மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால் எடையை அதிகரிக்க உதவும்.
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
மாம்பழத்தில் இருக்கும் நார்சத்து ஜீரணத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது.
பல் ஈறுகளில் ரத்தக் கசிவு, பல்வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மாம்பழம் நம் உடலில் ரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.
மாம்பழத்தில் விட்டமின்கள் இருப்பதால் உடல் சக்தி கிடைக்கும்.
ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும்.
பெண்களின் கருப்பையில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்கும்.