0,00 INR

No products in the cart.

பாண்டியா? நொண்டி ஆட்டமா? ஃபுட்பாலா? கிரிக்கெட்டா?

FB : மங்கையர் மலரில் வாசகியரின் பதிவுகள்…


வி
ளையாட்டு என்பதால் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவேண்டி உள்ளது
. தற்போதைய சூழலில் நம் வாரிசுகள் செல்போனை மறந்து, சற்று நேரமாவது வெளிக்காற்றை சுவாசிக்கும் மனப்போக்குடன் வாழ்ந்தாலே போதும் என்ற நிலை. மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் பாங்கு, விளையாடும்போது மட்டுமே ஏற்படும்.
ஸ்ரீவித்யா பிரசாத்

பாண்டி ஆட்டம்தான் எனக்குப் பிடிக்கும். பாவாடை, சட்டை அணிந்து கொண்டு தோழிகளுடன் சேர்ந்து ஆடும்போது சந்தோஷத்திற்குக் குறை இல்லை.
உஷாகுமாரி உஷா

பாண்டிதான். தாண்டி தாண்டி கண்ணை மூடிக்கொண்டு அழகாக விளையாடும்போது பலவித போட்டியும் உண்டு என்பதால் பாண்டி மிகவும் பிடித்த ஆட்டம். நொண்டி அதைவிட பிடிக்கும். நொண்டி நொண்டிக்கொண்டே சென்று நண்பர்களை தொடும்போது அவுட்டாக்கி, ஆ…. என்று கத்தும்போது கிடைக்கும் ஆனந்தம், இப்போது புட்பால், கிரிக்கெட்டில் எல்லாம் வருவதில்லை.
உஷா முத்துராமன், திருநகர்

னக்குப் பிடித்தது பாண்டி ஆட்டம். நொண்டி அடித்து காய்களைக் குறி வைத்து மிதித்துத் தள்ளுவது, கண்களை மூடிக்கொண்டு கோடுகளை மிதிக்காமல், ரைட்டா கேட்டுத் தாண்டுவது எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்துதல். நொண்டி அடித்தல் காலுக்கு நல்ல பயிற்சி. நான்கைந்து பேர் சேர்ந்து விளையாடுவதால் குதூகலமாக இருக்கும். இன்றைய தலைமுறை இவற்றை எல்லாம் அறிய வாய்ப்பில்லை.
உஷா பாஸ்கர்

ன்னைக் கவர்ந்தது பாண்டியும், நொண்டியும்தான். ஒரு காலால் நொண்டி அடிக்கும் போது, தரையில் கால் அழுந்துவதால் அகுபிரஷரும், உடம்புக்கு பேலன்ஸும் கிடைக்கும். பாண்டி ஆட்டத்தில், கண்ணை மூடிக்கொண்டு கரெக்ட்டா கட்டத்துக்குள், குதித்துக் குதித்துச் செல்ல வேண்டும். இவை இரண்டுமே உடற்பயிற்சி மற்றும் மூளைக்கும் சிறந்த பயிற்சி ஆகும்.
ஜெயா சம்பத்

னக்குப் பிடித்தது நொண்டி விளையாட்டுதான். ஒரு காலை மடித்து, மற்றொரு காலில் சமன் ( பாலன்ஸ்) செய்து விளையாடுவதால் மனதை ஒருநிலைப்படுத்துதல் (கான்ஸன்ட்ரேஷன்) அதிகரிக்கும். செலவில்லாத விளையாட்டு. நல்ல உடற்பயிற்சியும் கூட.
ராதிகா ரவீந்திரன்

Old is gold!
– Rajalakshmi srinivasan

ண்டுமே ஏற்புடையதுதான். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை தரக்கூடியது. வெட்டவெளியில் வெளிக்காற்றை சுவாசித்தபடியே மனமும் உடலும் சேர்ந்து மகிழ்ச்சி பெறக்கூடிய ஆட்டம்தான். வியர்வை சிந்த விளையாடும் எந்த விளையாட்டும் நல்லதுதான்.
கிருஷ்ணவேணி

