0,00 INR

No products in the cart.

என் பள்ளி; என் குடும்பம்!

பேட்டி : சேலம் சுபா

மிழ்நாட்டிலேயே முதன் முதலில் அரசுப்பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.. தரச்சான்று பெற்று அசத்தும் தலைமையாசிரியை மாலா.
ந்து குவியும் பாராட்டு மழையில் பெருமை கொள்ளாமல், ‘இது என் கடமை; குழந்தைகள் என் குடும்பம்’ என்று தன்னடக்கத்துடன் தலைநிமிர்ந்து சொல்கிறார்.

ரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியையான மாலா, 2017ல் நல்லாசிரியை விருது பெற்றவர். தனது நல்ல செயல்களால் அந்தப் பகுதி மக்கள் முதல், படிக்கும் மாணவிகள் வரை மனம் கவர்ந்தவர். இப்போது, மொத்த தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அப்படி என்ன செய்தார் இவர்?

தனது பள்ளிக்கு தரமான சமையல் கூடத்தை அமைத்துத் தந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சர்வதேச தரச்சான்றிதழான ஐ.எஸ்..வைப் பெற்றுள்ளார். இதற்கான இவரின் உழைப்பும் செயல்களும் அசாத்தியமானவை. சமையல்கூடத்தை மட்டுமல்ல; அந்தப் பள்ளியின் இன்னும் பல்வேறு அம்சங்களையும் மேம்படுத்தி, ‘நாம் இருப்பது அரசுப்பள்ளியா?’ என வியக்க வைக்கிறார்.

இயற்கைச் சூழலில் பள்ளிக்குத் தேவையான காய்கறிகளை பயிரிடும் மாணவிகளுக்கு உற்சாகம் தந்துகொண்டிருந்த அவருக்கு நாமும் வாழ்த்துக்கள் சொல்லி, அவரது செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களைக் கேட்டோம். இனி, மாலா மேடம்

தலைமையாசிரியை மாலா

னது சொந்த ஊர் கேரளா. படித்ததெல்லாம் சென்னையில். 23 வருட ஆசிரியப் பணிக்குப் பின், 2012ல் தலைமையாசிரியராக உயர்வு பெற்று 2018ல் இந்தப் பள்ளிக்கு வந்தேன். ஆண்கள் பள்ளியிலும், இருபாலார் பயிலும் பள்ளியிலும் பணி செய்திருந்தாலும் பெண்கள் பள்ளியில் பணி செய்யும் என் ஆர்வத்தினால் நானே விரும்பித் தேர்வு செய்தது இந்தப் பள்ளி. ஓய்வு பெற இருக்கும் சில வருடங்களுக்குள் என்னால் முடிந்த அளவு பள்ளிகளை சீராக்கி, பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தர வேண்டும் எனும் உறுதியுடன் இங்கு வந்தேன்.

இங்கு வந்ததும் என் கண்ணில் முதலில் பட்டது கழிவறைகள். பெண் குழந்தைகளுக்கு சுகாதாரமான கழிவறை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு பெண்ணாக நான் அறிந்ததால் உடனடியாக ஆட்களை நியமித்து தினம் இரு முறைகள் அவற்றை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தேன். அந்தப் பணி தொடர்கிறது.

அடுத்து, சுகாதாரமான உணவு. பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் கரி படிந்த சுவர்களுடன் கடமைக்கென்றிருந்த சத்துணவுக் கூடத்தை மாற்ற நினைத்து, சக ஆசிரியர்களுடன் ஆலோசித்தேன். முதலில், பள்ளி மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து சந்தித்துப் பேசினோம். பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் விருப்பத்துக்கு ஞாயிறுகளில் கூட்டம் நடந்தது. எல்லோருமே நான் நினைத்ததற்கு மேலாக, தங்கள் பிள்ளைகளின் கல்வி நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தது எனக்கு பெரும் உற்சாகம் தந்தது. அதேபோல், இந்தப் பள்ளிக்கு நன்மை செய்ய நான் அணுகிய கொடை வள்ளல்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் இப்படி நிறைய நல்ல மனம் கொண்டவர்கள் இணைந்தோம். புள்ளி நானாக இருந்தது மட்டுமே எனது பெருமை.

ரி படிந்த சுவர்களை வெகு சிரமப்பட்டு தூய்மை செய்தோம். கல்வித்துறையில் மனு தந்து விறகடுப்பை காஸ் அடுப்பாக மாற்றினோம். அரசுத்துறை அதிகாரிகள் வந்து பள்ளிகளை கண்காணிப்பது வழக்கம். அப்படி இங்கு வந்த சத்துணவு துறையின் அலுவலர் ஆச்சர்யப்பட்டு, ‘‘மேடம், நீங்கள் வந்த சில நாட்களுக்குள்ளேயே மாற்றங்களை செய்கிறீர்கள். ஏன் ஐ.எஸ்..விற்கு விண்ணப்பிக்கக் கூடாது” எனக் கேட்டார். நம் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றால் இன்னும் வேகம் கிடைக்குமே? அது எனக்கும் நல்ல யோசனையாகத் தெரியவே, விண்ணப்பித்தோம்.

