0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ஹலோ அம்மா,

நீ எங்க இருக்க? கண் விழிச்சுப் பார்த்தா யார் யாரோ என்ன தூக்கறாங்களே தவிர, உன்ன காணலியே அம்மா… நான் அழுதா, என்னவோ கரைச்சு வாயில ஊட்டறாங்க. இல்ல…இல்ல… ஊத்தறாங்க… ஆனா அது எனக்குப் பிடிக்கவே இல்லையேம்மா?

யாரும்மா உனக்கு செளந்தர்யான்னு பேரு வெச்சது? நீ நிஜம்மாவே அழகுதாம்மா! உன்னோட முகத்தைப் பார்க்காம எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது… அழுகையா வருதும்மா!

அம்மா, நம்ப நாட்டுல மெடிக்கல் சீட் கிடைக்கிறது கஷ்டமாமே! அப்படியே கிடைச்சாலும் டாக்டருக்குப் படிக்கிறது அதைவிட கஷ்டமாமே! நீ வெளிநாடெல்லாம் போய் படிச்சு, டாக்டரா வேலை செஞ்சியாம்! நம்ப அப்பாவும் டாக்டராமே! ஓ… நான் டாக்டர்ஸ் சன்! சூப்பர்… இல்லம்மா?

பல பேரு ‘குழந்தையில்லை’ன்னு வேதனைப்பட்டுக்கிட்டு லட்சக்கணக்குல செலவு செஞ்சு தவம் கிடக்கிறப்போ, நான் லட்டாட்டம் சுட்டிப் பையன் பிறந்திருக்கேனே… நீ ஹேப்பி இல்லையாம்மா?

அப்புறம்.. முக்கியமா ஒண்ணு… இந்த முதல் மந்திரிப் பதவிங்கிறது ரொம்பவே பவர்ஃபுல் போஸ்ட்டாமே? உன்னோட தாத்தா கர்நாடக மாநிலத்துக்கே முதல் மந்திரியா இருந்தவராமே! அப்ப காசு, பணத்துக்கோ, ஆள், ஆம்புக்கோ குறைச்சல் இருக்காது இல்லம்மா?

அப்போ, எனக்கு ஒரு டவுட்டும்மா…

ழகு, பணம், வேலை, அதிகாரம், குடும்பம், குழந்தை, ஹை-ஸ்டைல் வாழ்க்கை எல்லாமே அமைஞ்சும் நீ ஏம்மா தற்கொலை செஞ்சுக்கிட்ட? அதுவும் ஒன்பது மாசமே ஆன என்னைத் தனியா விட்டுட்டு? ஏம்மா… ஏன்?

அப்போ அதையும் மீறி எதை நீ எதிர்பார்த்து ஏமாந்து போன? எனக்குப் புரியவே இல்லையேம்மா!

பிரசவத்துக்குப் பிறகு சில மம்மீஸ்க்கு வரக் கூடிய டிப்ரஷன் ஏற்பட்டு, அதனால நீ இந்த முடிவை எடுத்தததாகப் பேசிக்கிறாங்கம்மா. நீயே ஒரு டாக்டர்தானேம்மா? மனசைத் திடமாக்கும் மருந்துகள் பற்றி நீ ஆலோசிச்சு இருக்கலாமே! ஏம்மா செய்யலை? குடும்ப வாழ்க்கை பிடிக்கலைன்னா… பரவாயில்லை… நீ டாக்டர் தொழிலில் பேர் வாங்கி, நோயாளிகளுக்கு உதவி இருக்கலாமே அம்மா!

நான் பச்சைக் குழந்தை. எனக்கு உன் மனசு புரியலை! நான் வளர்ந்து ஆளாகும்போது, தாயைப் போல இல்லாமல் மனஉறுதியுடன், வாழ்க்கை வீசும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று வாழணும்னு மட்டும் ஆசீர்வதி! அது போதும்… ஐ மிஸ் யூ அம்மா! லவ்ஸ்!
-உன் செல்ல மகன்

பா.ஜ.க. மூத்த தலைவர், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகள் வயிற்றுப் பேத்தி டாக்டர் செளந்தர்யா, திருமணமான நாலாவது வருடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டித்த, பணம் படைத்த, செல்வாக்கு மிக்க, பெண்கள், அது ஏதும் அற்ற அப்பாவிப் பெண்களுக்கு ஒளிவிளக்காக, வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை! இதுபோல, உணர்ச்சிவசப்பட்டு, குழந்தையை பரிதவிக்கவிட்டு, அரை முழக் கயிற்றில் தொங்குவது விவரமில்லாத ஏழைப் பெண்களுக்குக் காட்டும் தவறான முன் உதாரணம் ஆகிவிடாதா?

ஸாரி, செளந்தர்யா…
ஐ மீன் டாக்டர் செளந்தர்யா!

5 COMMENTS

 1. டாக்டர் சௌந்தர்யா போன்றோர் எடுக்கும் இந்த மாதிரி முடிவு நம்பவே முடியாததாயிருக்கு. எந்தவித சவாலையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும், ஆண்டவன் அருளோடு.

 2. எங்கோ ஒரு இடத்தில் முரண்பாடு இருந்து மனதை ரணமாக்கியிருக்கிறது பெண்களுக்கு எதையும் எதிர் கொள்ளும் துணிவு வர வேண்டும் அப்படி ஆயிரம் துன்பம் வரட்டும் அதை இறைவனிடம் ஒப்படைக்காமல் இது போல் செய்வது படிச்ச முட்டாள்

 3. குடும்ப வாழ்க்கை பிடிக்கவிட்டாலும் நல்ல
  ஒரு டாக்டர் என்று பேர் வாங்கி ஏழை,எளிய
  மக்களோடு,தன் மகனையும் வளர்த்து
  ஆழாக்கி இருக்கலாமே.துணிவு இல்லாமல் டாக்டர் படிப்பு எதுக்குதானோ.

 4. ஒரு வினாடியின் துக்கவேதனையில் தூக்கிடும் செயலுக்கு முன்பு சிந்தித்தால்
  சாவினை தடுக்கலாம்.அன்பானவர்களை க்
  கண்டு பிரச்சனையைப் பேசி தீர்த்தால் அநியாயமாக இந்த மரணம் நடந்திருக்காது.
  து .சேரன்
  ஆலங்குளம்

 5. படித்ததும் கண்கள் குளமாயின.பலருக்கு ஆலோசனை வழங்கும் டாக்டர்கள் ஏன் தங்களுடைய வாழ்க்கையில் அவற்றை கடைபிடிக்க தவறிவிடுகிறார்கள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு... (லாட்டரிச் சீட்டு இல்லீங்க.... இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா! ************** கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண...

ஒரு வார்த்தை!

இன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், “என்னோட ஹப்பி, என்னை ‘caring’ஆ பார்த்துக்கணும்... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும்... என் மேல...