0,00 INR

No products in the cart.

நம்பிக்கை!

– சுசீலா அரவிந்தன்

புயலுக்குப் பின், மரங்களின் நம்பிக்கை நிமிர்ந்து நிற்கையில் – சுவர் வெடிப்பில் விழுந்த விதையின் நம்பிக்கை துளிராய் தளிர்க்கையில் – ஊர்ந்து செல்லும் குழந்தையின் நம்பிக்கை முதலடி எடுத்து வைக்கையில் – பத்து மாதம் சுமந்த தாயின் நம்பிக்கை அந்த சிசுவானது தனது கைகளில் தவழ்கையில்… இப்படி, ‘நம்பிக்கை’ எனும் உயிரிழை இருக்கும் வரை வேர்கள் வலிமை பெறும் என்பதே உண்மை.

(‘எழுதும்போது நல்லா இலக்கணமா எழுது; வாழ்க்கைனு வரும்போது…’ தோழமையின் குரல் கேட்கிறது… இருங்க வர்றேன்.)
டந்த இரண்டு வருடங்களாக கொரோனா நமக்கெல்லாம் கற்றுத் தந்த பாடங்கள் அநேகம். இந்தப் பாடங்கள் போதாது என (நான் மர மண்டைனு இந்தப் பாழாப்போன கொரோனாவுக்குக் கூட தெரிந்திருக்கிறது) அடியேனை அது அதீத பாசத்துடன் கட்டியணைத்து, முத்தமிட்டு உணர்த்திய பாடங்கள் எண்ணிலடங்காதவை.

ஆமாங்க… கொரோனா இரண்டாம் அலை. அரசாங்கம் எவ்வளவோ வசதிகள் செய்திருந்தும் பாதிக்கப்பட்டோர் அதிகம்.  எனவே, மருத்துவமனை, படுக்கை மற்றும் ஆக்சிஜன் அனைத்தும் பற்றாக்குறை. இப்படியோர் இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவுக்கு என் மேல் காதல். சாதாரண காதல் இல்லீங்க. ஷாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு போல உயிர் கொல்லும் காதல்.

உயிர்த் துளி மகளின் விரல் வழியே…

முதல் நாள் காய்ச்சல். அடுத்த நாள் மூச்சுத்திணறல், மயக்கநிலை. பெற்றவர்கள் துடிக்க, உடன்பிறந்தோர் கண்ணீர் உகுக்க, சுற்றமும் நட்பும் கைகள் பிசைந்து நிற்க, யாரும் வந்து தோள் கொடுக்க இயலா நிலை.

கள் மருத்துவர். சென்னையிலிருந்து ஓடி வருகிறாள். உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் நான் திருநெல்வேலியில். ‘விழிக்கும் போதெல்லாம் என் மகள் கைகளுக்குள் என் விரல்களா அல்லது விரல்கள் பிணைக்கும்போதெல்லாம் விழிப்பா?’ புரியவில்லை. பெருமூச்சின் போதெல்லாம் தலை வருடும் கரங்கள் அல்லது தலை வருடும்போதெல்லாம் பெருமூச்சா தெரியவில்லை!

ஆனால், அந்த ஷணத்தில் எங்கிருந்தோ ஒரு நம்பிக்கை இழை மனதினுள் உயிர்பெறும். என்னுயிருக்கு வலுவூட்டும். உணர்வுக்கும் உயிர்ப்புக்கும் இடையேயான நேரங்கள். மயக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையேயான நாட்கள்.

ஆறு வருடங்களுக்கு முன் என் அம்மாவை இழந்தபொழுது அழுதேன். மண்ணில் புரண்டேன். பித்து பிடித்தாற்போலானன். இறைமையிடம் சண்டையிட்டேன். “நானா என் அம்மாவைக் கேட்டேன்? நீயாகத்தானே தந்தாய். அன்பைப் பொழியச் செய்தாய். இப்பொழுது என்னிடம் இருந்து பிடுங்கிக் கொண்டாயே…” தினமும் கதறுவேன். இறைமையின் புன்னகை முகமே நிழலாடும். ஆனால், அன்று புரியவில்லை. அந்த புன்னகையின் அர்த்தம் இன்று புரிந்தது.

மருத்துவ மகள்

ன் தாய், என் மகள் வடிவில்… கிட்டத்தட்ட 45 நாட்கள், தன் உயிரைப் பொருட்படுத்தாது என் உயிரை மீட்கும் நம்பிக்கைப் போராட்டத்தில் என் மகள். குறிப்பிட்ட ஒரு ஊசி திடீரென தட்டுப்பாடு. எங்கெங்கோ பேசி, அதை வரவழைக்கும் வரை ‘என் அம்மாவுக்கு அந்த ஊசியைப் போடும் வரை நான் சாப்பிட மாட்டேன்’ என 48 மணி நேரம் நம்பிக்கையுடன் காத்திருந்தாள். ஒரு மகளின் ஆணித்தரமான நம்பிக்கை, ஒரு தாயின் உயிரை மீட்டது. பின் வீடு வந்து, ஆக்ஸிஜன் துணையுடன் நாட்கள் கழிந்தன.

கடந்த ஒரு மாதமாகத்தான் எழுந்து நடமாடும் நிலை. நம்பிக்கை இழைகள் இதயத்தில் உயிர் பெற, சாதாரண வாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஆனாலும்… 15 நாட்களுக்கு முன் சற்றே சறுக்கியதில் கையில் சிறிய எலும்பு முறிவு. இன்றைக்கும் அதே நம்பிக்கை இழையுடன் முகம் நிறைந்த புன்னகையுடன் நான் சொல்வது, “இறைமை ஏதோ ஒரு நோக்கத்துக்காக மென்மேலும் என்னை மெருகேற்றுகிறார்.”

ஆம்… தோழமைகளே! எந்த ஒரு நேரத்திலும் நம்பிக்கையை மட்டும் கைக்கொள்ளுங்கள். வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாய் மாற்றிக்கொள்ளுங்கள். வாழ்க்கைப் பாதை கரடு முரடானதுதான். அப்படிப்பட்ட பாதையை கடந்து வந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன்; நம்பிக்கையையும் பொறுமையையும் மட்டுமே கைக்கொள்ளுங்கள். மற்றவை தானாக நடக்கும்.

இன்னும் சில காலம்தான். விழித்திருப்போம்… தனித்திருப்போம்… ஜெயித்திருப்போம்!

ந்த 2022ஆம் ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான ஆண்டாக அமையும்; நல்லதே நினைப்போம்; என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்…!

நன்றி :
உறவுகள் மறந்து உணர்வற்ற நிலையில் நான் இருந்தபோது, உறவின் உன்னதம் உணர்ந்த உச்சக்கட்ட உணர்வு தடுமாற்றத்தில் மகள் இருந்தாள். அப்போதெல்லாம்… தங்கள் வார்த்தைகளாலும் உதவிகளாலும் தோள் கொடுத்து நம்பிக்கையூட்டிய மருத்துவர்கள், ‘‘தாய் மிக முக்கியம். விடுமுறை எடுத்துக்கொள்” என தைரியமூட்டி, நம்பிக்கையை விதைத்த கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உறவுகள் தோழமைகள் அனைவருக்கும் நன்றி.

பணம் உயிருக்கு உணவு தரலாம். ஆனால், உணர்வு தருவது இதுபோன்ற உள்ளங்களின் நம்பிக்கை தரும் சொற்களே. நன்றி…

 

 

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...