0,00 INR

No products in the cart.

வளர்ப்பில் உள்ளது சூட்சுமம்!

-சேலம் சுபா

ந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே
சமீபத்தில் என் காதுக்கு வந்த விஷயம் ஒன்று மனதை வேதனைக்குள்ளாக்கியது. பள்ளிமாணவன் ஒருவன் தன் சகதோழனை கத்தியால் குத்தியிருக்கிறான். சிகிச்சை பலனின்றி அந்த தோழன் இறந்தும் விட்டான் .இதற்கு காரணம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என்ற ஆத்திரம் கொலை செய்யுமளவுக்கு அவனைத் தூண்டியுள்ளது.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, நமக்குத் தெரியாமல் எத்தனையோ வன்முறை நிகழ்வுகள் இளம் சிறார்களிடையே நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம்? இளம் வயதிலேயே இம்மாதிரி குற்றங்களை செய்யத் தூண்டியது யார் அல்லது எது ? விடை அறிய எங்கள் பகுதி பெண்களிடையே சிறு கலந்துரையாடல் செய்தோம். அத்தனை பேரும் சுட்டிக் காட்டியது தொலைக்காட்சி, சினிமா செல்போன்களைத் தான்.

வன்முறைகளை சரியென்று காட்டும் சினிமாக் காட்சிகளும் வீடியோ விளையாட்டுகளும் உண்மையில் ஒருபுறம் பிள்ளைகளின் மனதில் விஷவிதைகளைத் தூவிச் செல்கிறது என்றாலும் முழுமையாக அவைகள் மட்டுமே காரணம் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை .

நம் ரத்தத்தில்உருவாகிய பிள்ளைகளின் ஒழுக்கம் நம் வளர்ப்பினிலே தான் உள்ளதே தவிர மாயபிம்பங்கள் முழுக்க காரணமாக முடியாது என்பதே என் கருத்து. மண்ணில் பிறக்கும் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாகத்தான் பிறக்கிறது. அவர்கள் நல்லவராக்குவதும் தீயவராக்குவதும் பெற்றோர் வளர்ப்புதான் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்தப் பெற்றோராவது தன் பிள்ளை தீயவனாவதை விரும்புவாரா ? என்று நீங்கள் முகஞ்சுளிப்பது தெரிகிறது. நாம் சரி என்று செய்யும் செயல்களும் ஒரு காரணமாகும் என்றுதான் கூறுகிறேன்.

உதாரணமாக இந்த அவசர காலத்தில் நாம் அனைவருமே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அல்லது கைகளில் இறக்கை சுமந்து பொருளாதார தேவைகளுக்காக பெற்ற குழந்தையையும் அதன் நலனையும் கருத்தில் கொள்ளாது ஓடியாடி பொருள் சேர்த்து பிள்ளைக்காக சொத்துகளை வாங்கி குவித்துவிட்டு நிமிரும்போது அவன் உங்கள் கண்டிப்பும் கவனமும் இன்றி தடம் புரண்டு போயிருப்பதை அறிந்து செய்வதறியாது வருந்தும் நிலைதான் இன்று பல வீடுகளில்.

இதற்கு என்ன காரணம்?
தன் தொடர்பாக இங்கு இன்னும் ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஒரு இளம்பெண் திடீரென மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தாள். காரணம் ஐடி வேலையில் இருக்கும் அப்பெண்ணின் மூன்று வயதுப் பிள்ளை செய்யும் குறும்புகளைத் தாங்க முடியாமல் டென்சனாகி பாதிக்கப்பட்டதாக சொன்னார்.

மருத்துவரின் ஆலோசனையில் இப்போது அந்தப் பெண் தான் பார்த்த வேலையை தற்காலிகமாக விட்டு விட்டு தன் குழந்தையின் குறும்புகளை பொறுமையுடன் ரசிக்கப் பழகிவிட்டாள். இவள் ஒரு சான்றுதான் .

பல இளம் பெண்கள் தங்கள் குழந்தை செய்யும் குறும்புகளை ரசித்து அவர்களின் சந்தேகங்களைப் போக்க சோம்பல் பட்டு அவர்கள் கையில் நொறுக்குத் தீனி சகிதம் ஒரு டேப்லட் தந்து இவர்கள் செல்போனில் மூழ்குகிறார்கள்.

வீடியோ கேம் பார்த்த படியே தூங்கிப்போகும் குழந்தைகளின் மனதில் விளை யாட்டுகளின் வன்முறை காட்சிகள் பதிந்து விடுகிறது. அதிலும் இப்போது பெருந்தோற்று காலத்தில் கட்டாயம் செல்போன்கள்தான் குழந்தைகளின் பெரும்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றன.

வேலைக்குப் போகும் பெண்கள் இப்படி என்றால், தொலைக்காட்சி சீரியல்களை ரசிக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் உயிரைக்கொடுத்து படிக்கும்போது கூட சீரியல்களில் யாரோ உயிரை விடும்(?)காட்சியில் மூழ்கி முத்தெடுப்பார்கள்.

