0,00 INR

No products in the cart.

காணக் கண்கோடி வேண்டும்!

கோடி தீபத் திருவிழா!

ராஜி ரகுநாதன்

புனிதமான கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதைப் போன்ற சுப காரியம் வேறொன்று இல்லை. வெளியில் ஏற்றும் தீபம், நம் உள்ளே உள்ள அறியாமை இருளை நீக்கி, ஞான ஜோதியை நிரப்புகிறது. விளக்கு ஏற்றுவதும், ஏற்றிய விளக்கை துதித்து வணங்குவதும், சந்தியா கால சமயங்களில் தீபத்தை தரிசிப்பதும் நமது சம்பிரதாயம்.

பக்தி டிவி’ அதிபர் நரேந்திர சௌத்ரியும் அவர் துணைவியார் ரமா தேவியும் ஒவ்வோர் ஆண்டும் மிகக் கோலாகலமாக ஹைதராபாத் என்.டி.ஆர். திடலில் கோடி தீபோத்ஸவ விழாவை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பெருந்திரளாக வந்தமர்ந்து விளக்கேற்றும் இந்தத் திருவிழா ஹைதராபாத்தின் பெருமை மிகு நிகழ்சிகளில் ஒன்று.

இந்த ஆண்டும் சிவபெருமானுக்கும் நாராயணனுக்கும் உகந்த கார்த்திகை மாதத்தில் சங்கநாதம் முழங்க, பேரிகை வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்களோடு தீபங்கள் ஒளிர, கோடி தீபோத்ஸவம் தொடங்கியது.


தீபங்களின் ஒளி வெள்ளம், சங்கொலி, டமருக த்வனி, வேத மந்திரங்களின் எதிரொலி, ஜகத் குருமார்களின் ஆசிகள், ஆன்மிகவாதிகளின் சொற்பொழிவுகள், சகல தேவதைகளின் கல்யாண மகோத்ஸவங்கள், சப்த ஆரத்திகள், மகா ஆரத்திகள், அற்புதக் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், சங்கீத கச்சேரிகள், பேரிணி சிவதாண்டவங்கள், கோலாட்டம், கொண்டாட்டம்என அனைத்தும் ஒன்று சேர்ந்ததுதான் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பதினோரு நாட்கள் தினமும் மாலையில் நடைபெறும் கோடி தீப உத்ஸவ விழா.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற க்ஷேத்ரத்திலிருந்து உத்ஸவ விக்ரகங்களை எடுத்து வந்து அந்தந்த தலத்தின் வேத பண்டிதர்களால் கல்யாண உத்ஸவங்கள் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. அதன்பின் தினம் ஒரு வாகனத்தில் பக்தர்கள் தரிசிப்பதற்காக வளாகத்திற்குள் ஊர்வலம் எடுத்து வரப்படுகிறது. உண்மையிலேயே காணக் கண்கோடி வேண்டும் இந்த கோடி தீபோத்ஸவ திருவிழாவைக் கண்டு களிக்க. அதேபோல், தினமும் இதை நேரலையில் லட்சக்கணக்கானோர் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ல்லாயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இரு தெலுங்கு மாநிலங்களிலிருந்தும் பக்தியோடு வந்து சேருகிறார்கள். பலவித தெய்வீக வடிவங்களில் பூக்களால் ரங்கோலி இட்டு சுற்றிலும் அகல் விளக்குகளில் எண்ணெயும் திரியும் இட்டு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். அவற்றை பக்தர்கள் ஏற்றி கார்த்திகை மாதத்தில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி புண்ணியத்தைப் பெற்று திருப்தியோடு வணங்கி மகிழ்கிறார்கள். மக்கள் திரளாக வந்து கூடி, அமைதியாக அமர்ந்திருந்து நிகழ்சிகளைக் கண்டு களித்து, குருமார்களை தரிசித்து, உபன்யாசங்களை செவிமடுத்து, கல்யாண உத்ஸவத்தில் பங்கு கொண்டு, தெய்வீக ஊர்வலத்தை தரிசித்து, நாம சங்கீர்த்தனம் உச்சரித்து உய்வடைந்து திரும்புகிறார்கள்.

