spot_img
0,00 INR

No products in the cart.

மார்கழி மாதம்; கோலாகலக் கோலம்!

 • கோலம் என்பது வெறும் கோடுகள் மட்டுமல்ல; கோலத்தின் நடுவில் வைக்கும் புள்ளி சிவனையும், சுற்றி வரையும் கோடுகள் சக்தியையும் குறிக்கும்.
 • கோலம் என்றாலே அழகு என்று அர்த்தம். வேத காலத்தில் இருந்து தொடங்கி, இன்றுவரை தொடர்கிறது. வளைந்தும் நெளிந்தும் சுளித்தும் போடப்படும் கோலங்கள், வாழ்க்கை என்பது சுக, துக்கப் பின்னல்களால் ஆனது என்பதையும், சுழிகள் போல துன்பம் வந்தாலும் துணிவோடு இருக்க வேண்டும் என்கிற தைரியத்தையம் உணர்த்துகின்றன.
 • விசேஷ நாட்களில் காவி இடுவது, சிவசக்தி ஐக்கியத் உணர்த்துகிறது. பச்சரிசி மாவு சிவ தத்துவத்தையும் காவி சக்தி தத்துவத்தையும் உணர்த்துகிறது.
 • வீட்டு வாசலில் கோலமிடுவது, கெட்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கத்தான். ஒவ்வொரு கோலத்திலும் போடும் கோட்டிற்கு தீய சக்திகளை உள்ளே நுழைய விடாமல் காக்கும் சக்தி உண்டு.
 • அரிசி மாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால், அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
 • கோலத்தின் எட்டு பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைந்து, பல்வேறு நன்மைகளை வழங்குவர்.

 • கோலம் போடும்போது முதுகு வளைந்தே இருக்க வேண்டும். அகம்பாவத்துடன் இல்லாமல் குனிந்து இருந்தால்தான் வளைந்து நெளிந்து சிவத்தை அடைய முடியும் என்பதே கோலம் போடுவதன் தத்துவமாகும்.
 • வடக்கில் குபேரனும், கிழக்கில் இந்திரனும், மேற்கில் வருணனும், தெற்கில் யமனும் வாசம் செய்வதால் தெற்கு பார்த்தோ அல்லது தெற்கில் கோலம் முடிவுறும்படியோ போடக்கூடாது.
 • ஞாயிறு சூரியக் கோலம், செந்தாமரைக் கோலம், திங்கள் அல்லி மலர்க் கோலம், செவ்வாய் வில்வ இலைக் கோலம், புதன் மாவிலைக் கோலம், வியாழன் துளசி மாடக் கோலம், வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்கள் தாமரைக் கோலம் (எட்டு இதழ்), சனி பவளமல்லி கோலமிடுவதால் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 • பூக்கோலம் போடுபவர்கள் முதலில் டிசைன் வரைந்து, பின் லேசாக மைதா, பசை, கம் ஏதாவது தடவி பின் பூக்களைப் பதிக்க, கோலத்தின் அழகு கூடும். ஃபேன் காற்று மற்றும் கால்களில் மிதிபட்டு கலையாது. பூக்கோலம் போட்ட பின் சிறிது நீர் தெளித்து விட்டு விடவும்.
 • அரிசி கோல மாவு தயாரிக்கும்போது, அதனுடன் வடித்த கெட்டியான கஞ்சியை சேர்த்துக்கொண்டால் இழுக்கும் பக்கமெல்லாம் கோலம் அழகாக வரும்.
 • மார்கழி மாத அதிகாலையில் கோலமிட்டு, இறைவனைத் தொழுவதால் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்தில் மகிழ்வும் உண்டாகும்.
  ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

மார்கழி மகோத்ஸவம்

அன்பு வாசகீஸ்,

மார்கழி மாதத்தை முன்னிட்டு, நாமும் விதவிதமான வண்ணக் கோலங்களைப் போட்டு மகிழலாமே!
உங்களுடைய அழகான கோலங்களை மங்கையர் மலருக்கு அனுப்புங்க.

மென்பேனா – https://kalkionline.com/menpena/

இமெயில் – mm@kalkiweekly.com

முகநூல் – https://www.facebook.com/Mangayar-Malar-1941875779426990

அல்லது

தபால் மூலமாக தங்கள் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்க.

தேர்வாகும் கோலங்கள் www.kalkionline.com இணையதள முகப்புப் பக்கத்தில், ‘தினம் தினம் வண்ணக்கோலம்’ என்ற பகுதியில் உங்களுடைய புகைப்படத்துடன் இடம்பெறும்.
பிரசுரமாகும் கோலங்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. வெள்ளைத்தாளில் நிறுத்தி நிதானமாகக் கோலமிட்டு, வண்ணமிட்டு அனுப்புங்க.
தபாலில் அனுப்ப :
மங்கையர் மலர்
11/16, மாஞ்சோலை 3வது தெரு,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,888FollowersFollow
2,640SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வெற்றி வேண்டுமா? போட்டுப்பாருங்கள் எதிர்நீச்சல்!

1
- சேலம் சுபா புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களும் இந்தக் கொரோனா பயத்தையும் மீறி, முகநூலிலும் இன்னபிற இணைய சேவைகளின் வழியாகவும் நம்மிடம் சேர்ந்து வாழ்வதற்கான தெம்பை அளித்து விட்டன. நமக்கு சரி......

முத்துச் செய்தி மூன்று!

மகளிர் சிறப்பு  தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் தமிழ் எழுத்தாளருக்கு சாஹித்ய அகாடமி விருது! தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான இவரது இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பெண் கல்வி...

நல்லதே நினைப்போம்!

1
புத்தாண்டு சிறப்பிதழுக்காக... நல்லதே நினைப்போம்! நேர்மறை சிந்தனைகள் வளர்ப்போம்! பகுதிக்கு வந்த ஓவியங்களில் இருந்து... கூடைக்குள் உலகம் இடுப்பு சுருக்கு பைக்குள்ளும் இல்லத்தில் அஞ்சறை பெட்டிக்குள்ளும்- காய்கறி கூடைக்குள் உலகத்தையே வைத்திருந்தாள் அன்றே என் அப்பத்தா பெண் பெரும் சக்தி மாபெரும் சக்தி. -சுசீலா மாணிக்கம்,...

தாகத்தைத் தணிக்க உதவும் உணவுகள்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஏ.எஸ்.கோவிந்தராஜன் ஆப்பிள் : தினமும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்றுதான் ஆப்பிள். ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம். ப்ளம்ஸ் : கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப்...

வேர்களைத் தேடி…

1
- ரேவதி பாலு சரண்யாவும், சரண்யாவும் தங்களுடைய வேர்களைத் தேட ஆரம்பித்த முயற்சிதான் ‘பாரம்பரியம்.’ இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒன்றாகப் படித்த தோழிகள். படிப்பை முடித்து இருவரும் மிக நல்ல வேலையில் சேர்ந்தார்கள். இருவர்...