.எஸ்.. நிறுவனத்திலிருந்து முதன் முதலில் வந்த அதிகாரிகள் சொன்ன இருபது குறைகளை ஒவ்வொன்றாக களையத் துவங்கினோம். இதில் மறக்க முடியாத விஷயமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு கொண்டு வந்த கல்வி சீர் திட்டம்தான். பெற்றோர், ஆசிரியரிடம் கலந்து பேசி, ஒரு மெகா கல்வி சீர் விழாவை நிகழ்த்தினோம். அதில் சமையலுக்குத் தேவையான உபகரணங்கள் முதல் அனைத்தும் சீராகக் கொண்டு வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர் பெற்றோர்.

அந்த நிகழ்வு காணொளிப் பதிவாக இன்றும் வலம் வருகிறது. பிரபல இசை ஜாம்பவான்கள் ரகுமான், ஹரிஹரன் போன்றவர்களும் அதைப் பார்த்தது எங்களுக்கு மகிழ்வாக இருந்தது. காரணம், சீர் கொண்டு வருபவர்களுக்கு வரவேற்பாக மாணவிகள் அளித்த தாரை தப்பட்டை இசை முழக்கம் அவ்வளவு அருமையாக இருந்தது.

ட்டுகள் வைக்கும் ஸ்டான்ட் முதல் குக்கர், மிக்சி, கிரைண்டர், ஏன் துடைப்பம் வரை அவரவர்களுக்கு உண்டான வசதிக்கேற்ப சீர்கள் கிடைத்தன. இதுவரை இப்படியொரு மெகா கல்வி சீரை எந்தப் பள்ளியும் நிகழ்த்தியதில்லை. பின் படிப்படியாக சமையலறையை நவீனப்படுத்தவும் சுகாதாரமாக்கவும் துவங்கினோம். முக்கியமாக, பிளாஸ்டிக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து, பிளாஸ்டிக் இல்லாத பள்ளியாக மாற்றினோம்.

கல்விசீரில் தப்பட்டை

பள்ளியில் பணி புரியும் சமையலர் மற்றும் பொறுப்பாளரான கவிதாவும், மகேஸ்வரியும் கைகளில் கிளவ்சுடனும் தலை முடி விழாமல் இருக்க கவர் செய்தும் நகங்களை வெட்டியும் இருக்க வைத்தேன். இரண்டு கேமராக்களைப் பொருத்தினேன். அரசு தரும் மளிகை சாமான்கள் அளவு மாறாமல் வருகிறதா என அறிய அளவுகோல் உபகரணங்கள் மற்றும் எண்ணெய் அளக்கும் கருவிகளை வாங்கினோம். சுடுநீரில் தட்டுகளைக் கழுவ அதற்குரிய வசதி செய்யப்பட்டது. கைகள் கழுவும் நீர் முதல் சமையலுக்குப் பயன்படுத்தும் நீர் வரை வெளியில் செடிகளுக்குச் செல்லும்படி அமைத்தோம். குறிப்பாக, குடிநீர் சுகாதாரம் வேண்டி ஆர்.. மெசினை பொருத்தி, அதில் வரும் நீரில் சமைத்தோம். இது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

தீ விபத்தைத் தடுக்கும் கருவியும் பொருத்தினோம். ‘பெண் பிள்ளைகளுக்குத் தகுந்த இரும்புச் சத்து கிடைக்க வேண்டும். முருங்கை மரம் வையுங்களேன்’ என ஆலோசனை தந்த அதிகாரி கைகளினாலேயே முருங்கை மரம் நட்டு, இப்போது முருங்கை சூப்பும் தருகிறோம். இதெல்லாம் உருவாக பல மாதங்கள் பிடித்தது. இடையில் திடீர் திடீரென எதிர்பாராத சமயங்களில் ஐ.எஸ்.. சார்ந்த அதிகாரிகள் வந்து எங்கள் பணிகளை குறித்துக்கொண்டு செல்வார்கள். இப்படி நான்கு தடவைகள் வந்தபின், எங்கள் சத்துணவுக் கூடத்துக்கு முறைப்படி சர்வதேச தரத்துக்கான ஐ.எஸ்.. சான்றிதழை அளித்து பெருமைப்படுத்தியது.

மாலாவின் சீரிய முயற்சியால் தற்போது பள்ளியில் பதினொரு பயிற்சிக் கூடங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து லேப்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் முப்பது கேமராக்கள் பொருத்தப்பட்டு, தன் அறையிலிருந்தே கண்காணிக்கிறார் மாலா. இயற்கையிலேயே செடி வளர்ப்பின் மேல் இவர் கொண்ட ஆர்வத்தால் மாணவிகளையும் செடி வளர்ப்பில் ஈடுபடுத்தி, தற்போது இந்தப் பள்ளியே பசுமையாக, மனதைக் கவரும் வண்ணம் இருப்பதுடன் சமையலுக்குத் தேவையான புதினா, கொத்துமல்லி, முருங்கை, தக்காளி போன்றவற்றை உரமற்ற இயற்கை வழியில் பெறவும் வழிவகுத்துள்ளார்.

