
"டாக்டர் என் மாமியார எப்படியாவது பிழைக்க வெச்சிருங்க!"
"மாமியார் மேல இவ்வளவு பாசமா உங்களுக்கு!"
"லாக்கர் சாவிய எங்க வெச்சிருக்கான்னு தெரியணும் டாக்டர்?"
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
……………………………………………………………………………
"சார் தடுப்பூசி போட வந்திருக்கோம்!"
"மேடம் மாமியாருக்கும் மருமகளும் போடற சண்டைய நிறுத்த தடுப்பூசி இருந்தா போடுங்க!"
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
……………………………………………………………………………
"கிளி ஜோசியரே கிளிய அட்டைய எடுக்க சொல்லுமய்யா… கிளி மாட்டேங்குது."
"நீங்க இரண்டு தடுப்பூசி போட்ட சீட்டு காண்பிக்க சொல்லுது சார்!"
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
……………………………………………………………………………
"டொட்ட டொய்ங் இதோ பாரு தக்காளி வாங்கிட்டு வந்திருக்கேன்."
"இது என்னங்க தக்காளி?"
"மணத்தக்காளி!"
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
……………………………………………………………………………
"மாலா அந்த டாக்டர் மயக்க ஊசியே போடாம எப்படிடி ஆபரேஷன் பண்ணினார்?"
"டி.வி.யில மெகா சீரியல பார்த்துக்கிட்டேயிருங்கன்னு வெச்சுட்டு பண்ணறார்டி."
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
……………………………………………………………………………
"உன் கணவருக்கு ஒர்க் ஃபரம் ஹோம்னு சொன்ன தூங்கிட்டு இருக்காரு!"
"இந்த நேரத்துல ஆபிஸ்ல இத செஞ்சு பழகிடுச்சு!"
– நிலா, திருச்சி.
……………………………………………………………………………
"அந்த ரயில்வே பிளாட்பார்ம்ல நிக்கிறவரு குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?"
"சரக்கு ரயில் வந்திடுச்சே… நாட்டு சரக்கா? ஃபாரின் சரக்கா?னு கேட்கிறாரே!"
– நிலா, திருச்சி.
……………………………………………………………………………
"ஆறு குளமெல்லாம் நிரம்பியுள்ளதா அமைச்சரே?"
"பதுங்கு குழிதான் நிரம்பி வழிகிறது மன்னா!"
-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.
……………………………………………………………………………
"மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரி?"
"அரதப்பழசான இந்தக் கேள்வியைக் கேட்காமல் வெளியில் வந்து பாருங்கள் மன்னா!"
-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.