ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on

ஓவியம்: பிரபுராம்

"இன்ஸ்பெக்டர் சார், என் புருஷனை இரண்டு நாட்களாகக் காணோம்…"
"வீட்டில் ஏதாவது பிரச்சனையாம்மா?"
"இத்தனை வருஷமாகியும் சரியா சமைக்கத் தெரியலியேன்னு லேசா சத்தம் போட்டேன்."
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………………..


 "குடையின் விலை இருநூறுன்னு அப்பப்ப மனதுக்குள் சொல்லிக்கங்க…"
"எதுக்குடி?"
"அப்பதான் எங்காவது குடையை மறந்து வச்சட்டு வரமாட்டீங்க."
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………………..


"நடைபயணம் சப்புன்னு போச்சேன்னு தலைவர் ஃபீல் பண்றாரே!"
"பயணத்தின்போது ஒரு கல்லெறி சம்பவம்கூட நடக்கலியாம்."
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………………..


 "போர்முரசு ஒலித்தவுடன் அரண்மனை ஜோஸியரை மன்னர் கடிந்து கொள்கிறாரே!"
"நல்லகாலம் பிறக்கப் போகுதுன்னு நேற்றுதான் சொன்னாராம்."
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………………..


 "தலைவர் எதற்காக தினமும் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து ரவுண்டு வருகிறார்?"
"டாக்டர் பட்டம் கிடைத்த பிறகு அவரையும் அறியாமல் கால்கள் அங்கே இழுத்துச் சென்று விடுகிறதாம்."
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………………..


 "ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் கதை விடுவாளே கமலா, இப்பவும் அப்படியே இருக்காளா?"
" கதைகள் எழுத ஆரம்பிச்சுட்டா!"
– எஸ். ராஜம், திருச்சி
…………………………………………………………………………..


 "புது படத்துக்கு என்ன பெயர் டைரக்டர் சார்?"
"ஒமிக்ரான் 2022"
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி
…………………………………………………………………………..


 "என்னடி இது, குக்கர்ல வெயிட் போட கணவரை கூப்பிடறே?"
"டாக்டர்தான், என்னை வெயிட் தூக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கார்!"
ஆர். சுந்தரராஜன், சிதம்பரம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com