0,00 INR

No products in the cart.

புத்தாண்டு ஸ்பெஷல் கவிதைஸ்…

ஓவியம்: பிள்ளை

நம்பிக்கையே வாழ்க்கை!
சூரியன் அஸ்தமித்தாலும்
காதலுடன்
தன் இணைக்காக
காத்திருக்கிறது
அந்தப் பறவை…
நம்பிக்கைதானே வாழ்க்கை!
தனித்திருப்போம் – விழித்திருப்போம் – ஜெயித்திருப்போம்!
அதோ தெரிகிறதே
ஆரோக்கிய உதயம்…
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன…
ஆனாலும்,
நம் நம்பிக்கை இழையோ
அதையும் தாண்டி
நீண்டுகொண்டே போகிறது
தலைமுறை தலைமுறைகளாக!
நம்பிக்கை எனும்
உயிரோட்டம் இருக்கும் வரை நாங்களும் அழகுதான்
உன்னைப் போலவே!
– சுசீலா மாணிக்கம், திருவானைக்காவல்.
…………………………………………………………………………

புத்தாண்டு
பூஜை செய்து
பூத்தூவி,
புது நாட்காட்டி
சுவரில் மாட்டி,
டைரியில் எழுதி,
வாழ்த்துக்கள் பகிர்ந்து,
விருந்து உண்டு
இனிதாய்த் தொடங்கி,
ஓரிரு நாட்களிலேயே மெல்ல நகர்ந்து
நல்லது காட்டும்
புத்தாண்டு…!
– எஸ்.ராஜம், திருச்சி

…………………………………………………………………………

முனைந்திடுங்க…

ண் வளத்தைக் காத்திடுங்க;
பெய்யும் மழை நீரை சேகரித்திடுங்க!
கண் போன்ற விளை நிலங்களை விற்காதீங்க;
அடர்ந்த காடுகளை இனி அழிக்காதீங்க!
கரையோரம் வீடுகளைக் கட்டாதீங்க;
பெரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்காதீங்க!
குடிநீரை சிக்கனமா செலவிடுங்க;
மற்றவர்க்கு உதவிகள் செய்திடுங்க!
தானமும் தர்மமும் உங்களைக் காத்திடுங்க;
பெற்ற தாயையும் தந்தையையும் போற்றி வணங்கிடுங்க!
வானமும் வையகமும் செழிக்க உழைத்திடுங்க;
உங்கள் வாழ்க்கையை அதுவே உயர்த்திடுமுங்க!
தமிழ் மொழியில் பேசிடுங்க;
அதுவே தாரக மந்திரமாய் திளைத்திடுங்க!
அமிழ்தினிலும் இனிய மொழி தமிழுங்க;
அந்த அரிய மொழியை வளர்க்கப் பாடுபடுங்க!
விவசாயிகள், செழிக்க வழி வகுங்க;
அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற உதவிடுங்க!
உங்கள் கவலைகளைத் தூக்கிப் போடுங்க;
கண்ட கனவை எல்லாம் நனவாக்க முனைந்திடுங்க!
– ஜி.பாபு, தீரன் நகர்.
…………………………………………………………………………

பொலிக புத்தாண்டு!


நாடு நலம் பெற
கொடும் நோய் ஒழிந்திட
நல்வினைகள் நல்கிட
தெய்வ அருள் பெற்றிட
தூய்மையான உள்ளத்துடன்
புன்னகை மிளிரும் முகத்துடன்
நல்லொழுக்கம் பேணி
நாம் வேண்டிடுவோம்!
தன்னலம் பேணாமல்
தோல்வியால் உள்ளம் தளராமல்
நாளும் உழைத்திடுவோம்
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்
அனைவரையும் அணைத்துத் தழுவி வாழ்த்துக்கள் சொல்ல…
பொற்காலமாய் புத்தாண்டு பொலிந்து வருக!
– சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்.
…………………………………………………………………………

வாராயோ புத்தாண்டே!


வானளாவிய உயரத்தில்
எல்லோரையும் வாழவைக்கும்
புத்தாண்டே!
புதுமைகள் பல்துறைகளில்
புதுப்புது ஊற்றாய்
பிரவாகமெடுக்கப் புறப்பட்டு
விட்டாயோ புத்தாண்டே!
நெஞ்சமெல்லாம் மலர்ச்சியுடன்
எண்ணி எண்ணித் துணிந்து
புதுப்புது செயல்பாட்டில்
வெற்றியைப் பூரிப்புடன்
தருவாயோ புத்தாண்டே!
உலகத்தார் ஏற்றத்துடனும்
ஏழை, எளியோர் மகிழ்வுடனும்
அன்பு, பண்பு, பாசம்,
கடலலையாய் பொங்கிட
வாராயோ புத்தாண்டே!
– து.சேரன், ஆலங்குளம்

