0,00 INR

No products in the cart.

“தமிழ் சினிமா என்னை ஓட வைத்தது!” – கிரிஷா குரூப் ஜாலி பேட்டி !

-ராகவ் குமார்

ழகு குட்டி செல்லம’ படத்தில் அறிமுகமாகி, ‘கோலி சோடா 2’ படத்தில் நம்மைத் திரும்பி பார்க்க வைத்து, சமீபத்தில் வெளியான ‘கிளாப்’ படத்தில் அவரது நடிப்பால் நம்மை  ஆச்சரியப் பட வைத்த கிரிஷா குரூப்  உடன்  நடத்திய சுவாரசியமான உரையாடலில்  இருந்து  சில பதிவுகள்…

மும்பை மலையாள பொண்ணு?
ன்னுடைய தாத்தா காலத்திலேயே மும்பைக்கு வந்து செட்டில் ஆகிட்டோம். நான் ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சது மும்பையில் தான். எனக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, மராட்டி மொழிகள் பேசத் தெரியும்

பரதம் தந்த வாய்ப்பு:
நான் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞர். என்னுடைய பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த ஒருவர் குறும்படம் ஒன்றில் நடிக்க அணுகினார். நானும் ஒப்புக் கொண்டேன். அந்தப் படத்தை பார்த்த விஜய் டிவியின் நீயா நானா புகழ் ஆண்டணி சார் அவர் இயக்கிய ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இதைத் தொடர்ந்து விஜய் மில்டன் சார் இயக்கத்தில் ‘கோலி சோடா 2’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

ஓட வைத்த தமிழ் சினிமா:
பொதுவா சினிமாவில் டைரக்டர்களும் டான்ஸ் மாஸ்டர்களும் ஹீரோயினை ஆட விடுவாங்க. ஆனால், தமிழ் சினிமா என்னை ஓட வைத்து புகழ் தேடி தந்திருக்கு. கிளாப் படத்தின் டைரக்டர் ப்ரித்வி ஆதித்யா என்னை ஆட வைக்காமல் ஓட்டப்பந்தய வீராங்கனையாக திரையில் காட்டி என்னை ஓட வைத்துள்ளார். தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்து விளையாட்டு துறையில் சாதனை புரிய முயற்சிக்கும் பாக்கியலக்ஷ்மியாக என்னை மாற்றிவிட்டார் டைரக்டர்.

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்…
கிளாப் படத்தில் நடிக்க வரும்போது கொஞ்சம் குண்டாக இருந்தேன். ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்க, ஓடிப் பயிற்சி எடுத்தேன். இந்தப் பயிற்சியின் விளைவாக கொஞ்சம் இளைத்து விட்டேன். இதுவும் நல்லாத்தான் இருக்கு. மெல்வின் என்பவர்  என்னை நிஜமான ஓட்டப்பந்தயத்திற்கு தயாராவது போல தயார் படுத்தினார். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பயிற்சி அளிக்க துவங்கி விடுவார். மூணு ரவுண்டு ஓடணும். நடிக்க வந்துட்டு, இப்படிப் பாடா படுத்துறாங்களே என்று யோசித்தத் தருணங்கள் உண்டு. ஆனா கஷ்டபட்டதற்க்குத் திரையில் பலனை பார்க்க முடிஞ்சது. ரசிகர்கள் பாராட்டும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.

நடிப்பா? கல்யாணமா?
கி
ளாப் பாக்கியலக்ஷ்மி மாதிரி, அவர் லட்சியத்திற்குக் கல்யாணம் தடையாக இருப்பதைப் போல என் சொந்த வாழ்க்கையில் அனுமதிக்க மாட்டேன். நடிப்பு என்பது எனக்கு  திருமணத்திற்கு முன்பு இருந்து இருக்கிறது. கல்யாணத்திற்காக நடிப்பை விட்டுக் கொடுக்க முடியாது. இதை என் வருங்கால கணவரிடம் தெளிவாக சொல்லிப் புரிய வைப்பேன்.

செலக்ட்டிவ்  ஹீரோயின் vs கமர்சியல் ஹீரோயின்:
நான் பக்கா மசாலா படத்திலும் நடிக்க ரெடி. ஆனா என்னோட கேரக்டர் எனக்கு முக்கியத்துவம் தர மாதிரி இருக்கனும்.

கண்கண்ட தெய்வங்கள்?
நா
ம கோவிலுக்குப் போகலாம், பல தெய்வங்களை வணங்கலாம். ஆனா நம்ம வீட்டில் இருக்கும் கண்கண்ட தெய்வங்களான அப்பா அம்மாவை வணங்கினாலே நம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். எனக்கு பிடித்த தெய்வங்கள் என் தாய் தந்தை தான்.

பிக் கிச்சடி :
ல உணவு வகைகள் இருந்தாலும், எனக்கு பிடித்தது டால் கிச்சடிதான்.  நான் தேடி, விரும்பி, சாப்பிடும் ஒரே உணவு கிச்சடி.

புடைவை தான் என் சாய்ஸ்!
ல மாடர்ன் ட்ரெஸ் இருந்தாலும் சேலை கட்டினால் பெண்ணிற்கு கிடைக்கும் அழகே தனிதான். சேலையில் ஒரு கம்பீரமான அழகு இருக்கிறது. சேலை அணிவது எனக்கு பிடித்தமான விஷயம். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல சௌக்கர்யமான மாடர்ன் உடைகளையும் அணிவேன்.

2 COMMENTS

  1. பெற்றோரை தெய்வமாக நினைப்பதும், சேலை அணிவது பிடிக்கும் என கூறுவதும் கிரிஷா ஒரு தனித்துவமான பெண் என நினைக்க வைக்கிறது.

  2. பிடித்த தெய்வம் தாய் தந்தையாய் இருக்கும் போது வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும் என்பது உண்மை

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...

சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!

உரையாடல் : பத்மினி பட்டாபிராமன்   ஸ்வப்னோபூரண் - பூர்த்தியாகும் கனவுகள் மேற்கு வங்காள  எல்லையை ஒட்டிய, கல்வி வசதி அவ்வளவாக இல்லாத, சுந்தர்பன்ஸ் தீவு கிராமங்களில் ஆங்கில மீடியம் பள்ளிகளை அமைத்து, அந்த ஏழைக் குழந்தைகளுக்கு...

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...