0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

மீபத்தில் கேள்விப்பட்ட இரண்டு விஷயங்களை எப்படி முடிச்சுப் போடுவது என்று தெரியலை. ஆனால், இரண்டுக்கும் ஏதோ ஒரு ‘லிங்க்’ இருப்பதாகத் தோணுது. உங்களுக்கு எதுன்னா பிடிபடுதா பாருங்களேன்!

ரேணுகா, எனக்குப் பரிச்சயமான பெண்…அவருடைய மகன் சந்தோஷுக்குக் கல்யாணமாகி, 5 வயசுப் பெண் குழந்தை இருக்கிறது. ரேணுகாவின் கணவர் பலராமன், செயின் ஸ்மோக்கர்… புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டார். அவருக்கு வயது 64!

அதே 64 வயதில் அவருடைய தந்தை மற்றும் அண்ணன் இறந்ததால், ரேணுகாவின் மருமகள் ரஞ்சனி டென்ஷன் ஆகிவிட்டாள்

டாக்டரை அணுகி, தன்னுடைய கணவருக்கும் 64 வயதில் ஏதாவது நோய், குறிப்பாக கேன்ஸர் வர சாத்தியமுள்ளதா எனக் கேட்டிருக்கிறாள். அவர்களும் சந்தோஷின் ரத்தம், திசுக்களை டெல்லியில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி ஆராய்ந்துள்ளனர். ரேணுகாவின் ரத்த மாதிரியோடு ஒத்துப் போவதால், சந்தோஷுக்குப் புற்றுநோய்க்கான மரபணு இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. இதைக் கேட்டு ரஞ்சனி குடும்பத்தினர் ஆறுதல் அடைந்தனராம்.

இதை என்னிடம் பகிர்ந்துகொண்ட ரேணுகா, “சந்தோஷின் உயரம்,
முன் வழுக்கை, குரல் எல்லாமே தனது அப்பாவைக் கொண்டிருப்பதால், இந்த ‘ஜீன்’ டெஸ்ட்டை செய்தே ஆகணும்னு ரஞ்சனி ரகளையே செஞ்சுட்டா.

“அதே சமயம் ரஞ்சனியின் சித்தி, அம்மா இருவருக்குமே கிட்னி பிரச்னை உள்ளது. பாட்டியோ கிட்னி ஃபெயீலியர் ஆகி இறந்தே விட்டார். நாங்க அப்போ ரஞ்சனிக்கு ‘ஜீன்’ டெஸ்ட் எடுக்கணும்னு வற்புறுத்தி இருந்தா, என்னென்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருந்திருக்குமோ? பெண் வீட்டார் எடுத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாப்பிள்ளை வீட்டார் எடுத்தால், வேறுவிதமாகவும் பார்க்கப்படுகிறது!” என்று வேதனைப்பட்டார்.

**************************

ன்னொரு கேஸ், என் மகனின் நண்பன் தினேஷ் சம்பந்தப்பட்டது.

தினேஷ் கிராமப்புற மாணவன். ஆனால், சி.ஏ. படித்து ஆஸ்திரேலியாவில் வீடெல்லாம் வாங்கி செட்டில் ஆகிவிட்டான். மாத சம்பளம் நம்ப ஊர்க்காசுக்கு பத்து லட்சமாம்!

அவன் மனைவி கொஞ்சம் மேட்டுக்குடி போல.(சோசியல் டிரிங்கிங் வகை!) சென்னையில் இருந்த தினேஷின் அம்மா, ட்யூமர் வந்து இறக்க, அப்பாவுக்கும் வயிற்றுப் புற்றுநோய் வந்து ‘கீமோ தெரபி’ நடக்கிறது. அம்மாவுக்கு ‘ட்யூமர்’ என்ற செய்தி வந்ததும் ஆஸ்திரேலியாவிலிருந்து தினேஷ் வந்துவிட, அந்த நேரம், அவன் தலைவிதிக்கு ஏற்ப கொரோனா காலமாகிவிட்டது. விமானங்கள் இல்லை; வர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் பெற்றோருடன் தங்கிவிட்டான்.