2 COMMENTS

 1. எனது புத்தாண்டு கவிதையை மங்கையர்
  மலரில் வெ ளியிட்டமை க்கு மனமுவந்து
  பல காே டி நன்றி.
  இவண்
  பிரியமுள்ள வாசகன்
  து.சே ரன்
  ஆலங்குளம்

 2. ‘பொலிக புத்தாண்டு’ என்ற எனது புத்தாண்டு கவிதையை மங்கையர் மலர் இணைய இதழில் கண்டு மகிழ்ந்தேன். மிக மிக நன்றி.
  சுதா திருநாராயணன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-எஸ்.பவானி, திருச்சி   அபத்தம் காலில் கட்டோடு வந்தவரிடம் காலில் அடியா என அபத்தமாய் கேட்டவருக்கு பதில் சொல்கிறார் தலையை மட்டும் ஆட்டி. ******************************* அவசரம் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்கிறான் கதவில் பூட்டு தொங்குவதை கவனிக்காத ஒரு அவசரக்காரன். ******************************* மணி ஓசை கோவில் மணி பக்தர்களுக்கு அருள்கிறது பள்ளியின் மணி படிப்பதற்கு அழைக்கிறது தலைவர்களுக்கோ ஆங்காங்கே ஒலிக்கிறது. தொண்டர்களின் ஜால்ரா மணி. ******************************* அநாவசியம் கணவர் நாத்திகம் மனைவி ஆன்மீகம் இது எப்படி சாத்தியம் மற்றவர் ஆராய்வது அநாவசியம்.

கவிதை!

1
வெ. மாரிச்செல்வி, முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி-2 விழித்திடு பெண்ணே... சுதந்திரம் பெறுவதுமல்ல தருவதுமல்ல வாழ்வது பிள்ளையிலும் கொல்லையிலும் நம்மை தொலைத்தது போதும் உரிமை கதறலை ஓரங்கட்டி உத்வேக நடை...

கவிதை!

-என்.கே.பாலசுப்ரமணியன். எப்போ வருவாரோ? வாரப்பத்திரிகைகளில் வண்ணப்படங்களுடன் வகை,வகையாய் தொடர்கதைகள், வித விதமாய் சிறுகதைகள் வெளிவந்த காலங்களில் - அவைகளை வணிகப் பத்திரிகைகள் என மலினப்படுத்தி, அவர்களை வணிக எழுத்தாளர்களென வசைபாடி, நாங்கள் தான் இலக்கியம் படைக்கிறோமென மார் தட்டி மகிழ்ந்தனர் சிற்றிதழாளர்கள். கால ஓட்டத்தில் வாட்ஸ்அப் வருகையில் வாசிப்பின் மீதே நேசிப்பு குறைந்ததில் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் தொடர் முற்றி, சிறுகதை வற்றி, ஒரு பக்கக்கதையென உருமாறி, அதுவும் அதிகம்...

கவிதைத் தூறல்!

- லிடியா இம்மானுவேல், மயிலாடுதுறை   அங்கெல்லாம் இல்லை! விலங்குகள் வாழும் காட்டில் இல்லை! பறவைகள் வாழும் கூட்டில் இல்லை! மனிதர்கள் வாழும் நாட்டில் இருக்கின்றது முதியோர் இல்லங்கள்! ************************************ மனமுறிவு! தடாக வாழ்வில் தாவிய தவளையால் நிலவிற்கும்! அந்த குளத்திற்கும் உறவில் விரிசல் உண்டானது! ************************************ பாதை மாறிய பயணங்கள் அமைதியான ஓடை நீர் கடலில் கலந்ததும் பிரளயமானது! தீப்பந்த நெருப்பு தீபத்தில் ஏற்றியதும் அமைதியானது! ************************************ காணவில்லை... திருவிழாவில், காணாமல் போன அந்த...

கவிதைத் தூறல்!

-எஸ்.பவானி, திருச்சி   உன்னதம் பாலின் உன்னதம் அருந்தும் கன்றுக்கு மட்டுமே தெரியும் கறக்கும் வியாபாரிக்கு தெரியாது! __________________________________ அர்த்தம்  வாடி என்று கணவர் செல்லமாய் அழைத்தால் கனிவு! உரத்துச் சொன்னால் கட்டளை! ஒரே சொல்லின் உச்சரிப்பு தருகிறது மாறுபட்ட அர்த்தம். __________________________________ குறட்டை அவர் அதை செலவழிக்கவில்லை பிறருக்கு கொடுக்கவும் மனமில்லை நாய் உருட்டும் தேங்காய் என பணம் பாதாளத்தில் குறட்டை விடுகிறது. __________________________________ அழுகையும் சிரிப்பும் உயிரிழந்த...