0,00 INR

No products in the cart.

நடாலின் அபார வெற்றி!

செம… செம…

டென்னிஸ் போட்டியில், வருடத்தில் நடக்கும் 4 க்ராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓப்பன் – ஜனவரி, ஃப்ரெஞ்ச் ஓப்பன் – மே – ஜூன், விம்பிள்டன் – ஜூன் – ஜூலை, யு.எஸ்.ஓப்பன் – ஆகஸ்ட் – செப்டெம்பர் ஆகிய மாதங்களின் விமரிசையாக நடைபெறும். அதில் அநேக சுற்றுகளை ஜெயித்து இறுதிப் போட்டிக்கு வருவதென்பது பெரிய செயலாகும்.

இவ்வருடம் பிள்ளையார் சுழி போட்ட முதல் ஆஸ்திரேலியன் ஓப்பன் திரில்லிங்காக இருந்தது. அதுவும் ஒற்றையர் ஆடவர் பிரிவின் இறுதி ஆட்டம் சூப்பரோ சூப்பர். மெட்வெடேவ்-நடால் இருவரும் விடாமுயற்சியுடன் விளையாடிய இறுதியாட்டமும், நடாலின் உலக சாதனை பற்றியும்,

முகநூல் வாசகியர்களின் பதிவுகள்…

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி வார்த்தைகளை உண்மையாக்கிய மெட்வெடேவ் – நடால் இவர்களின் விடாமுயற்சியைப் பார்க்கும்போது உற்சாகமாக இருந்தது. அப்பப்பா உண்மையிலேயே ரொம்ப திரில்லிங்கான போட்டிதான். இவர்கள் வெற்றி பெற்றவுடன் நான் என்னையே அறியாமல் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து கையை தட்டிக்கொண்டே குதித்து விட்டேன். என்னை மறக்க வைத்த மிகவும் அருமையான வெற்றி.
– உஷாமுத்துராமன், திருநகர்

டால், ஒரு முறை பேட்டியில் “நான் கலந்து கொள்ளும் போட்டி சிறு அளவில் இருந்தாலும், பரிசு என்றளவில் எண்ணம் கொள்ளாமல், பயிற்சி என்றே நினைவில் கொண்டு, ஒவ்வொரு வீச்சும் ஒருமுகப்படுத்தி விளையாடுவேன்,” என்று கூறினார்.
இது நமக்கு அவருடைய தளரா முயற்சியின் பலன் என்று தான் காட்டுகிறது. சாதனைகள் பெரும்பாலும் எளிதான தொடர் முயற்சிகளின் விளைவுதானே!
-ஸ்ரீவித்யா பிரசாத்

மூன்றாவது செட்டை மெட்வெடேவ் கவனமாக ஆடி இருக்கலாம். வெற்றியின் எல்லை வரை வந்து, தோல்வி! பாவமாக இருந்தது.
– பிரேமா ரமணி

35 வயதான ஸ்பெயினைச் சேர்ந்த நடால் தனது அபாரமான ஆட்டத்தாலும், விடா முயற்சியாலும் 21 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இந்த வயதில் 5.30 மணி நேரம் இறுதி ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடி, வயதில் இளையவரான ரஷ்யாவின் மெட்வெடேவை வெற்றி பெற்றது அவரது தளராத மனதையும், கடைசி வரை போராட வேண்டும் என்ற நினைப்பையும் காட்டுகிறது. வயது எதற்கும் தடையல்ல என்று நிரூபித்துவிட்டார்.

ஒருமாதம் முன்பு வரைகூட ஆடமுடியுமா? (காலில் ஏற்பட்ட காயத்தால்) என்ற நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார். முதல் இரண்டு ஸெட் தோற்றாலும், மனம் தளராமல் வெற்றியை மட்டும் தன் இலக்காக கொண்டு வரலாறு படைத்தது ‘ விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று காட்டியிருக்கிறார். அடுத்த வருடமும் வருவேன் என்று சொன்னது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
– ராதிகா ரவீந்திரன்

’விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி’ சிறப்பாக இருந்தது. ஆக்ரோஷமாகவும் இருந்தது. வாழ்த்துகள்.
-சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

முதலில் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அரங்கில் கூடியிருந்த கூட்டமும் அவர்கள் மேட்ச்சை ஆர்வத்துடன் அணு அணுவா ரசித்தவிதமும்தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் சென்றது. நடாலின் வெற்றியும் சாதனையும் அவரின் உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு என்பேன். மெட்வெடேவின் ஆட்டமும் சளைத்ததில்லை. சாதிக்க அவருக்கு அவகாசம் இருக்கு. மொத்தத்தில் 2O22 ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்று என்றென்றும் நினைவில் நிற்கக் கூடிய ஒன்று.
-ஜெயகாந்தி மகாதேவன்

ந்தரை மணி நேரம் இடத்தை விட்டு நகராமல், வேலையில் மனம் நிலைக்காமல் கட்டிப்போட்டது நடால், மெட்வெடேவ் அவர்களின் ஆட்டம். முதல் இரண்டு செட் மெட்வெடேவ் ஜெயித்த பின், தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியாலும் வெற்றிக் கோப்பையை பிடித்ததில்தான் எத்தனை மகிழ்ச்சி நடாலின் முகத்தில்.

