0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?

ற்புதமான கட்டுரை. நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பாராட்டுக்கள் பல.
– கே.எஸ்.கிருஷ்ணவேணி

பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம். பாரதியின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ் பிரதிநிதியாகக் கலந்துகொண்டது பற்றியும், நிவேதிதாவிடம் ஞானம் பெற்றது பற்றியும் விரிவாக அறிந்துக்கொள்ள முடிகிறது. செல்லம்மா, மனைவி என்ற நிலையில் இருந்து பாரதிக்கு காதல் மனைவியாக பரிமளிக்கத் தொடங்கிய காலத்தை மிக அழகாக எழுதியுள்ள கட்டுரை ஆசிரியருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
செல்லம்மா பாடல்கள்தானே கண்ணம்மா பாடல்களாகின. மனைவியை கணவன் புரிந்துக் கொண்டான் எனும்போது பெண் அடையும் மகிழ்ச்சிக்குதான் எல்லை ஏது? பெண் தந்த ஞானத்தாலன்றோ பாரதியால், ‘பெண்ணுக்கு ஞானம் வைத்தான்’ என்று பாட முடிந்தது. வாழ்க பாரதி! வாழ்க பாரதம்! தொடரட்டும் கவிஞர் நிரஞ்சன் பாரதி எழுத்துக்கள்.
– வெங்கடேஷ் வெங்கட்

‘எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்’ என்ற நிரஞ்சன் பாரதி அவர்களின் பக்கங்ளைப் படிக்கும்போது உற்சாகமாக இருந்தது. கருப்பு வெள்ளை படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு அருமையாக உள்ளது! விவேகானந்தருடன் நிவேதிதா தேவி படமும் பார்த்தபோது புதுமைப்பெண் நிச்சயம் என்னுள் பிறந்துவிட்டாள் என்ற எண்ணம் வந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் பற்றி படித்ததும் நாங்களும் புதுமைப்பெண்தான் என்ற உற்சாகம் வந்தது. அருமையான பக்கங்கள். பாராட்டுக்கள்.
– பிரகதா நவநீதன், மதுரை

சிங்கப்பெண் காவலர்கள்
காவல் ஆய்வாளர் பணி எவ்வளவு கடினமானது என்பதை கட்டுரை படித்து உணர்ந்தோம். நேர்மையான, தைரியமான அதிகாரிகளின் பங்கைப் புரிந்துகொள்ள முடிந்தது.
– மஹாலக்ஷ்மி சுப்பிரமணியன்.

சுபிக்க்ஷாவை பேசவிட்டிருந்தால் இதில் உள்ள உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்திருக்கலாமோ என்னவோ! அரவிந்த் நிரபராதி என்று நிரூபிக்கபட்டது பெரிய மகிழ்ச்சி தரும் செயலாகும்.
– கலைமதி

கிறிஸ்துமஸ் கேக்
த்தனை விதமான கேக்குகள் அப்பப்பா! அத்தனையும் செய்யத் தூண்டுகிறது. கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ் ஒவ்வொன்றும் அருமை.
– கே.எஸ்.கிருஷ்ணவேணி

வாசகர் ஜமாய்க்கிறாங்க
ந்த நாள் ஞாபகம்… ஒவ்வொரு வாசகரின் அனுபவமும் சுவாரசியமாக இருந்தது. பழைய நினைவுகளையும் மறக்க முடியாத நிகழ்வுகளையும் அசைபோட வைத்துவிட்டது மங்கையர் மலர்.
– பி.கவிதா பாலாஜிகணேஷ்

புகைப்படங்களும், நினைவுகளும்!
ந்தக் காலத்தில் புதுமணத் தம்பதிகள் ஸ்டூடியோ சென்று ஹாப் சைஸ் போட்டோ எடுத்து நெருங்கிய உறவுகளுக்குக் கொடுக்க, அவர்கள் அதை பிரேம் பண்ணி சுவரில் மாட்டி அழகு பார்த்ததை நினைவுபடுத்தியது.
– என்.கோமதி, நெல்லை

அழகோ அழகு
ழகுக் கலை நிபுணர் டாக்டர் வசுந்தராவின் ஆலோசனைகளைக் கடைபிடித்தால் புற அழகு மட்டுமல்ல; அக அழகான மன அழகையும் கூட்டி மகிழ்ச்சியடையச் செய்யும்.
– து.சேரன், ஆலங்குளம்

ஒரு வார்த்தை
லகத்திலுள்ள மக்களின் இயல்பான நிலையினை காரண கர்த்தாக்கள் மூலம் விளக்கிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.
– து.சேரன், ஆலங்குளம்

சுயநலத்தால் மனிதன் தன் மரியாதையையும் வாழும் தகுதியையும் சிறிது சிறிதாக இழக்கிறான் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
– கலைமதி

வ்வார, ‘ஒரு வார்த்தை’ சுருக்கமாக இருந்தாலும், ‘சுரீர்’ என உரைக்கும் விதத்தில் இருந்தது உண்மை! மனிதனின் சுயநலத்தால் இயற்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை நயமாகவும், நாசூக்காவும், இதைக்காட்டிலும் சிறப்பாக யாராலும் கூற முடியாது. டச்சிங்… டச்சிங்!
– எம்.இராஜேந்திரன், லால்குடி

ரு வார்த்தை’யானாலும் திருவார்த்தையாக அமைந்துள்ளது!
– பாமதி நாராயணன், பெங்களூரு

நவ கயிலாயத் திருத்தலங்கள்
I got a feeling that I visited theses places EXCELLENT WRITE UP.
– Hari, adyar