இப்படி வளரும் பிள்ளைகள் பெரியவனாகும் போது செல்போன் தொலைக்காட்சி அதிகம் பார்க்காதே, எனும் பெற்றோர் அறிவுரையை எதிர்க்கத் துவங்குவார்கள். முதலில் பிள்ளைகளுக்கு பெற்றோரே முன்மாதிரியாக இருக்க பழக வேண்டும் .நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நம் செயல்களே நல்லதை கற்றுத்தர வேண்டும்.

ப்போது சொல்லுங்கள் பிள்ளைகள் கெட்டுப்போக ஜடப்பொருளான டிவியும் போனும் காரணமா அல்லது அவர்களுக்கு இவற்றை ரசிக்க கற்றுத் தந்த நாம் காரணமா ? இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் … டி.வி.யோ, செல்போனோ நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்ட இக்காலத்தில் முற்றிலும் அவற்றை நம்மால் தவிர்கவே முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால், இவைகள் எல்லாமே பொய்யாக ஜோடிக்கப்பட்ட காட்சிகள் என்பதையும் நிஜ வாழ்வு வேறு என்பதையும் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே புரிய வைக்க வேண்டும். “காசுக்காகவே ரத்தம் சிந்துகிறார்கள், சிந்த வைக்கிறார்கள்,” என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். நன்மை தீமையை பகுத்து அறிய கற்றுத் தரவேண்டும்.

அவற்றில் எது சரி தவறு என்பதை அவர்களுக்கு நல்ல தோழனாகவும் தோழியாகவும் மாறி நகைச்சுவையாக பகிர்ந்து கொள்வது நல்ல பலனைத்தரும் . அதே நேரத்தில் அவர்களைக் கண்காணிக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்று அளவுக்கு மீறிய செல்லம் தந்து பின் அவதிப்படுவோர் அநேகர் . பிள்ளைகளை கண்டிக்கும் உரிமை நம்மிடம் இருக்கு . கண்டிப்பது தவறு என்றால் அவன் தவறு செய்து விட்டு சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனிவதும் பெற்றோரே என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும் . நீங்கள் அன்றே என்னை கண்டித்து வளர்த்திருந்தால் நானும் உங்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்திருப்பேன் என்று பிள்ளைகள் நம்மைக் குற்றவாளியாக்குவதை தவிர்க்க ‘தவறு’ என்று தெரிந்தால் கண்டித்து வளர்ப்பதில் தவறே இல்லை என்பது என் கருத்து.

ஆகவே, பிள்ளைகள் நல்லவராவது நம் வளர்ப்பில்தான் உள்ளது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து நம் கடமையை செய்தால் நல்ல பிள்ளைகளுடன் வீடும் நாடும் நிம்மதியாக இருக்கும்.

 

 

2 COMMENTS

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

முத்துகள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் விருது பெற்ற கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 25 வயது வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வழங்கப்பட்டுள்ள 2021 ஆம்...

இதற்காகவா ஒரு கொலை – 4?

0
-ஜி.எஸ்.எஸ்.  டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் வசித்து வந்தது அந்தக் குடும்பம். இருபத்தி இரண்டு வயதான சிம்ரன் என்ற அந்த குடும்பத் தலைவி மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.  அவள் கணவனின் வியாபாரம் நொடித்து...

மகா பெரியவர் – எம்.ஜி.ஆர் சந்திப்பு

படித்ததில் பிடித்தது! -சுந்தரி காந்தி, சென்னை காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அவர் வந்ததால் காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலைந்தனர். அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் சந்திரசேகர...

கவிதைத் தூறல்!

0
- நிலா, திருச்சி பொட்டு இரவென்னும் கறுப்பழகி வான நெற்றியில் வைத்துள்ளாள் நிலவென்னும் பொட்டு! ......................................... அனாதை தாத்தாவின் மரணம்; அனாதையானது கைத்தடி! ......................................... ஞாபகம்             அப்பா இறந்த பின் தனியாளாய் நின்று குடும்பத்தை நடத்திய அம்மாவை நினைவூட்டுகிறது; அந்த தூரத்து ஒற்றைப் பனை! ......................................... இன்னொரு கண்           ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ஆயிரத்தி ஒன்றாம் கண்ணாய் பொருத்தப்பட்டது சி.சி.டி.வி. கேமரா! ......................................... பூக்கள் மழை பெய்ததும் தார் சாலையில் பூக்கத் துவங்கின குடைப் பூக்கள்!

கல்லாதது கடலளவு!

மினி தொடர் - 4 - நாராயணி சுப்ரமணியன் எத்தனை மீன் இனங்கள் கடலில் இருக்கின்றன? இந்த பூமியில் மொத்தம் 28,000 மீன் இனங்கள் உண்டு என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். குருத்தெலும்பு மீன் இனங்களான சுறா, திருக்கை...