அவரின் சந்தோஷம் என்னையும் பற்றிக் கொண்டது. நடால் பாயிண்ட் எடுக்கும்போது கிடைத்த ரசிகர்களின் சப்போர்ட் மெட்வெடேவ் பாயிண்ட் எடுக்கும்போது கிடைக்காதது ஏனோ… இரண்டு ஆட்டக்காரர்களையும் சரியாக உற்சாகப்படுத்தி இருக்கலாமோ என எண்ணினேன் பலமுறை. இறுதியாக நடால் விளையாடிய ஆட்டம், அந்த டெக்னிக் உண்மையில் அசர வைத்தது. பத்து வயது வித்தியாசம் இருவருக்கும், இருந்தும் தன் திறமையால் வென்ற நடாலுக்கு ராயல் சல்யூட்.
– பானு பெரியதம்பி, சேலம்

21 ஆவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்ததற்கு நடாலின் போராட்ட குணம்தான் காரணம். காயம் ஏற்பட்டது, நோய் தொற்று வந்து மீண்டது என பல இடர்கள் வந்தாலும் அதனையும் வென்று, கோப்பையை கையில் ஏந்தியது அவரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். வாழ்த்துகள்!
– வாணி கணபதி

டாலின் ‘தடால்’ வெற்றியை கண் இமைக்க மறந்து பார்த்தேன். விடா முயற்சி சாதனை உலக வரலாற்றின் மைல் கல்.
– ராதா நரசிம்மன்

சாதனைகள் பெரும்பாலும் தொடர் முயற்சியால் மட்டுமே வருவதாகும். அட்டகாசமாக இருந்தது ஆட்டம். மெட்வெடேவின் ஆட்டமும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. இன்னும் சிறிது கவனமாக ஆடி இருக்கலாம். ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து விளையாடி வெற்றி வாகை சூடிய நடாலுக்கு பாராட்டுகள் பல.
-கிருஷ்ணவேணி

மெட்வெடேவ் ஒரு நல்ல விளையாட்டு வீரர். எதில் விளையாடினாலும் வெற்றி பெறுவார். நடால் தன் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் போட்டியில் வெற்றி பெற்றார். மிகவும் அபாரமான விளையாட்டு. பார்க்க மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
– கலைமதி சிவகுரு

35 வயதாகும் ஸ்பெயின் நட்சத்திரமான ரஃபேல் நடாலுடன், 25 வயதாகும் ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ் இறுதிப் போட்டியில் மோதினார். சென்ற வருடம் யு.எஸ்.ஓப்பனில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து ஜெயித்த மெட்வடேவ், ஆஸி ஓப்பனில் தனது 2ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற ஆக்ரோஷமாக விளையாடி முதல் இரு செட்களை வசப்படுத்தியபோது பார்வையாளர்களுக்கு ஒரே டென்ஷன். நடால் ஜெயிக்க பிரார்த்தனை செய்தவர்கள் பலர்.

நடால் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 3 செட்களை ஜெயித்து கோப்பையை வென்றதற்கு அவரது தன்னம்பிக்கையும், தீவிர முயற்சியும், இறை அருளும் தான் காரணம். சுமார் 51/2 மணி நேரம் விளையாட்டு நடந்தது, செம த்ரில்லிங்கா (2-6, 6-7, 6-4, 6-4, 7-5,) என்ற செட் கணக்கில் நடால் அபார வெற்றி அடைந்தார்.

ரோஜர் பெடரர் (சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) இருவருடனும் சமநிலை வகிக்கும் நடால், தலா 20 சாம்பியன் பட்டங்களுடன், ஆஸி ஓப்பனை வென்றதன் மூலம் 21ஆவது சாம்பியன் பட்டம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

உடல் நலமின்மை காரணமாக ரோஜர் பெடரர் கலந்து கொள்ள இயலவில்லை. விசா பிரச்னை மற்றும் வேக்ஸின் போடாத காரணத்தால், ஆஸி வந்த போதும் ஜோகோவிச் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஆர். மீனலதா, மும்பை

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...