0,00 INR

No products in the cart.

சியாடில் TO வான்குவர் ‘ஜில்’ பயணம்!

வாசகர் பயணம் அனுபவம்!
– ஜெயகாந்தி மகாதேவன்

 

நானும் என் கணவரும் தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கியுள்ளோம் . இங்குள்ளவர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் லாங் வீக் என்ட்களில், ஒன்றிரண்டு நாட்கள் லீவ் சேர்ந்து வரும்போதும், ‘கெட் அவே’ என்று கூறி வீட்டை விட்டு வெளியே சென்று தங்கி வருவது சகஜம். அதேபோல் நாங்களும் சமீபத்தில் நாலு  நாள் விடுப்பில் சியாட்டிலில் இருந்து சுமார் மூன்றரை மணி நேர டிரைவில் போர்ட்லேண்ட் அருகே உள்ள வான்குவார் என்ற ஊருக்கு புறப்பட்டோம்.

கைக்குழந்தை கார் சீட்டில் அதிக நேரம் பயணிக்க முடியாதென்பதால், மகன் கார்த்திக் காரில் செல்ல மற்றவர்கள் ரயிலில் பயணித்தோம். அங்குள்ள ரயில் மற்றும் அதனுள் உள்ள கழிப்பறைகளின் சுத்தத்தை அதில் பயணித்தால் மட்டுமே உணர முடியும்.

ஸ்டேஷனில் வண்டி நின்றவுடன் டிரைவர் உள்பட இரண்டு மூன்று பேர் வந்து இறங்கும் வழியை (கதவு அல்ல. ஒரு ஸ்லாப் போன்ற அமைப்பு.) திறந்து விட்டு பயணிகள் இறங்கி, ஏறிய பின் பாதுகாப்பாக மீண்டும் மூடிவிட்டு செல்கின்றனர். ரயிலினுள் இரண்டிரண்டான இருக்கைகளில் முதலில் வருவோர் ஜன்னலோர சீட்டை பிடித்துக்கொள்ள குடும்பமாக வருவோர் சேர்ந்து அமர முடியாமல் போகிறது. அங்குள்ள டிக்கெட் பரிசோதகர் அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் இறங்குபவரை கண்டுபிடித்து குடும்பமாக வந்தவர்களை சேர்ந்து அமர செய்கிறார். இதை அவர் கடைசி ஸ்டேஷன் வரை செய்துகொண்டே இருக்கிறார்.

வான்குவார் வந்ததும் மகனுடன் காரில் தங்குமிடம் நோக்கி புறப்பட்டோம். ஏற்கெனவே ஆன்லைனில் ஒரு தனி வீட்டை ஐந்து நாள் வாடகைக்கு புக் பண்ணியிருந்தோம். வீட்டு ஓனர் கொடுத்த அட்ரஸ கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நம் ஊரில்போல வீட்டு நம்பர் அடுத்தடுத்து வராது. 1542 க்கு அடுத்த வீடு 1548 ன்னு இருக்கும். என்ன சிஸ்டமோ புரியாது. ஜிபிஸ் மேப்ல கார்த்திக் அட்ரஸ் தேடிகிட்டு இருக்கையில், பொறுமை இழந்த நான், “கார்த்தி, ஓனர போன்ல கூப்பிட்டு லேண்ட் மார்க் கேளு அல்லது இங்க யார் கிட்டயாவது விசாரி” என்றேன். “அம்மா, நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. ஓனர்லாம் பேச மாட்டாங்க. இங்க ரோட்ல ஏதாவது தல தெரியுதா பாருங்க. அப்படியே தெரிந்தாலும் ரோட்ல கார நிறுத்தி பேசுவதற்கெல்லாம் அனுமதி கிடையாது. பொறுமையா இருங்க” என்றான். பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டை கண்டுபிடித்துவிட்டோம்.