நொண்டியடித்துப் பிடிப்பதுதான். ஒற்றைக்காலில் நின்று சமன்படுத்துவது வாழ்க்கையை சமன்படுத்துவதற்கும் உதவும்.
அன்பு பாலா

ரண்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. பாண்டி, நொண்டி என விளையாடியபோது உண்டான மகிழ்ச்சியை, தற்போது எதுவுமே தராது. உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தைத் தந்த அவற்றை தற்போது விளையாட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைப்பவை. அதேபோல் பேரன், பேத்திகள் விளையாடும் விளையாட்டுக்கள் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, குழுவாக சேர்ந்து விளையாடுவது, அதில் தனித்திறமையை வளர்த்துக்கொள்வது என சிறப்பாகச் செயல்படுகின்றனர். விளையாட்டு எதுவாகினும் மகிழ்ச்சி ஒன்றே பிரதானம்.
மகாலக்ஷ்மி சுப்ரமணியன்

ம் காலத்தில் வீட்டு வாசலில் பெற்றோர் கண்ணெதிரில் தெருவில் விளையாட முடிந்ததால் நம் காலத்திய விளையாட்டுகளே சிறந்தவை. அதிலும் ஏழு கற்களை அடுக்கி வைத்து, அதன்மேல் பந்தை எறிந்து சிதறிய கற்களை அடுக்கி வைக்க விடாமல் எதிர் அணியினர் மீது பந்தை எறிந்து அவுட் ஆக்க வேண்டும். எவ்வளவு ஓட்டம்! எத்தனை விறுவிறுப்பு. ஆண், பெண் பேதமின்றி விளையாடும் இந்த விளையாட்டே எனக்கு மிகவும் பிடித்தது.
ஹேமலதா சீனிவாசன்

ன்றைய ரசனை வேறு; இன்றைய ரசனை வேறு.பேரன், பேத்தி கிரிக்கெட் ஆடுவது மட்டுமல்ல; டி.20கிரிக்கட் மேட்சை டி.வில் 85வது வயதிலும் பார்த்து ரசித்து வருகின்றேன்.
சம்பத் அண்ணாசாமி

னநலத்தையும், உடல் நலத்தையும் இரண்டு விளையாட்டுமே தரும் என்பதால் எனக்கு இரண்டுமே பிடிக்கும்.
கலைமதி சிவகுரு

நாங்கள் ஆடிய பாண்டி விளையாட்டும் நொண்டி விளையாட்டும்தான் மனதில் நிற்பவை. வீட்டிற்கு வெளியே நண்பர்களோடு விளையாடும் இந்த விளையாட்டுகள் மனதிற்கு உற்சாகம் தருபவை. பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு நொண்டியடிப்போம். நான் கோலிகுண்டு கூட விளையாடுவேன். ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்தது இந்த விளையாட்டு, இரண்டு பக்கமும் தோழிகள் கையை கோர்த்து விளையாடுவோம். கிரிக்கெட்டை டீவியில்தான் பார்க்கிறார்கள். நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் உடலுக்கும் மனதிற்கும் சக்தியைத் தரும்.
பரிமளா ராமானுஜம்

பாண்டி ஆட்டமும், நொண்டி விளையாட்டும் இயற்கையான விளையாட்டுக்கள். செலவில்லாதது. கால்களுக்கு மட்டுமல்லாது, உடல் முழுவதற்கும் நல்ல பயிற்சி. உற்சாகமான, ஆரோக்கியமான விளையாட்டுக்கள். வீட்டிற்குள்ளும், வெளியிலும் விளையாட இயலும். கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடியது மறக்க முடியாதது. பெரிய அளவிலான விளையாட்டு, பரிசு இல்லையெனினும் மகிழ்வு இருந்தது.
மீனலதா

