உலகின் முதல் ரோபோ உணவு டெலிவரி – தெறிக்கவிடும் டெக்னாலஜி!

உலகின் முதல் ரோபோ உணவு டெலிவரி – தெறிக்கவிடும் டெக்னாலஜி!
Published on

-ஜெனிபர்

ணவு டெலிவரி செய்ய ரோபோக்களை அறிமுகப்படுத்தி புதிய அங்கீகாரம் பெற்றுள்ளது, உபர் ஈட்ஸ். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உபர் ரோபோக்கள் உணவு டெலிவரி செய்கின்றன.

கலிபோர்னியாவில் தானியங்கி வாகனங்கள் மூலம் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்து இருப்பதாக உபெர் டெக்னாலஜிஸ்  நிறுவனம் தெரிவித்திருந்தது. இத்துடன் தனது குளோபல் டிரைவர் செயலியில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை சேர்த்து வருவதாகவும் உபெர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்தது. உபெர் நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

எங்கும் ரோபோ

மெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், உணவு வினியோக நிறுவனங்கள், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றன. கொரோனா பரவலுக்குப் பின் உணவு வினியோக துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், போதிய ஆட்கள் கிடைக்காமல் திணறுகின்றன. இதையடுத்து ரோபோக்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், உணவு டெலிவரிக்கும் ரோபோக்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் `உபர் ஈட்ஸ்' ஆப்பில் உணவு ஆர்டர் செய்தால், ஒரு ரோபோ  உங்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி டெலிவரி தருகிறது. இதன் மூலம் உலகின் முதல் ரோபோ டெலிவரி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது உபர் ஈட்ஸ்.

முதற்கட்டமாக இந்த சேவை அமெரிக்காவில் தொடங்கி இருக்கும் நிலையில், உலகின் மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

******************************

விண்வெளிக்கு பயணிக்கிறது இட்லி!

ம்மூர் இட்லிக்கு பல வரலாறுகள் இருக்கும் நிலையில் இந்த உணவு புதிய வரலாறு படைக்க உள்ளது. இது விரைவில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. விண்வெளி ஆய்வுக்காக இதுவரை இந்தியாவை பூர்விகமாக உடைய மூன்று பேர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 1984ல் இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா அப்போதைய சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலம் வாயிலாக பயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து இந்தியாவைப் பூர்விகமாக உடைய சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா இருவரும், அமெரிக்காவின் "நாசா" சார்பில் விண்வெளிக்கு சென்றனர்.

சமீபத்தில் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்துக்காக இந்தியாவை பூர்விகமாக உடைய ராஜா சாரி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் 'சுகன்யான்' திட்டத்தின் வாயிலாக மனிதர்களை முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதற்காக நான்கு இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நம் வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது அவர்களுக்கான உணவுகள் குறித்து ராணுவ உணவு, ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட .உணவுதான் இட்லி. எண்ணெய் இல்லாத மிகவும் வேகமாக செரிக்கக் கூடியது இட்லி. அதனால் விண்வெளி வீரர்களுடன் இட்லியை அனுப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2 ரூபாய் நாணய அளவுள்ள இட்லிகள் அனுப்பப்பட உள்ளன. கூடவே சட்னியும், சாம்பாரும் உண்டு. விண்வெளி பயணத்தக்கு வீரர்களும் தயாராகிவிட்டனர். கூடவே நம்மூர் இட்லியும் பயணம் செய்ய உள்ளது.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com