வ கயிலாயத் திருத்தலங்கள் பற்றிய கட்டுரை சூப்பரோ… சூப்பர்!
– ஆர்.ஜெயலக்ஷ்மி

வ்வார மங்கையர் மலரில், ‘நவ கயிலாயத் திருத்தலங்கள்’ என்ற தலைப்பில் ஒன்பது திருத்தலங்களைப் பற்றி வெளிவந்த கட்டுரையைப் படித்து மெய்சிலிர்த்துப் போனேன். ‘உரோமேச முனிவரின் நவக்கிரக தோஷம் நீங்க ஒன்பது மலர்கள் தங்கிய இடங்களே ஒன்பது திருத்தலங்கள்’ என்ற புராண வரலாற்றை முதன் முதலில் மங்கையர் மலரில் படித்துதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

ந்தத் தள்ளாத வயதில் நவ கயிலாயங்களுக்கும் சென்று தரிசிக்க இயலாது. அவற்றைப் பற்றி படித்து‌ அறிந்துகொள்ள உதவிய மங்கையர் மலர்க்கு நன்றி.
– அ.சம்பத், சின்ன சேலம்

அன்புவட்டம்
னிமைப்படுத்தப்பட்டது’ கேள்விக்கு, ‘கணக்காகப்’ பதில் சொன்ன அனுஷா நாட்டாமைக்கு மார்க் நூற்றுக்கு நூறு!
– ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

‘அமெரிக்காவில் சரியும் கல்வித்தரம்’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை, இதுவரை எந்த ஒரு பத்திரிகையிலும் வராத ஒன்று. அமெரிக்கா கணிதத் திறமையில் பின்தங்கி இருக்கிறது. அதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருந்தாலும், அது நூற்றுக்கு நூறு உண்மை.
– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

கிழக்கு ஐரோப்பாவில், ஜெர்மனியின் அழகே அழகு’ என்ற பத்மினி பட்டாபிராமனின் வார்த்தைகளைப் படிக்கும்போது, ஜெர்மனி உள்ளே நுழைந்து விட்டது போல இருந்தது. ஒவ்வொரு வாரமும் நாங்களும் உலகத்தையே சுற்றி வந்து விடுகிறோம். இப்படி ஒரு வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்.
– உஷா முத்துராமன், திருநகர்

வ்வொரு வாரமும் வரும், ‘சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி?’ மிகவும் அருமையான பக்கங்களாக இருப்பதால் அதைச் சேகரித்து வருகிறேன். இந்த வாரம், ‘கோபப்படுபவர்களை எப்படி சமாளிப்பது?’ என்று மிக அழகாகச் சொல்லிவிட்டு, ‘கோபப்படாதே உன் உடம்புக்கு ஆகாது’ என்ற ஒரு நகைச்சுவை படத்தையும் போட்டு எங்களுக்கு அந்தப் பக்கத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய மங்கையர் மலருக்கு பாராட்டுக்கள். கோபம் வராதவர்ளே இருக்க முடியாது. அதை நாம் எப்படிக் குறைத்துக் கொள்வது என்பதற்கு பல வழிமுறைகளைச் சொல்லி, அந்த வழிமுறையில் நமக்கு எது ஒத்துப்போகுமா அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அழகாகக் கடைசியில் முடித்திருந்ததைப் படித்ததும் கோபம் எல்லாம் ஓடிப்போய், மனதுக்குள் சந்தோச மலர் பூத்தது.
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சொல்ல விரும்புகிறோம்!

5
Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work. - Bhuvaneshwari...

உச்சி முதல் பாதம் வரை…

2
அழகோ அழகு - 10 - அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா. தலைமுடி : ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி உதிர்வது. இதற்கான காரணம், ஆண்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (ANDROGENETIC ALOPECIA) எனப்படும் நிலையாகும்....

நல்லதே நினைப்போம்!

1
புத்தாண்டு சிறப்பிதழுக்காக... நல்லதே நினைப்போம்! நேர்மறை சிந்தனைகள் வளர்ப்போம்! பகுதிக்கு வந்த ஓவியங்களில் இருந்து... கூடைக்குள் உலகம் இடுப்பு சுருக்கு பைக்குள்ளும் இல்லத்தில் அஞ்சறை பெட்டிக்குள்ளும்- காய்கறி கூடைக்குள் உலகத்தையே வைத்திருந்தாள் அன்றே என் அப்பத்தா பெண் பெரும் சக்தி மாபெரும் சக்தி. -சுசீலா மாணிக்கம்,...

ஜோக்ஸ்!

2
ஓவியம்: பிரபுராம் “டாக்டர் என் மாமியார எப்படியாவது பிழைக்க வெச்சிருங்க!” “மாமியார் மேல இவ்வளவு பாசமா உங்களுக்கு!” “லாக்கர் சாவிய எங்க வெச்சிருக்கான்னு தெரியணும் டாக்டர்?” - ஆர். மகாதேவன், திருநெல்வேலி. ....................................................................................... “சார் தடுப்பூசி போட வந்திருக்கோம்!” “மேடம் மாமியாருக்கும் மருமகளும்...

புத்தாண்டு ஸ்பெஷல் கவிதைஸ்…

2
ஓவியம்: பிள்ளை நம்பிக்கையே வாழ்க்கை! சூரியன் அஸ்தமித்தாலும் காதலுடன் தன் இணைக்காக காத்திருக்கிறது அந்தப் பறவை... நம்பிக்கைதானே வாழ்க்கை! தனித்திருப்போம் - விழித்திருப்போம் - ஜெயித்திருப்போம்! அதோ தெரிகிறதே ஆரோக்கிய உதயம்... பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன... ஆனாலும், நம் நம்பிக்கை இழையோ அதையும் தாண்டி நீண்டுகொண்டே போகிறது தலைமுறை தலைமுறைகளாக! நம்பிக்கை எனும் உயிரோட்டம் இருக்கும் வரை நாங்களும்...