ஆர்வ மிகுதியில், “கார்த்தி, ஓனர், வீட்டு சாவிய யார்கிட்டயாவது கொடுத்தனுப்பிஇருப்பாரா” என்றேன். பதிலேதும் சொல்லாமல் போனை நோண்டிகிட்டிருந்தான். Airbnb என்ற வெப்சைட்டிற்குள் சென்று அதில் இந்த அட்ரஸுக்கு கொடுக்கப்பட்டிருந்த கோட் நம்பரை கண்டுபிடித்து ஆபரேட் பண்ணினான். தலைவாசல் கதவு  திறந்து கொண்டது. பின் உள்ளே சென்று ஒரு பட்டனை அழுத்த கராஜ் ஷட்டர் தானே மேலெழுந்து திறந்துகொண்டது. டெக்னாலஜி என்னமா வளருது!

காரை பார்க் பண்ணிட்டு ஷட்டரை மூடினான். கராஜ் உள்ளிருந்தே வீட்டுக்குள் செல்ல வழி இருக்கும். சாமான்களை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள சிறு ஆபீஸ் ரூமை கடந்து படிக்கட்டு வழியா மாடியை அடைந்தோம். சுத்தமான நீண்ட பெரிய ஹால். தடுப்பு சுவரின்றி ஒருபுறம் வரவேற்பு, நடுவில் டைனிங் அதற்கடுத்து கிச்சன் என இருந்தது. ஜன்னல்களுக்கெல்லாம் கண்ணாடி கதவுகள்தான். இங்குள்ள வீடுகள் அனைத்துமே இதே மாதிரிதான். நல்ல வெளிச்சம் மற்றும் உள்ளிருந்தவாறே வெளியில் தெரியும் இயற்கையை ரசிப்பதற்குமான ஏற்பாடு.

டைனிங் டேபிள் மீது ஒரு மூங்கில் கூடையில் மூன்று பேப்பர்கள் பின் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அதில் வாடகைக்கு வருபவர்களுக்கான கண்டிஷன்ஸ்
மற்றும் வீட்டிலுள்ள பொருள்களை எவ்வாறு உபயோகிப்பது போன்ற
வழி காட்டு முறை, அருகில் சுற்றுலா செல்ல தகுதியான இடங்களின்
விவரம் ஆகியவை கொடுக்கப் பட்டிருந்தது. சமைக்க, சாப்பிட தேவையான பாத்திரங்கள் இருந்தன. இரண்டாவது மாடியில் ஸ்டார்
ஹோட்டல் வசதியுடன் இரண்டு
பெட்ரூம் இருந்தது.செட்டில் ஆனதும் ஆன்லைன்ல டின்னர் வாங்கி
சாப்டுட்டு தூங்கிட்டோம். மறுநாள் பக்கத்துல பார்க், மால்னு சென்று வந்தோம்.

டுத்த நாள் சாரல் போல் மழையும் குளிருமா இருந்தது. மருமகளையும் சின்ன குழந்தையையும் வீட்டில் விட்டுட்டு மூன்று வயது பெரிய பேத்தியும் நாங்களும் சுற்றி பார்க்க கிளம்பினோம். ஆரகான் மாநிலத்தில் உள்ள மல்ட்னோமா என்ற நீர் வீழ்ச்சியை காண மிக நீளமான கொலம்பியா நதிக்கரையை ஒட்டிச்சென்ற நெடுஞ்சாலையில் பயணிக்கலானோம். ஒரு பக்கம் நதி மறுபக்கம் நெடிதுயர்ந்த மலைகளும் அடர்ந்த காடுகளும் பார்க்க கண்கொள்ளா காட்சியாயிருந்தது. நீர்வீழ்ச்சி இருந்த இடத்தை 12 மணிக்கு சென்றடைந்தோம். அங்கு சென்றபின்தான் தெரிந்தது ஆன்லைன்ல டிக்கெட் வாங்கியிருக்கணும்னு. அவசரமா ஃபோன திறந்து டிக்கெட் புக் பண்ணிட்டுப் பாத்தா ஒரு மணிக்குத்தான் நுழைவு நேரம் என காட்டியது.

