0,00 INR

No products in the cart.

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

வாழும் வழி!
உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும் எப்போதும் தண்ணீரைக் குடியுங்கள். மிகப்பெரிய உடல்நலப் பிரச்னைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால்தான் ஏற்படுகின்றன.
உங்கள் ஆர்வம் உச்சியில் இருக்கும்போது கூட விளையாட்டுகளை விளையாடுங்கள். கராத்தே, கால்பந்து, நீச்சல் அல்லது நடைபயிற்சி அல்லது எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும், உடலை நன்கு அசைக்க வேண்டும்.

உணவைக் குறைத்து உண்ணுங்கள்!
திகப்படியான உணவு ஆசையை விடுங்கள். ஏனெனில், அது ஒருபோதும் நல்லதைத் தராது. உணவில் உங்களை இழக்காதீர்கள். உண்ணுங்கள்; ஆனால் அளவைக் குறைக்கவும். கூடுமானவரை, தேவையில்லாமல் காரைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்புவதை (மளிகை சாமான்கள் வாங்க, ஒருவரைப் பார்க்க) அல்லது எந்த இலக்கையும் அடைய நடந்தே முயற்சிக்கவும்.

கோபம், கவலையை விடுங்கள்!
குழப்பமான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். அவை அனைத்தும் ஆரோக்கியத்தைக் குறைத்து, ஆன்மாவின் சிறப்பைப் பறிக்கின்றன. யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம். உங்களால் சாதிக்க முடியாத ஒரு விஷயமும் இல்லை. உங்களால் சொந்தமாக முடியாத எதுவும் இல்லை.

புறக்கணி, மறந்துவிடு!
ங்கள் தலை முடி நரைத்திருந்தால், அது வாழ்க்கையின் முடிவைக் குறிக்காது. ஒரு சிறந்த வாழ்க்கைத் தொடங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு சான்று. நம்பிக்கையுடன், நிறைவுடன் வாழுங்கள், பயணம் செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். எதிர்பார்ப்பை நிறுத்திக் கொள்ளுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். இதுவரை நடந்ததை மற.
இனி வெறுக்காத இதயம்; வாடாத புன்னகை; புண்படுத்தாத வார்த்தைகள் உங்கள் உள்ளத்தில் உலவட்டும்.
– அ.பூங்கோதை, செங்கல்பட்டு

பேத்தியிடம் கற்ற பாடம்!

ன் பத்து வயது பேத்தி ஆஷிதா நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிக்குச் செல்லும்போது, ஒரு மாஸ்க்கை போட்டுக்கொண்டும், இன்னொன்றை பையிலும் வைத்துக்கொள்ளச் சொன்னோம். ‘முழு நாளும் மாஸ்க்கோடதானா?’ என செல்லமாகச் சினுங்கினாள்.
மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நான், ‘‘மாஸ்க் போட்டுக்கிட்டே இருந்தது கஷ்டமாக இருந்ததா செல்லம் ?” எனக் கேட்டதும், ‘‘இல்லை பாட்டி… காலையில் ஆட்டோவில் பள்ளிக்குப் போகும்போது விசுவிசுன்னு காத்து அடிக்கும். மாஸ்க் போட்டது நல்லாவே இருந்தது. அதேபோல, வரப்போ பஸ்ஸோட புகையெல்லாம் முகத்திலே படாம இருந்துச்சு…” எனக் கூறினாள்.
‘எந்தவொரு நிகழ்வையும் முழு மனதோடும், நேர்மறை எண்ணத்தோடும் ஏற்றுக்கொள்ளும் திறன் வந்துவிட்டால் போதும், நிம்மதி நம் கையில்தான்’ என உணர்ந்தேன், என் பேத்தியின் மூலமாக!
– பானு பெரியதம்பி, சேலம்

யதார்த்தம்!
டந்ததை எண்ணி கவலை கொள்ளாமல், நடப்பதில் கவனம் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள். என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்தாலும் சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வர வேண்டுமே! கடந்து வந்த பாதையை அவ்வப்போது திரும்பிப் பாருங்கள். அப்போதுதான் தெரியும், யார் உங்கள் காலை வாரி விட்டது, யார் உங்கள் கஷ்டத்தில் கை கொடுத்தார்கள் என்று!
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

டென்ஷன் தவிர்!
னதில் தன்னம்பிக்கை இருந்தால் டென்ஷன் கிட்டே வராது. எந்தப் பிரச்னையானாலும் நிதானமாகப் பேசி, கலந்தாலோசித்து முடிவு எடுத்து விடலாம். வயதில் சிறியவர் கூட சிறந்த யோசனை சொல்லக்கூடும். மனம் ஒன்றுபட்டால் டென்ஷனுக்கு இடமில்லை.
நம்முடைய முக்கால்வாசி டென்ஷன்களுக்கு நாம்தான் காரணம். இதற்குக் காரணம் அலட்சியப் போக்கும், திட்டமிடாமல் போவதும்தான். எதிர்பாராத டென்ஷனும் வருவதுண்டு. உதாரணமாக, பந்த், அடைமழைக் காலங்களில் சில தினங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம். நாம் மழை பெய்யும்போது லீவு போடுவது சின்ன கிளாஸாக இருந்தால் தவறு இல்லையே. மற்றவர் வற்புறுத்தலுக்காக எதையாவது செய்துவிட்டு, பணமும் கரைந்து, உடல் நலமும் கெட்டுப்போய், டென்ஷன் ஆகாமல் திட்டமிட்டுச் செயல்படலாமே! குழந்தைகள் உள்ள வீடுகளில் சின்னச் சின்னதா ஏதாவது பிரச்னை வரத்தான் செய்யும். ஜலதோஷம், காய்ச்சல் முதலிய நோய்களுக்கான மருந்து மாத்திரைகளை எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டால் நடுராத்திரியில் டென்ஷன் ஆகாமல் இருக்கலாம்.

