0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி…. ஒருவர் கோபத்தில்… அடுத்தவர் ஆபத்தில்…!

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர், இந்தியாவின் முதல் இளம் மேயர். மாநகராட்சியில் நடக்கும் சில முறைகேடுகளைப் பற்றிப் பேசும்போது, தம்மை ‘எல்.கே.ஜி. குட்டி’ என்று கவுன்சிலர்கள் தொடர்ந்து கேலி செய்து வருவதாக ஆவேசமாக முறையிட்டுள்ளார். இளம் வயதினராக இருப்பதாலும், பெண்ணாக இருப்பதாலும் அவருக்கு அனுபவம் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

“எனக்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்பது தெரியும். என்னுடைய பக்குவத்தை அளப்பதற்காக யாரும் வர வேண்டாம்!” என்று காட்டமாகப் பொங்கியிருக்கிறார் ஆர்யா.

ண்மைதான்! இது எல்லா அலுவலகங்களிலும நடப்பதுதான். அதிலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியல், சினிமா, ஊடகம் பிரிவுகளில் பெண்கள் வேலைக்குச் சேர்ந்தால், எள்ளல், இளக்காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

“ஒரு பொம்பளை சொல்லி, ஆம்பள கேக்குறதா?” என்ற ஆதிக்காலத்து ஆதிக்க மரபணு, அவர்களுக்குள் இன்னும் முழுிச்சு, முழிச்சு, முரண்டு செய்வதே காரணம்! ஆண்கள் தத்தம் கடமைகளைச் சரிவர செய்தால், பெண் அதிகாரிகள் ஏன் வீணே விரட்டப் போறாங்க?

இதோ சமீபத்துல கூட தேனி மாவட்டத்துல ஒரு சம்பவம் நடந்திருக்கு. ஐம்பது வயதான அலுவலர் ராஜராஜேஸ்வரியை அவரது உதவியாளர் அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். தேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது குறித்து, பெண் அதிகாரியான ராஜேஸ்வரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுதான் இந்த வெறிச் செயலுக்குக் காரணமாம்!

ஒரு விஷயம் கண்மணீஸ்… அது வீடோ, அலுவலகமோ, ஆண் இனமானது, பெண்ணை ஒரு காம்ப்ளிமென்ட்ரியாக, சகத் துணையாக நினைத்து வேலை செய்தால், அதனுடைய எண்ட்-ரிஸல்ட் வேறு மாதிரியாக இருக்கும்!

மாறாக, முரட்டுத்தனமாக எதிர்த்து, முட்டுக்கட்டை போட்டு, அவளது மன ஆற்றலைச் சிதைக்கும் சம்பவங்களை உருவாக்கினால், அவள் வெட்ட வெட்ட துளிர்வாள்.  இன்னும் துணிவாள். மேலும் மேலும் மிளிர்வாள்!

ஏனென்றால் உலகை நகர்த்தும் இயற்கைக் கடியாரம் – பெண்!

அவளை அவ்வளவு இலேசில் நிறுத்திவிட முடியாது என்று ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஆகச் சிறந்த சமயம் வந்துவிட்டது. அதற்கு சாட்சி வேணுமா?

கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பிடித்து அசத்தியுள்ளனர். முதலிடம் பெற்ற ஸ்ருதி சர்மாவுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும்!

2 COMMENTS

  1. வீடோ,அலுவலகமோ, ஆண்கள் பெண்களை
    சகத்துணையாக நினைத்து வேலை செய்தால் வெற்றி நிச்சயம். மாறாக எதிர்த்து நின்று மன ஆற்றலை சிதைத்தால்
    வெட்ட வெட்ட துளிர்வாள்,இன்னும் துணிவாள்,மேலும் மிளிர்வாள்.எத்தனை அழகான வரிகள்.ஆசிரியருக்கு நன்றி.

  2. ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில் பெண்களை அடக்கி ஆளும் முறைதான் உள்ளது. சமத்துவம் கூட வேண்டாம், ஒரு சக உயிராக கூட மதிக்க தெரிவதில்லையே. இது அவர்களின் மரபிலேயே ஊறிப்போன ஒன்று. மாறுவது மிக மிகக் கடினம். என்னதான் இவர்கள் வெட்டினாலும் திரும்பத் திரும்ப தழைத்தோங்கி வளர தான் செய்வாள். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு கவிஞர் இருப்பார்... அப்புறம் வீட்டுக்கு ஒரு ப்ளாக் ரைட்டர்! இப்போது தெருவுக்கு நாலு யூ-ட்யூபர்கள் இருக்கின்றனர். அதிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் “நான் எந்த விதத்துல மட்டம்?”னு இறங்கி அடிக்கிறார்கள். “டியர் ஃப்ரென்ட்ஸ்......

ஒரு வார்த்தை!

ரொம்ப நாளாச்சே கதை சொல்லி! லெட் மி ஸே எ குட்டி ஸ்டோரி. ஜப்பான் நாட்டில் நடந்த கதை இது! ஓர் இளவரசனுக்கு முடி சூட்டும் விழா நடக்கப் போகிறது. பட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடி,...

ஒரு வார்த்தை!

ஸ்ரீமதி, சரளா, ரம்யா, சிவகாமி, யோகலட்சுமி என்ன அழகான பெயர்கள்! இளவயசு பெண்கள்? என்ன ஆச்சு, இந்தச் சிறுமிகளுக்கு... தமிழக மக்கள் விக்கித்தும் துக்கித்தும் போயிருக்கின்றனர்! இளமை கொலுவிருக்கும் இளம் குருத்துக்கள் தற்கொலை செய்து...

ஒரு வார்த்தை!

அந்த இரண்டு மாத பெண் சிசுவுக்கு ‘குஷி’ன்னு பெயர் வைக்கலாம் கண்மணீஸ்... பெயரிலாவது ஆனந்தம் இருக்கட்டுமே! தூக்க மருந்து கலந்த பாலைக் குடிச்சுட்டு, சுளீர் வெயில் முகத்தில் அறைஞ்சாலும், வாய் பிளந்து, ஆடாமல்...

ஒருவார்த்தை!

உஷா வீட்டுல விசேஷம்! கல்யாண மண்டபத்துக்குள்ள என்ட்ரி கொடுக்கறதுக்கு முன்னால உஷா பற்றி ஓர் அறிமுகம். அவள் எனக்கு தூரத்து உறவினள். வீட்டுல வசதியில்லாததால, அவளே தன்னுடன் வேலை பார்த்த வேற்று ஜாதிக்காரரைத்...