0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

நீங்க யாருடைய ரசிகை? ( சினிமா தவிர…!)
நளினி ராமச்சந்திரன், கோவை

டேய்யாருடா கண்ணுங்களா நீங்கள்ளாம்? எங்கடா இருக்கீங்க? இருபத்து நாலு மணி நேரமும் ஒரு ஜாலிக் கோழி, உங்க மண்டைக்குள்ள ஜோவியலா கூவிக்கிட்டே இருக்குமாடா…? சூப்பரா சிரிக்கவும் சிந்திக்கவும் வெக்கறீங்கடா!’ என்று அதிசயப்படும் அளவுக்கு அசத்திக் கொண்டிருக்கும், ‘மீம்ஸ்’ கிரியேட்டர்ஸ்களின் ரசிகை நான்!

அது மழையோ, மசால் வடையோ… ‘மாநாடோ’, மோடிஜியோ டாபிகலா என்ன ஓடுதோ அதுக்கு அப்படியே பொருத்தமா கேரக்டர்கள் அல்லது காட்சிகளை மேட்ச் பண்ணி நக்கலடிச்சுத் தூக்கறதுசும்மா சொல்லக் கூடாதுஎன்ன ஒரு புத்திசாலித்தனம்?!

பக்கம் பக்கமா எழுத வேண்டிய விஷயத்தைக்கூட ஒரே ஒரு மீம்ஸ் போட்டு உலக அளவில் வைரல் ஆக்குறதை என்ன சொல்லிப் பாராட்ட? அது ஒரு தனிக்கலை! பல பேர் இப்ப வாய் விட்டு சிரிக்கிறதே மீம்ஸ் படைப்பாளிகளால்தான்ஒத்துக்கறீங்களா நளினி?

ஆதவன் அனுஷாவை எழுப்புமா? அனுஷா ஆதவனை எழுப்புவாங்களா?
உஷா முத்துராமன், திருநகர்

இரண்டுமில்லைஎன்னோட அன்றாடக் கடமைகள்தான் என்னை உலுக்கி எழுப்பிவிடும். சின்ன வயசுலயிருந்தே, பரீட்சை இருந்தாலோ, வீட்டுல ஏதாவது விசேஷம்னாலோ, ஊரு, டூருன்னு போகணும்னாலோ, கடவுள் நம்ப உடம்புக்குள்ளயே, ‘செட்’ பண்ணி அனுப்பியிருக்காரே அந்த பயோ கிளாக் (இன்ஃபேக்ட்அது பயோ கிளாக் அல்ல; ‘பயம்’ கிளாக்!) டிக்டிக்னு தூங்கவே விடாது.

காலமிது காலமிது’ என்ற கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கீங்களா? நிம்மதியாகத் தூங்கக்கூட நேரமில்லாது உழைக்கும் குடும்பப் பெண்களின் நிலைமையைப் பருவம் பருவமா பிரிச்சுச் சொல்லியிருப்பாரு. எப்போது கேட்டாலும் மனசைப் பிழியும் உருக்கும்.

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டுவிட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு…’
மீளாத் துயிலில்தான் பொறுப்பான பெண்ணுக்கு உறங்கவே வாய்ப்பு கிடைக்குமாம்! கண்ணதாசனைக் கைப்பிடித்துக் குலுக்கத் தோணலை?

பிக்பாஸில் ரம்யா கிருஷ்ணன்…?
வாணி வெங்கடேஷ், சென்னை

கமலஹாசனே சொன்ன, ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’தான் இது!

காதி ஆடை விற்க கமல் அமெரிக்கா போகணும், ‘கொரோனோ’ வாங்கி வரணும், தனக்குத் தானே செல்ஃப் எலிமினேஷன் ஆகணும், நீலாம்பரி என்டர் ஆகணும்இவ்வளவு விஷயம் சங்கிலிக் கோத்ததுபோல நடந்துடுச்சே!

பொன்’ வெக்கிற இடத்துல, ‘பூ’ வெக்கிறாங்க ரம்யா!

ஆனாலும், இந்திய பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரு பெண் நெறியாள்வது இதுவே முதல்முறை என்பதால், ‘ராஜமாதா’வை கட்டியம் கூறி வரவேற்கலாம்! போகப் போகத் தெரியும்இந்த ‘பூ’வின் வாசம் புரியும்!

‘itchy boots’ யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ரசித்து இருக்கீங்களா?
பானு பெரியதம்பி, சேலம்

சில வீடியோக்களைஅதுவும் பனிப்படர்ந்த ஹிமாலயப் பகுதிகளில் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் நொராலி செய்த சாகசப் பயணம்ரியலி அட்வென்ச்சர்ஸ்! (அந்த, ‘பைக்’குக்கு அவர் வைத்த செல்லப் பெயர், ‘பஸந்தி…’ அது, ‘ஷோலே’ படத்தில் ஹேமமாலினியின் பெயராக்கும்!!)

எங்க ஊருல, நமக்கு உள்ளங்கை அரிச்சதுன்னா, ‘பணம் வரும்’னும், கால் பாதம் அரிச்சதுன்னா, ‘பிரயாணம் வரும்’னும் பெரியவங்க சொல்வாங்க. (சும்மாதான்அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வரலை…!)

ஆனா இந்த, ‘இச்சி பூட்ஸ்’ பொண்ணு நொராலிக்கோ பூட்ஸ்தான் அரிக்குதுஆனா, அவரோட அதிர்ஷ்டம், பிரயாணமும் வருது; கூடவே பணமும் வருது!

நொராலி ஒரு பொம்பளை அஜித்! ‘பைக்’, அதுவும் தனியா காடு, மலை, பாலைவனம்னு உலகம் சுத்தி வர்றதுன்னு அவ்வளவு பித்து! அதுக்காக தன்னோட வீட்டையே வித்துட்டு, ‘டுர்’ன்னு கிளம்பிடுச்சு பொண்ணு!

நொராலி தன்னோட பைக் சாகசங்களை வீடியோ எடுத்துப் போட, அதுக்கு ஆறு லட்சம் ரசிகர்கள் வந்து குமிஞ்சுட்டாங்கஉடனே ஸ்பான்ஸர்ஸ் விடுவாங்களா?

அம்மணியோட பூட்ஸ், ஹெல்மெட், ரெயின்கோட், மேக்புக், மைக்ரோ ஃபோன், பெட்ரோல், சாப்பாடுன்னு ஏகப்பட்ட பேர் நன்கொடை வழங்க…. நொராலி வெரி ஹேப்பி மச்சி!

இதுல யூட்யூப் தர்ற காசு தனி!

ஒரு டச்சு நாட்டுப் பொண்ணு, தனியா, தைரியமா, ‘பைக்’குல பிரச்னையில்லாமல் சுற்றி வருது!

இங்க என்னடான்னாவயசுப் பொண்ணுங்க வீதியில தனியா வாக்கிங் கூட போக முடியலை! நம்ப ஊருலயும் சாதத்தோடு, பெண்ணுக்கு மனோதைரியமும், ஆணுக்கு நல் அறமும் நிதமும் ஊட்டி வளர்த்தால், நூறு நொராலிகள் கிளம்புவாங்க!

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா? -பி. வந்தனா, விருத்தாச்சலம் நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா...! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும்...

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...