அங்கிருந்தவர் ஒரு ஐடியா சொன்னார். “15 நிமிட டிரைவில் கேஸ்கேட் லாக் என்று ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் உள்ளது. அத பாத்துட்டு வந்தீங்கன்னா நேரம் சரியா இருக்கும்” என்றார். அதுவும் சரி என்று கிளம்பினோம். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாம அந்த இடத்தை அடைந்தோம். அங்கு மழை காலத்தில் கொலம்பியா நதியில் சேரும் அதிகப்படியான நீரினால் ஏற்படும் வேகத்தையும் சுழற்சியையும் கட்டுப்படுத்த ஒரு ப்ரத்யேகமான அமைப்பை உண்டுபண்ணி அதற்குள் அதிகப்படியான நீரை லாக் பண்ணி கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதன் மூலம் நதியில் போக்குவரத்தும் மற்ற செயல்பாடுகளும் தங்குதடையின்றி வழக்கம்போல் நடைபெறுகிறது. லாக் செய்யப்பட்ட நீரில் படகு போக்குவரத்து, நைட் க்ரூய்ஸ் போன்றவை நடைபெறுகின்றன. இங்குதான் 96 வருட பழமையான பிரிட்ஜ் ஆஃப் த காட்ஸ் (Bridge of the Gods) என்ற இரும்பிலான அழகிய பாலம் உள்ளது. 1858 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம்  வாஷிங்டன் ஆரகான் ஆகிய இரு மாநிலங்களையும் இணைப்பதால் மலை ஏறுபவர்கள் உள்பட அனைவருக்கும் இது மிக உபயோகமாயுள்ளது. இளம் ஜோடிகள் இங்கு வந்து திருமணம் செய்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றை எல்லாம் பார்த்துவிட்டுட்டு நீர்வீழ்ச்சிக்கு திரும்பினோம்.

சுமார் 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த மல்ட்னோமா நீர்வீழ்ச்சி ஆரகான் மாநிலத்தின் மிக உயர்ந்த மற்றும் வருடம் முழுவதும் நீர் கொட்டும் அருவி என்ற பெருமை பெற்றுள்ளது. பின் மதிய உணவை முடித்தோம். நேரம் இருந்ததால் அங்கிருந்து சிறிது தூரத்தில் கொலம்பியா நதிக்கரையில் 700 அடி உயரத்தில் அமைந்துள்ள விஸ்டா ஹவுஸ் என்னும் கிரௌன் பாயிண்ட் சென்றோம்.1917 ல் கட்டப்பட்ட மிக அழகிய வியூ பாயிண்ட் அது. அதன் உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தோம். அந்த நாள் மிகவும் திருப்தியா முடிந்த சந்தோசத்துடன் வீடு திரும்பினோம். மறுநாள் மழை அதிகமா இருந்ததால் அடுத்த நாள் கிளம்புவதற்கான வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிட்டோம்.

நாலு நாள் சேர்ந்த குப்பைகளை
இனம் பிரித்து, பார்சல் பண்ணி தெரு
முனையில் இருந்த குப்பை சேகரிக்கும் யார்டில் அதற்காக கொடுக்கப்பட்டிருந்த கோட் நம்பரை போட்டு கதவை
திறந்து மூக்கை மூடிக்கொண்டே
அதனதன் இடத்தில் போட்டுவிட்டு வந்ததுதான் முக்கியமாகவும்
சவாலாகவும் இருந்தது.

குறிப்பிட்டு சொல்லும்படியான
மற்றொரு மறக்க முடியாத விஷயம்,
இங்கு தங்கியிருக்கும்போதுதான் மங்கையர் மலர் “ரீல்ஸ் ராணி” போட்டிக்கான வீடியோக்களை இரவு
பத்து மணிக்கு மேல் விழித்திருந்து ஷூட் பண்ணி அனுப்பியது. மறுநாள் கிளம்பி, வந்தது போலவே நாங்கள் ரயிலிலும் கார்த்திக் காரில் வந்து ஸ்டேஷனில் எங்களை பிக்கப் பண்ணிக்கொண்டும் வீடு வந்து சேர்ந்தோம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

4
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...