பெண் பிள்ளைகளுக்கு நேர்த்தியான உடையலங்காரம் முக்கியம் என்று அழகான உடைகளும் பொட்டும் பூவுடனும் வரச் சொல்கிறார். பள்ளியில் அவர்கள் முகம் கழுவி புத்துணர்வாக இருக்க கண்ணாடிகளும் பவுடரும் சீப்பும் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார். இருக்குமிடத்தில் அனைவரும் விளையாட முடியாததால், அறைக்குள்ளேயே தாயம், பல்லாங்குழி, கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கிறார்.

இன்னொரு ஆச்சர்யம், ஊஞ்சல்கள். இடம் இல்லை எனினும் பள்ளி வராண்டாவில் ஊஞ்சல்களைக் கட்டி, மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார். விரும்பினால் ஆசிரியர்களும் ஊஞ்சல் ஆடி மகிழ, இரண்டு ஊஞ்சல்களை வைத்திருப்பது சிறப்பு. ‘ஆசிரியர்களே என் குடும்பம்’ என்று அகமகிழ்கிறார். அதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்.

ரு பள்ளி வளர்ச்சி பெற தலைமையாசிரியர் மனம் வைத்தால் மட்டும் போதாது; அங்கிருக்கும் ஆசிரியர்களும் ஆதரவு தர வேண்டும். அந்த வகையில் நான் கொடுத்து வைத்துள்ளேன். இங்கு என்னுடன் சேர்ந்து 34 பேர் ஆசிரியர்களாக உள்ளோம். நான் எள் என்றால் எண்ணையாக மாறி அந்தச் செயலுக்குப் பண உதவி முதல், உடல் உழைப்பு வரை தந்து எனக்கு உத்வேகம் அளிக்கிறார்கள், என் குடும்பமான ஆசிரியர்கள். இதுபோன்று அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களும் ஒரே உணர்வுடன் இணைந்தால் எல்லாப் பள்ளிகளையும் தரமிக்கதாக உருவாக்கலாம்.”

ஆசிரியர்களுடன்…

இங்கு படிக்கும் மாணவிகளின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு மாதந்தோறும் மருத்துவர்கள் ஆலோசனையும், மனநல ஆலோசனைகளும் தவறாமல் நடைபெறுகின்றன. உதாரணமாக, பரிசோதனைகள் செய்யப்பட்டு எதிர்ப்பு சக்தி குறைந்த நூறு மாணவிகளுக்கு, ‘ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்’ அமைப்பின் மூலம் மாதம் ஒருமுறை சத்து மாவு வழங்கப்படுகிறது.

மேலும், இப்பள்ளியின் சிறப்பம்சமாக இவர் உருவாக்கியிருக்கும் டிஜிட்டல் நூலகம் வியக்க வைக்கிறது. 700 புத்தகங்கள் இருந்த இடத்தில், தற்போது 2000 புத்தகங்களைச் சேர்த்ததுடன், அவர்கள் இடத்திலிருந்தே படிக்கும், ‘ஈ புக்’ வசதி மற்றும் படித்தவைகளை பகிர்ந்துகொள்ள போர்டுகளை வைத்தும் மாணவிகளின் ஆர்வத்தைத் தூண்டி, வாசிப்புத் திறனை மேம்படுத்தி இருக்கிறார்.

இன்னும் பல தொண்டுகளை தங்களுக்காக கேட்டவுடன் செய்யும், ‘சிவஞானம் அறகட்டளை’ ஐயா சிவஞானம், பெற்றோர் கழக தலைவர் சந்திரசேகர், சேவை மருத்துவர்கள் திரு.கந்தசாமி மற்றும் திரு.அபுல்ஹாசன், மாணவிகளின் நலம் முன்னிட்டு அழைத்தால் உடனே வந்து உதவும் தற்போதுள்ள மாநகராட்சி உதவி ஆணையர் திருமதி சண்முகவடிவு போன்றோருக்கு மனதார நன்றிகளை சொல்கிறார் மாலா டீச்சர்.

தான் பள்ளியை விட்டுச் செல்லும்போது, தன்னால் நான்கு ..எஸ். அதிகாரிகளும், நான்கு டாக்டர்களும் உருவாகி இருக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்’ என்கிறார் இவர்.

மாலாவின் கணவர் ஆண்டனி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகள் ஷாலு கல்லுரி மாணவி. தன்னடக்கத்துடன் தனக்குக் கிடைக்கும் பாராட்டுகளை அனைவருக்கும் உரித்தானதாக மகிழும் மாலாவைப் போன்ற ஆசிரியர்களே நல்ல மாணவர்களின் அஸ்திவாரம். அவரின் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.

1 COMMENT

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு   புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்? “ஏன்... என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி...

இரண்டு ரூபாய் தோசைக் கடை…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. “நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான்....

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

-  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு...

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...