ன்று விளையாடிய பாண்டி ஆட்டம், நொண்டி ஆட்டம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. கட்டம் போட்டு, அதில் கல்லை போட்டு ஒவ்வொரு கட்டமாக, கோட்டில் கால் படாமல் நொண்டிக்கொண்டே வந்து கடைசியில் கல்லை வெளியே தள்ளி மிதித்து விட்டு, கடைசியாகக் கண்கள் மேல் கல்லை வைத்துக்கொண்டே மேலே அண்ணாந்து பார்த்துக்கொண்டு, ரைட்டா, ரைட்டு என்று சொல்லிக்கொண்டு, கல்லை வெளியே போட்டு மிதிக்க வேண்டும். கோட்டை மிதித்தால் அவுட். அதே போல் நொண்டி விளையாட்டில் ஒற்றைக் காலை நொண்டிக்கொண்டே பிடிக்க வேண்டும். அப்பப்பாஇந்த விளையாட்டுகளில் கிடைக்கும் சந்தோஷம் வேறு விளையாட்டில் கிடைக்குமா?!
– Jegadhambal.N

பாண்டி, புட்பால், கிரிக்கெட் என எதுவா இருந்தாலும், விளையாட்டு என்றாலே உடம்புக்கும் மனதுக்கும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடியது. வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்காமல், வெளியே சென்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி விட்டு வருவதே தனி சுகம். விளையாட்டில் போட்டியும் பொறாமையும் இல்லாதிருப்பது நலம்.
ஜெயகாந்தி மகாதேவன்

ன்னைக் கவர்ந்தது, செதுக்கு பாண்டி’ விளையாட்டுதான். இதை விளையாட வீட்டு வாசலே போதும். இதற்கு, தட்டையான ஒரு சில்லை தேர்ந்தெடுப்பதே அலாதி இன்பம்தான். கொக்கை போல்’ ஒற்றைக் காலில் நின்று, கல்லை அடுத்த கட்டத்துக்குள் செதுக்கும்போது த்ரில்லிங்காக இருக்கும். கட்டம் முழுவதும் இப்படி விளையாடும்போது, காலுக்கும் பாதத்திற்கும் நல்ல பயிற்சி. மனதும் ஒருநிலைப்படும். மேலும், மழை வந்தாலும் தடைபடாமல் விளையாட்டைத் தொடரலாம் வீட்டிற்குள்.
ஜானகி பரந்தாமன்

ண், பெண் என்ற பாரபட்சம் இன்றி, அன்று பாண்டி, நொண்டி, கண்ணாம்மூச்சி என பல விளையாட்டுக்களை பாதுகாப்பாகவும், செலவில்லாமலும், போட்டி, பொறாமையின்றி விளையாடினோம். இன்று ஒரு விளையாட்டு விளையாட வேண்டுமென்றால், அதற்கான வகுப்பு, பந்து, மட்டை, உபகரணங்கள் வாங்க செலவு, ஆசிரியர் நல்லவரா என விசாரிப்பு, தினமும் கொண்டுபோய் விட்டு, அழைத்து வரும் சிரமம், விளையாட அனுப்பித்தான் ஆகணுமா ? என நினைக்கத் தோன்றுகிறது.
ப்ரீத்தா ரங்கசாமி

ல்லோரும் ஒரே நேரத்தில் கலந்துகொள்ளும் நொண்டி விளையாட்டுக்கே என் ஓட்டு. நொண்டியடிப்பவர், ஆடுபவரில் ஒருவரைத் தொட்டவுடன், உடனே நொண்டியடித்து தடாலடியாய் அடுத்தவரை தொட்டு விடும் அபாயம் இருப்பதால், எப்பொழுதும் விழிப்போடு விளையாடும் த்ரில் நொண்டியில்தான். செம
– Gomathi Sivayam

பாண்டி, நொண்டி இரண்டுமே மிகவும் சுவாரஸ்யமான, புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய விளையாட்டுகள். அதற்காகவே அந்தக் காலத்தில் பள்ளிக்குச் சற்று முன்னதாக போய் விளையாடுவோம். அத்துடன் நாலு மூலை கட்டம் என்று ஒரு விளையாட்டு உண்டு. அதுவும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலைக்கு நடுவில் உள்ளவரிடம் பிடிபடாமல் ஓடுவது. இக்கேள்வி இனிய நினைவலைகளை எழுப்புகிறது.
தி.வள்ளி

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...