0,00 INR

No products in the cart.

மகத்துவம் மிகுந்த மசியல்கள்!

– வசந்தா மாரிமுத்து, சென்னை.

துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பில் இயற்கையான புரதம் உள்ளது. உடலுக்கு வலிமை தரக்கூடியது. பருப்பு வயிற்றைப் புண்படுத்தாத உணவு. எல்லாவற்றையும் விட பருப்பு கலந்து செய்யக் கூடிய மசியல் உடலில் கெட்ட கொழுப்பைச் சேர்க்காது, அதனை சாப்பிடும்போது ஆரோக்கியம் மேம்படும்.

பாசிப்பருப்பு மசியல்.

தேவை: பாசிப்பருப்பு – 1 கப், பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 1 கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு ஏற்ப.
செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊறியதும் நன்கு குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி போதுமான உப்பு போட்டு, வெந்த பருப்பை கலக்கி கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். இதனை சாதம், சப்பாத்திக்கு சாப்பிடலாம்.

பிடி கருணை மசியல்.

தேவை: பிடி கருணைக் கிழங்கு – 5, இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 1, மஞ்சள் துள் – 1 சிட்டிகை, பொடித்த வெல்லம் – 1 ஸ்பூன் , எலுமிச்சம் பழம் – அரை மூடி, எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப, கொத்துமல்லி தழை – சிறிது.

செய்முறை: பிடி கருணையை வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மசித்த பிடி கருணையுடன் மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும். கடைசியில் எலுமிச்சை பழம் பிழிந்து நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.

சுண்டைக்காய் பருப்பு மசியல்.

தேவை: சுண்டைக்காய் – 1 கப், தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 2, மிளகாய் வற்றல் – 2, கறிவேப்பிலை – சிறிது, பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: பருப்பை தனியாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் வதக்கி பொன்னிறமானதும் தக்காளி மிளகாய் வற்றல் சேர்த்து கிளறவும். சுண்டைக்காயை பாதியாக நறுக்கி விதையை எடுத்துவிட்டு தாளித்த கலவையோடு சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும். காய் நன்கு வெந்ததும் வெந்த பருப்பை சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவவும்.

கீரை மசியல்.

தேவை: பச்சரிசி – 1 கப், துவரம் பருப்பு – 1 கப், முளைக்கீரை – 1கைப்பிடி, நெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையானது.

செய்முறை: அரிசி, பருப்பு மற்றும் நறுக்கிய கீரையை சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். வெந்ததும் அதில் நெய் விட்டு, உப்பு சேர்த்து மசித்தால் கீரை மசியல் தயார்.

 

1 COMMENT

  1. மசியல்கள் அனைத்தும் மிகவும் இலகுவான முறையில் அமைந்துள்ளது. செய்து பார்க்க
    வேண்டும் என நினைக்கிறேன்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...