வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on
மங்கிய துணிகள்? என்ன செய்யலாம்?

டுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பெரிய துண்டுகள் இவற்றை மிதமான சுடுநீரில், கால் பாகம் வாஷிங் சோடாவும், முக்கால் பாகம் சோப் பவுடரும் போட்டு ஊறவைத்து துவைத்தோமானால், துணிகள் பளிச்சென்று இருக்கும். துணிகளும் சாயம் போகாது.
-வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்.

ஸ்விட்ஸர்லாந்தின் டைம் வங்கி

பெயரே அதிசயமாகத் தோன்றுகிறதா? இது என்ன டைம் வங்கி (Time Bank)?
ஸ்விட்ஸர்லாந்தின் இளைஞர்களும், ஆரோக்கியமானவர்களும், தங்களுடைய ஓய்வு நேரத்தில் உடல் நிலை குன்றியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்கிறர்கள்.

இந்த உதவிக்கு அவர்கள் ஊதியம் பெறுவதில்லை. ஒவ்வொருவரும் டைம் வங்கியில் தங்கள் பெயரில் கணக்கு வைத்திருக்கிறார்கள். எவ்வளவு மணி நேரம் உதவி செய்தார்கள் என்று கணக்கிட்டு டைம் வங்கியில் அவர்கள் கணக்கில் சேர்த்து விடுகிறார்கள்.

பல வருடங்களாக இந்த நேரம் சேர்ந்துக் கொண்டே வருகிறது. இவர்களுக்கு உடல் நிலை கெட்டாலோ, வயது காரணமாக வேலை செய்ய முடியாமற் போனாலோ, இந்த டைம் வங்கிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தால் போதும் . அவர்கள் உடனே உதவியாளர்களை அனுப்புகிறர்கள் .

அவர்களுக்கு ஊதியம் கொடுக்கத் தேவையில்லை. இவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து உதவி செய்த மணி நேரத்தை கழித்து விடுகிறார்கள் . வயதான , பணவசதி இல்லாத முதியவர்களுக்கு இது பெரிய வரப்ரசாதமாகும். என்ன அற்புதமான வங்கி!
-பானு சந்திரன், சென்னை

கொள்ளு பருப்பின் மருத்துவக் குணங்கள்

கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்பிற்கு உண்டு. கொள்ளை ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம் . கொள்ளுப் பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கொள்ளு பருப்பை அரைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் போட்டால் அருமையான சுவையுடன் ரசம் இருக்கும்.

கொள்ளு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர மாதவிடாய் போக்கயும் சரி படுத்தும். எனவே பெண்கள் இதை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
– ஏ.ஸ் .கோவிந்தராஜன்

நவ குஞ்சரம் தெரியுமா?

காபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம்.

ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் உடல், பாம்பாக வால், மான் மற்றும் புலியின் பின்னங்கால்கள், யானை மற்றும் மனிதனின் கை கொண்ட முன்னங்கால்கள் கொண்ட விலங்கு எப்படி இருக்கும்? அதுதான் நவகுஞ்சரம்.

'நவ' என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.

ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் மலை மீது தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியதாக அதில் வருகிறது.

தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜுனன் முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார். பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.

வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து அர்ஜுனன், கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் நினைவு கூர்ந்தார்.
மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது ஏன்பதுதான் அது. அதனால் இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்று நினைத்தார். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.

ஒடிசாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

ஒடிசாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது. நவகுஞ்சரத்தின் உருவம் பூரிகோயிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச் சக்கரம் பூரி கோயில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
-ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

கிருஷ்ணனை நீ அனுபவித்தால்…

நீ கிருஷ்ணனை கர்ப்பத்தில் அனுபவித்தால் உன்னை தேவகிக்குப் பிடிக்கும்!
நீ கிருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால் உன்னை யசோதைக்குப் பிடிக்கும்!
நீ கிருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால் உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும்!
நீ கிருஷ்ணனை தகப்பனாக அனுபவித்தால் உன்னை ருக்மிணிக்கு பிடிக்கம்!
நீ கிருஷ்ணனை ராதிகா தாஸனாக அனுபவித்தால் உன்னை கிருஷ்ணனுக்குப் பிடிக்கும்!
-எஸ். ஸ்ருதி, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com