0,00 INR

No products in the cart.

உலக தண்ணீர் தினம்!

 – மங்கையர் மலர் வாசகர்களின் FB  பதிவு!

மார்ச் 22ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தண்ணீருக்காக வாசகர்கள் சந்தித்த பிரச்னைகளையும், அனுபவங்களையும் நமது கல்கி குழுமம் மற்றும் மங்கையர் மலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட சொல்லியிருந்தோம். அதில் தேர்வான சிறந்த பகிர்வுகள் இதோ உங்களுக்காக… 

சிறு வயதில் லைன் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். எங்களுடையது ஆறு பேர் கொண்ட குடும்பம். வீட்டில் தண்ணீர் கனெக்சன் இல்லை. தெரு குழாயில் தான் பிடிக்க வேண்டும். நாங்க குடம்‌ எடுத்துச் சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்து தண்ணீர் கொண்டு வந்தால்தான் மறுநாள் குளிக்க, சமைக்க துவைக்க முடியும். நானும் என் உடன் பிறந்தோறும் பள்ளி சென்ற காலம், தேர்வு சமயத்தில் ‌கூட தண்ணீர் பிடித்து வர வேண்டும்.

வெயில் காலத்தில் தண்ணீரைத் தேடி ரயில் நிலையம் வரை‌ செல்வோம். குறைவான வெளிச்சத்தில் ரயில்வே லைனை தாண்டி வருவது பெரும் சவாலாக இருந்தது.

அம்மா தேவையான அளவே செலவழித்து சிக்கனமாகப் பயன்படுத்துவார். அரிசி காய்கறி கழுவிய நீரை‌ செடிகளுக்கு விடுவார். துணி அலசிய இரண்டாவது நீரில்‌ ஸிங்க் பாத்ரூம் டாய்லெட் சுத்தம் செய்வார். நீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் மகாலட்சுமி  வாசம் செய்ய மாட்டார் என எங்களுக்கு அறிவுறுத்துவார். இப்போது போர் வெல், நல்ல தண்ணீர் என தாரளமாக இருந்தாலும் அம்மாவின் உபதேசமும் வழிகாட்டலும் இன்றும் கடைபிடிக்கிறேன்.
– பத்மாவதி மாணிக்கம், கோவை

………………………………

ன்னுடைய சிறுவயதில் எங்கள் ஊரில் கிணற்றில் உப்பு தண்ணீர்தான். பொதுக் குழாயில் இருந்து நல்ல தண்ணீர் எடுத்துக் கொண்டு வர நெடுந்தூரம் செல்ல வேண்டும். இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் நடப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

திருமணமான புதிதில் தஞ்சாவூரில் குடியிருந்தோம். அங்கு கிணற்றில் தண்ணீர் அதள பாதாளத்தில் இருக்கும். குடத்தைக் கயிற்றில் கட்டி விட்டால் தண்ணீர் மொண்டு கொண்டு மேலே வர 10 நிமிடங்கள் ஆகும். 4 குடம் தண்ணீர் இறைப்பதற்குள் மூச்சு வாங்கும். தோள்பட்டை வலி எடுக்கும். இவ்விரு சம்பவங்களும் என்னை மிகவும் பாதித்ததால் தண்ணீரை நான் எப்பொழுதுமே சிக்கனமாகத் தான் பயன்படுத்துவேன்.

என்னுடைய குழந்தைகளிடமும், வீட்டில் வேலை செய்பவர்களிடமும் குழாயை சன்னமாக திறந்து பயன்படுத்துமாறு வற்புறுத்துவேன். வீட்டுக் குழாய்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் சொட்ட ஆரம்பித்தால் உடனடியாக சரி செய்து விடுவேன்.

சிறுதுளி பெருவெள்ளம்அல்லவா! மழை நீர் , மொட்டை மாடியில் இருந்து குழாய் வழியாக கிணற்றுக்கு வந்து சேரும் வகையில் ‘மழைநீர் சேகரிப்பு’ முறையை வீட்டில் அமைத்திருக்கிறோம். அதனால் கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது.
– பி. லலிதா, திருச்சி

………………………………

நான் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி,  தண்ணீர் கஷ்டமே வந்ததில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் எங்கள் வீட்டிலிருந்து தான் எடுத்துச்  செல்வார்கள். நாங்கள் புதிதாக குடிபுகுந்த வீட்டில் கிணறு தான் இருந்தது. தண்ணீர், அருமையாக இருக்கும். இர‌ண்டு மாதத்தில் மழைக்காலம் வந்தது. எங்கள் கிணற்றுச் சுவருக்கு அரையடி கீழே நீர் நிரம்பியிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். அப்படியே நீரை மொண்டு கொள்வோம்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வறட்சியால் அடியில் பாறைதான் தெரிந்தது. அதனால்  என் கணவர் மற்றும் பிள்ளைகள் தினமும் இரவில் தெரு  பம்ப்பில் இருந்து கை வலிக்க வலிக்க தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவார்கள். மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். அப்போது தான் தண்ணீர் கஷ்டமே எனக்கு தெரியவந்தது.
– இந்திராணி பொன்னுசாமி, சென்னை 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...