக்கு துளசி மாலைக்குப் பதில் தாழம்பூ மாலை அணிவிக்கிறார்கள்.
 • திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன் சன்னிதிக்கு முன்புறம் உள்ள ஆஞ்சனேயர் மீது சாத்தப்படும் வெண்ணெய் எத்தனை நாட்களானாலும் கெட்டுப்போவதில்லை. வெயில் காலத்தில் உருகுவதும் இல்லையாம்.
 • கோழிக்குத்தி வான்முட்டி பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சனேயர் சப்தஸ்வர ஆஞ்சனேயர். இவரது வால் தலை மேலே நிற்கும். அதில் ஒரு மணியும் இருக்கும். இவரது அவயங்களை கையால் தட்டினால் சப்த ஸ்வரங்கள் ஒலிக்கின்றது.
 • திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கெட்வெல் வீர ஆஞ்சனேயருடைய பாதங்கள் குபேர திசையை நோக்கி இருக்கின்றன. வாலில் மணி உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அனுமன் இவர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வாரமும், ராஜ அலங்காரம், பழ அலங்காரம், செந்தூர அலங்காரம், முத்து அலங்காரம் என ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிப்பர். ஆங்கிலப் புத்தாண்டு அன்று பழ அலங்காரம் சிறப்பாக நடைபெறும். தேங்காய் மாலை அலங்காரமும் உண்டு.
 • திருநள்ளாறு ஆஞ்சனேயருக்கு பத்து திருக்கரங்கள், ஐந்து திருமுகங்கள் உள்ளன. இவரை வழிபட்டு வந்தால் நவக்கிரகங்களின் தொந்தரவு நெருங்காது.
 • திருநெல்வேலி, தச்சநல்லூர் என்ற ஊரில் பஞ்சமுக ஆஞ்சனேயர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கெட்வேல் ஆஞ்சனேயர் அனுமன் ஜயந்தி அன்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இக்கோயிலில் செந்தூரம்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது.

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...