
தலைமுடி : ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி உதிர்வது. இதற்கான காரணம், ஆண்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (ANDROGENETIC ALOPECIA) எனப்படும் நிலையாகும். (ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (ANDROGENIC ALOPECIA) என்றும் கூறலாம்) அதிக முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை நிலை இது. மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தலை முடியை மோசமாக பாதிக்கும். மேலும், கணிசமாக மெலிந்துபோகச் செய்து விடும். பெண்களுக்கு வயது ஏற ஏற, முடி உதிர்வது அதிகமாக இருக்கும். குறிப்பாக, பிரசவம் ஆன பெண்களுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் அவர்கள் உடலில் ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைவின் காரணமாக முடி அதிகம் உதிரும். அதிர்ச்சிகரமான, துக்ககரமான சம்பவங்களினாலோ அல்லது கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதினாலோ கூட முடி உதிர்வது அதிகரிக்கும். இது தவிர, நம் உடலே, உடம்பின் எதிர்ப்புச் சக்தியை உடைத்து, முடி வளர விடாமல் செய்யும். அலோபீசியா அரீட்டா (ALOPECIA AREATA) என்ற ஒருவித ஆட்டோ இம்யூன் முடி உதிர்தல் நோய் கூட காரணமாக இருக்கலாம்.
நாம் ஏற்கெனவே பார்த்தது போல், தலைமுடிக்கு மிகச் சிறந்தது தேங்காய் எண்ணெய். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கும். மற்றுமொரு இயற்கை நிவாரணி வெந்தயம். முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தயிர் கலந்து முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி கொட்டுவது அடியோடு நிற்கும்.
இறந்த செல்கள் சேர்வதால் ஏற்படுவது பொடுகு. பொடுகைப் போக்குவதற்கென்றே கிடைக்கும் மருத்துவ ஷாம்பூ பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லை நீங்கும் வரை மட்டுமே இத்தகைய ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது. க்ரீன் டீயை நீரில் நன்கு கொதிக்கவிட்டு ஆறிய பின் அந்தச் சாற்றை தலையில் பூசி அலசினால் பொடுகு போய்விடும். தேங்காய் எண்ணெயில் இரண்டு மூன்று துளிகள் தேயிலை மர எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம்.
சருமம் : சருமப் பாதுகாப்புக்கு இயற்கை முறையில் நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.
முழு உடம்பு : நான்கைந்து டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் செடர் வினிகர் மூன்றையும் சிறிது தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, உடல் முழுதும் மசாஜ் பண்ணிய பின், வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்தால் கழுத்து மடிப்பு, அக்குள் மற்றும் தொடைகளுக்கிடையில் ஏற்படும் கருமை முற்றிலும் நீங்கி உடல் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மேற்சொன்ன எல்லாமே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய இயற்கைத் தீர்வுகள். இவற்றைப் பயன்படுத்தி உச்சி முதல் பாதம் வரை முறையாகப் பராமரித்தால் நம் உடம்பு நம்மை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.
உங்கள் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்.