தினேஷின் மனைவி பூர்ணிமாவும் இரண்டு வயது ஆண் குழந்தையும் ஆஸ்திரேலியாவில்… அவர்களாலும் இங்கு வர முடியாத சூழல். தினேஷின் அம்மா இறந்துவிடவே, அந்த காரியம் முடிந்ததும் பழுதான பூர்விக வீட்டு ரிப்பேரிங் வேலை, அப்பாவுக்கு சிகிச்சை என ஒன்றரை வருடம் ஓடிவிடவே, தினேஷின் மனைவி பூர்ணிமா வக்கீல் நோட்டிஸ் அனுப்பிவிட்டாள்.

கணவன் – மனைவிக்குள் என்ன நேர்ந்ததோ?

“உங்கப் பரம்பரையில் நிறைய கேன்ஸர் கேஸ்கள் இருப்பதால், நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” என வியாதியைக் காரணம் காட்டி, பிரிவுக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

“நான் கம்ப்ளீட் டீ-டோட்டலர். அவள் தினமும் தண்ணீர் அடிப்பாள். என்னை “அம்மாஞ்சி’ என்று நக்கலடிப்பாள். பல விஷயங்களை என் மகனுக்காகப் பொறுத்துக்கிட்டேன். இப்போ, பல கோடிகள் ஜீவனாம்சம் கேட்டிருக்கா!” என்றார் தினேஷ் கண்ணீர் ததும்ப.

**************************

தாவது கடுமையான, நாள்பட்ட நோய் பீடித்திருந்து, அதை உள்நோக்கத்துடன் மறைத்துக் கல்யாணம் செய்திருந்தால், அது நிச்சயம் தவறானது. அப்போது அவன் மனைவி என்ன தீர்மானம் எடுத்தாலும் ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால், இந்த இரண்டு ’கேஸ்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாதுதான்!

ஆனால் வேண்டுமென்றே சில, பல ஆதாயங்களை மனத்தில் வைத்து, ‘பொருத்தமில்லாத திருமணம்’ போல உருவம் கொடுத்து, ‘பூதக் கண்ணாடி’ வைத்துக் காரணங்களைத் தேடினால்…?

கடவுள் இருக்கான் குமாரு!

………………………………………….

தாய்ப்பாலில் இருந்து நகைகள்?

ஆம்! உண்மைதான். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். லண்டனைச் சேர்ந்த சஃபியா  ரியாத் என்ற பெண்மணி, தனது கணவர் ஆடம்ஸ்  உடன் இணைந்து, தாய்ப்பாலை crystallize  செய்து, அதை வைத்து நகைகள் செய்து, பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளனர். இதைப் படித்த போது  ஆச்சரியமாக இருந்தது.  ஆனால், இதைப்  பற்றி மேலும் அலசியதில், பல நிறுவனங்கள் தாய்ப்பால் கொண்டு நகைகள் செய்து வருகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டோம்!
அன்பு வாசகீஸ் , இந்த செய்தி தொடர்பாக   உங்களது கருத்துக்களை  [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தேர்வு பெறும் சிறந்த கருத்துக்கள், மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் பிரசுரம் ஆகும்.

4 COMMENTS

 1. அதுதான் கடைசியில் கரெக்டா முடிச்சிருக்கீங்களே அனுஷா மேடம்!
  கடவுள் இருக்கான் குமாரு… ஆம், அவன் பார்த்துப்பான் அனைத்தையும்!!

 2. இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கிறார் என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ஒருத்தருக்கு இருக்கும் நோயை வைத்து அவருடைய சந்ததியினருக்கும் நோய் இருக்கும் என நினைப்பது மடத்தனம்.
  எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
  லால்குடி.

 3. பரம்பரை நோய் என்று காரணம் காட்டி
  பிரிபவர்கள் வாழ்க்கை என்றால் என்ன
  என்று அறியாத மடைமை கள் தான்

 4. பெண் சுதந்திரம்,பெண்களின் உரிமை என்பதெல்லாம் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது? -வத்சலா சதாசிவன், சென்னை ‘அதிசயப்...

அன்புவட்டம்!

நடிகை ரோஜா ஆந்திரப் பிரதேசத்தின் அமைச்சர் ஆகிவிட்டாரே!! - வாசுதேவன், பெங்களூரு நான் ரோஜாவை ஸ்ரீலதாவாகச் சந்தித்தது ‘செம்பருத்தி’ காலக்கட்டத்தில்... சென்னை தி.நகரில் உள்ள விஜயராகவன் சாலையில் உள்ள ஃபிளாட் ஒன்றில் சந்தித்தேன். (பேட்டி, டைரக்டர்...