திடீர் விருந்தாளிகள் எப்போது வருவார்கள் என்று யாருக்குத் தெரியும். எதிர்பாராத அதிகப்படியான செலவுகளை சமாளிக்க எல்லா நேரமும் தயாராக இருந்துவிட்டால் கடைசி நேரக் குழப்பமோ டென்ஷனோ வராது.
வீட்டு வேலையோ, ஆபீஸ் வேலையோ எது முக்கியம், எது அவசரம் என்று லிஸ்ட் போட்டு செயல்படுத்துங்கள். டெலிபோன், மின்சார பில், பால் காடு போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட தேதியில் கட்டவும், வாங்கவும் வேண்டியிருக்கும். கவனக்குறைவாக இருந்தால் ஃபெனால்டி டென்ஷன்தான்.

எல்லா வீடுகளிலும் ஏதாவது வாகனம் இருந்தாக வேண்டும். எப்போதும் பெட்ரோல், காற்று நிரப்பி வைத்து, அவ்வப்போது சர்வீசுக்கும் கொடுத்து நல்ல நிலையில் வைத்திருந்தால், வண்டிகளும் டென்ஷன் இல்லாமல் ஓடும்.
டார்ச்லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி இவையெல்லாம் குறித்த இடத்தில் எப்போதும் இருக்க வேண்டும். மின்தடை வரும்போது யாரையும் திட்டாமல் சமாளிக்கலாம்.

மனிதராய் பிறந்து விட்டால் பிரச்னையை எதிர்பார்த்தாக வேண்டும். மனம் எப்போதும் திட்டமிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பயணம் போக இருந்தால் டிக்கெட் ரிசர்வ் செய்து விடுவது, தேர்வு, இன்டர்வியூவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்புவது, இதெல்லாம் தடங்கல்களில் இருந்து தப்பிக்கும் வழிகள்.

வீட்டில் உள்ள சாமான்களை குறிப்பிட்ட இடத்தில் வைத்துப் பழகவேண்டும். பேனா, போன், சாவி, ரேஷன் கார்டு, பால் கார்டு எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து எடுத்தால் டென்ஷனுக்கு இடமில்லை.
– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

பழைய சோறுக்கே முதலிடம்!


உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழைய சோறுக்கே முதலிடம் என அமெரிக்க விஞ்ஞானி ஆய்வின் முடிவு கூறுகிறது.
‘பிரியாணி கூட இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும். ஆனால், பழைய சோறு வேணும்னா ஒரு நாள் காத்து இருக்கணும்’னு சொல்லுவாங்க நம்ம வீட்டுப் பெரியவங்க! ஆமாங்க… அது உண்மைதான்.
நம்ம கிராமப் புறங்களில் பார்த்து இருப்போம்… காடு, மேடுனு போயி உழைக்கிறவங்க, காலையில வீட்டில் இருக்கிற பழைய சோறு, வெங்காயம் கடிச்சு சாப்பிட்டுவிட்டுப் போவாங்க. மாடு போல உழைக்கிறவங்களுக்கு இந்தப் பழைய சோற்றின் அருமை தெரியும். நம்ம ஊருல பழைய சோற்றுத் தண்ணீரை, நீராகாரம்னு சொல்லுவோம்.

பழைய சாதம் செய்வது எப்படி :

முதல் நாள் சாதத்தில் நீரூற்றி, மறுநாள் காலையில் பார்த்தால், பழையச் சோறு ரெடி. ‘நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘அப்படி என்ன இருக்கு பழைய சோறுல?’ன்னு நினைக்கிறீங்களா? வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச் சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச் சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும்.
பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. பழைய சோறு லேசாக புளிப்புச் சுவையோடு இருக்கும். அதற்குக் காரணம், சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) அதுவே புளிப்புச் சுவையைத் தருகிறது.

பழையச் சோறின் நன்மைகள் :

ழைய சோறில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால் இதை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்னைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். பழைய சோறில் நோய் எதிர்ப்புக் காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கிறது.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணம் தீரும்.
ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச் செய்யும். ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வு தரும். எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம் ஆகும்.
பழைய சோறு இருக்குமிடத்தில் ஆரோக்கியம் குடியிருக்கும். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு.
பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! இனி, கொஞ்சம் பழையச் சோற்றுக்கு மாறித்தான் பார்ப்போமே!
– அ.பூங்கோதை, செங்கல்பட்டு.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...