0,00 INR

No products in the cart.

மகா பெரியவர் – எம்.ஜி.ஆர் சந்திப்பு

படித்ததில் பிடித்தது!
-சுந்தரி காந்தி, சென்னை

காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அவர் வந்ததால் காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலைந்தனர்.

அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி  சுவாமிகள், அந்த சமயம் மடத்தில் இல்லை. முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்க வேண்டும் அல்லவா, மடத்தில் உள்ளவர்கள் பதட்டமடைந்தனர் .

அவர்களது மருட்சியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்டார், “ஏன் இந்தப் பரபரப்பு?”

“மகா பெரியவர் மூன்று கிமீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்,” என்று அவரிடம் தயங்கியபடியே விபரம் தெரிவித்தனர் மடத்தில் உள்ளவர்கள்.

“இவ்வளவுதானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்,” என்று பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளில் விடையளித்து அவரைக் காணச் செல்கிறார் மக்கள் திலகம்.

முதல்வரை வரவேற்ற பெரியவர், “உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை,” என்றார்.

“அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள்தானே முதல்வர்!” என்றபடி, அவருக்கு எதிரே மண் தரையில் உட்கார்ந்தார் எம். ஜி. ஆர் .

இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்!

ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!

“நம்ம மனுஷா, முருகனோட அறுபடை வீடுகள் – பழனி, திருச்செந்தூர்,  திருத்தணி, என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம், கால விரயம், பணச் செலவுன்னு ஆறது. ஆறு படை வீடுகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா ஒரு இடம் கொடுத்தா ரொம்ப நன்னா இருக்கும். ”

“இவ்வளவுதானே, இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?” என்று விடையளித்தார் எம்.ஜி.ஆர்.

“உன்னை நேரில் பார்க்கணும்னு ஆசை. நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா. அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வர செஞ்சேன்! அங்கப் பாரு அதுக்குள்ள உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு, ” என்று பதில் தந்தார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.

*இப்படியாக உருவானதுதான் சென்னை, பெஸன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில்!

2 COMMENTS

  1. பாெ ன்மனச்செ ம்மல்,மக்கள் திலகத்தின்
    பரந்த மனசு, காெடை வள்ளல் குணத்தை
    அறிந்து மகிழ்ந் தாே ம்.
    து.சே ரன்
    ஆலங்குளம்

  2. இந்த மடத்துக்கு நீங்கள்தானே முதல்வர் -என்றபடி எம்ஜி்ஆர் அவர்கள் மண்தரையில் அமர்ந்தது அவர் மகான்களுக்கு தரும் மரியாதையைக் காட்டியது.தன்னலம் கருதாது பிறர் நலம் கருதும் மகாபெரியவா ஒரு நடமாடும் தெய்வம்.அந்த தெய்வத்தைப் பற்றி விவரிக்க வார்த்தைகளில்லை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...