ந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தொடங்கி, 22ம் தேதி வரை நடந்தேறிய இந்த விழாவின் முதல் நாள் காளேஸ்வர க்ஷேத்ரத்திலிருந்து ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி உத்ஸவ மூர்த்திகள் எடுத்து வரப்பட்டு அந்தக் கோயிலின் அர்ச்சகர்களால் கல்யாண உத்ஸவம் நடந்தேறியது. காளேஸ்வர முக்தேஸ்வர லிங்கங்களுக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. பக்தி டிவி அதிபர் நரேந்திர சௌத்ரி காளேஸ்வர முக்தேஸ்வர லிங்கங்களுக்கு மல்லிகை மலர்களால் கோடி புஷ்பார்ச்சனை செய்தார். ஹம்ச வாகனத்தில் தேவ தேவியர் ஊர்வலம் வந்தனர். அன்று ஸ்ரீ ஸ்ரீதிரிதண்டி சின்ன ஜீயர் சுவாமி சிறப்பு விருந்தினராக விழாவுக்கு வருகை தந்தார். குத்தாலம் சித்தேஸ்வர பீடம் மற்றும் பல மடங்களிலிருந்து சுவாமிஜிகள் வந்திருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

இரண்டாம் நாள் அன்னவரம் தலத்திலிருந்து அனந்தலட்சுமி சமேத வீரவேங்கட சத்திய நாராயண சுவாமியும் சிவபெருமானும் உத்ஸவ மூர்த்திகளாக கோடி தீப மேடையில் வந்தமர்ந்திருந்தனர். பக்தியோடு அந்தக் கோயிலின் வேத பண்டிதர்களால் சத்திய நாராயண விரதம் நடத்தப்பட்டது.

திருமலையிலிருந்து பாலாஜி வராமல் கோடி தீப உத்ஸவம் நிறைவு பெறுமா என்ன? அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஸ்ரீ வேங்கடேச பெருமாள் தம்பதி சமேதராக கோடி தீபத் திருவிழா மேடையை அலங்கரித்து பக்தர்களுக்கு கல்யாண உத்ஸவத்தை தரிசிக்கும் பேற்றை அருளினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஹைதராபாத்தின் தலைவர்களும் பக்தி டிவியின் தீபத் திருவிழாவிற்கு வருகை புரிந்து அருளுரை ஆற்றினர்.

கோடி தீப உத்ஸவத்தின் இறுதி நாளன்று வேமுலவாடாவிலிருந்து தேவ தேவியரின் உத்ஸவ மூர்த்திகள் வருகை தந்தனர். ஸ்ரீ ராஜராஜேஸ்வர சுவாமியின் கல்யாண உத்ஸவம் மிக அருமையாக நடந்தேறியது. இறுதி நாளானதால் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சிவபெருமானை தரிசிப்பதற்கு என்.டி.ஆர். ஸ்டேடியத்திற்கு வந்தார்கள். கோல்ஹாபூர் ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் தரிசனம் கூட இன்றைய தினம் சிறப்பாக விளங்கியது. ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி முக்கிய விருந்தினராக வந்திருந்தார்.

ன்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 11வது நாளாக விசேஷ பூஜைகள் நடந்தன. முதலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சொற்பொழிவு. ஆன்மிக பிரமுகர்களின் பிரவசனங்கள் நடந்தன. அதன் பிறகு சிவலிங்கத்திற்கு கோடி ருத்ராக்ஷ அர்ச்சனை மேடையில் மட்டுமின்றி; பக்தர்களாலும் கோலாகலமாக நடத்தப்பட்டது. அதன் பிறகு வேண்டும் கோரிக்கைகளை எல்லாம் தீர்க்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வர சுவாமியின் கல்யாண உத்ஸவம் நடந்தது. அதன் பிறகு நந்தி வாகனத்தின் மீது சுவாமியையும் அம்பாளையும் பக்தர்களை விழா வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். சுவர்ண லிங்கோத்பவம், சப்த ஆரத்தி தரிசனம் முதலியவற்றோடு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன் தமிழ் தெலுங்கு இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருதும் தினசரி டாட்காம் வழங்கிய தெய்வத் தமிழர் விருதும் பெற்றுள்ளார். இது நம் சனாதனதர்மம் என்ற நூலும் மேடம் கதைகள், பால்டம்ளர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தெலுங்கில் இவருடைய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலை ருஷிபீடம் பதிப்பகம் சிறப்பாக வெளியீட்டது. தாய்மண்ணே வணக்கம் என்ற சிறுகதை மங்கையர்மலர் போட்டியில் பரிசு பெற்றதை பெருமையாக நினைக்கிறார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...